மறுபடியும் மறுபடியும்! Part 3 57

“ஹலோ” என்றாள்..

“ம்ம்.. எஸ் தேன்மொழி.. உன் வாய்ஸ் கூட உன் பேர்ல இருக்குற ஹனி மாதிரி இனிக்குது.. உன் ஃபோட்டாவ வீட்டுல அம்மா காட்டினாங்க.. நீ ஃபோட்டால அவ்வளவு அழகா இருக்க. நேர்ல பாக்கனும் ரொம்ப ஆசையா இருக்கு.. உன்ன எப்போ பாப்பேன் ரொம்ப எக்ஸ்சைட்டா இருக்கேன்.. ஐயம் ஃபீல் சோ லக்கி.. உன்ன மாதிரி அழகான பொண்ணு எனக்கு ஆத்துக்காரி வரதுக்கு..” என பேசிக் கொண்டே இருந்தவன் திடீரென தேன்மொழி என்றான்.. மறுமுனையில் இருந்து

“ம்ம் சொல்லுங்க..” என்றதும்

“இல்ல ரொம்ப காம் இருந்ததுனால நீ லைன் இருக்கியா செக் பண்ணேன்” சொன்னதும் தேன்மொழிக்கு சில நிமிடங்களுக்கு முன் அவன் மேல் இருந்த மரியாதை கொஞ்சம் குறைய ஆரம்பித்தது.. இருந்தாலும் அவள்

“அப்படியெல்லாம் இல்ல. நீங்க பேசிட்டு இருந்ததுனால தான் நா எதுவும் பேசல..” என்றாள்.

“ஓ.. தட்ஸ் குட்.. திஸிஸ் குட் ஹேப்பிட்..”

“ம்ம்..”

“நீ ஏதாவது பேசு ஹனி.. நீ தான கால் பண்ண நா பேசிட்டு இருக்கேன் பாரு..” சொன்னதும் அவள்

“அப்பாடா இப்பவாச்சும் சான்ஸ் குடுத்தானே” மனதுக்குள் சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.. அவள் பேச ஆரம்பிக்கும் முன் திரும்பி அவனே

“ஹனி உனக்கு என்ன பிடிச்சிருக்குல.. என் ஃபோட்டால உன்கிட்ட காட்டுனாங்கள.. உனக்கு ஓகே தான மறுபடியும் அவளை பேச விடாமல் இவனே பேச்சை ஆரம்பித்து பேச ஆரம்பித்துவிட்டான்.. இவளுக்கு ‘ச்சை’ போனது..”

“கால் பண்ணது நாம ஆனா இவனோ நம்மள பேச விடாம ஜொல்லு விட்டு அவனே பேசிட்டு இருக்கான்” கடுப்பில் இருந்தாள்.. அந்த பக்கம் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தான்.. இவளும் தொடர்ந்து பொறுமையாக இருந்தாள். ஒரு கட்டத்திற்கு அவள் பொறுமையிழந்து அவனிடம்

“ஹலோ நா கொஞ்சம் பேசலாமா?” என கேட்டுவிட்டாள்..

“யா.. ஷியர் ஹனி.. யூ டாக் எனிதிங் ஐயம் ரெடி டு ஹியர்…”

“ஓகே தாங்க்ஸ்..”

“நா கேக்குற சில கேள்விக்கு உண்மையான பதில் சொல்லனும் ஓகே வா..?”

“யா ஷியர் ஹனி.. யூ ஆஸ்க்..?”

“பர்ஸ்ட் நாம ரெண்டு பேரும் ஒரே நாள்ல சில மணி நேர வித்தியாசத்துல பிறந்திருக்கோம்.. அது தெரியும் நெனக்கிறேன்..”

“ஓ.. அப்படியா?” அவன் சொல்ல

“ஹலோ என்ன அப்படியா கேக்குறீங்க? அப்ப தெரியாத?”

“நோ ஹனி.. என் ஜாதகத்துக்கு உன் ஜாதகம் மேட்ச் ஆனதும் உன் ஃபோட்டா மட்டும் காட்டுனாங்க.. அவ்வளவு தான்..”

“சரி ஏதாவது டிப்பரன்ட் ஃபீல் பண்றீங்களா? ஐ மீன் அன்கம்போர்ட்டெபிலா?”

“இல்லையே நார்மலா தான் இருக்கேன்.. ஏன் கேக்குற ஹனி? உனக்கு ஏதாவது ப்ராப்ளமா?”

“ஆமா.. ஆனா எப்படி சொல்றது தெரியல?”

“இட்ஸ் ஓகே.. நோ ப்ராப்ளம்.. சும்மா சொல்லு..”

“அடிக்கடி தூக்கதுல கனவா வருது? அதும் இன்னிக்கு தான் இப்படி இருக்கு..? ஏன் தெரியல?”

“ஏய் ஹனி திஸிஸ் நோச்சுரல்.. சிலருக்கு தூங்கும் போது கனவு வரும்.. அதனால என்ன ப்ராப்ளம் உனக்கு?”

“எப்படி அத சொல்லுவேன்?” அவளின் மனகுமுறலை சொல்லிக் கொண்டிருக்க

“உன் வாயால தான்” அவன் கிண்டல் பண்ண

“ஹலோ இங்க நா என் ப்ராப்ளம் சொல்லிட்டு இருக்கேன்.. கொஞ்சம் கூட புருஞ்சுக்காம கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க..”

“ஏய்.. சாரி ஹினி.. யூ கன்டியூ..”

“உங்களுக்கு கனவு மாதிரி ஏதாவது அடிக்கடி வருதா?”

“யூ மீன் டீரிம்..”

“ஆமா.. கண்ண மூடினாலே வந்திடுது.. என்ன பண்றது தெரியல?”

“ஓ.. ஐ.. சி..”

“எந்த மாதிரி டீரிம்?”

“அடுத்த நடக்க போற இன்சிடன்ட் எனக்கு டீரிமா வருது?” சொல்ல அந்த பக்கம் இருந்த வெங்கட்க்கு ஒரு வினாடி அதிர்ச்சி

“வாட்.. ஏய் என்ன சொல்ற நீ? அகேன் சொல்லு..”

“இனி நடக்க போற இன்ஸிடன்ட் எல்லாம் எனக்கு டீரிம்ல வருது.. அதும் அடுத்தவங்க அடுத்து என்ன என்ன பண்ண போறாங்க முன்னாடியே எனக்கு கனவுல தெரியுது.. டுடே ஃபுல்லா ரொம்ப டார்சரா இருக்கு.. இதுக்கு ஏதாவது பரிகாரம் இருக்கானு என் வீட்டுக்கு வரும் போது பாத்திட்டு வாங்க பிளீஸ்.. என்னால முடியல?” தேன்மொழி சொல்ல
இங்கு வெங்கட்