28 வயது அழகுப் புயல் – பாகம் 30 168

காமினிக்கு அவன் டி போட்டு பேசியது பிடித்திருந்தது. வந்து தொலை…! என்றாள்.

கார் மோகனின் வீட்டுக்குள் நுழைந்தபோது சீனு நிஷாவை நினைத்து கனவு கண்டுகொண்டிருந்தான். முன்னாடியே தெரிஞ்சிருந்தா கூலிங்க் க்ளாஸ் எடுத்துட்டு வந்திருப்பேனே…. என் தேவதை இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள்? அவளோடு பேச முடியுமா?

சீனு… விளையாட்டுத்தனமா அங்க இங்கன்னு வேடிக்கை பார்க்காம ஒழுங்கா என்கூட நிற்கணும். ஸாரோட மருமகன் லண்டன் போயிருக்கறதால, பொண்ணு நிஷா இங்கதான் இருக்காங்களாம். நீ பாட்டுக்கு அவங்களை பார்த்து ஆஆன்னு வாயை திறந்துக்கிட்டு நின்னுட்டிருக்காதே. உன் சீட்டு கிழிஞ்சிடும்.

டோன்ட் வொரி மேம். என்னையெல்லாம் அவங்க முதல்ல மதிப்பாங்களா என்ன?

சிறிது நேரத்தில் காமினியும் சீனுவும் மோகனின்முன் நின்றார்கள்.

ஸாரிம்மா உன்ன அலையவச்சிட்டேன்… என்றார்

பரவாயில்ல ஸார்

உன்கிட்ட கேட்டுட்டு சைன் பண்ணணும்னுதான் இதையெல்லாம் பெண்டிங்ல போட்டு வச்சேன்

பத்மா… என்று உள்ளே பார்த்து குரல் கொடுத்துவிட்டு அவர் சைன் போட ஆரம்பித்தார். அவர் ஒவ்வொரு சைன் போடும்போதும் காமினி அவருக்கு அந்தந்த விவரங்களை பொறுமையாக விளக்கி விளக்கி சொல்லிக்கொண்டிருக்க… போன் பேசுவதுபோல் சீனு அங்கிருந்து நழுவினான். ஏன் இவளுக்கு போனே போகமாட்டேங்குது? என்று நினைத்துக்கொண்டே டயல் பண்ணிக்கொண்டு நடக்க, திடீரென்று நிஷா அவனை தன் ரூமுக்குள் இழுத்து கதவை அடைத்தாள்.

சீனு… இங்க என்ன பண்ணுற?

அவள் ஆச்சரியத்தில் கண்கள் விரியப் பார்க்க…. சீனு அவளை இழுத்து அணைத்துக்கொண்டான். நிஷா சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனாள்.

உன்ன பாக்குறதுக்குதாண்டி காமினி மேம்கூட வந்தேன். சைன் வாங்கிட்டிருக்காங்க. உன் போனுக்கு என்னாச்சு காலைலேர்ந்து நாட் ரீச்சபிள்னே வருது… ஸாரி குட்டிமா நேத்து நான் இருந்திருந்தா அவனை தப்பிச்சிப்போக விட்டிருக்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டே சீனு ஆறுதலாக அவள் கண்ணத்தில் முத்தமிட…. அவளுக்கு கண்கள் கலங்கின.

அவனை கொல்லாம விடக்கூடாது நிஷா…. ராஸ்கல் என் தேவதை மேலயே கை வைக்க நெனச்சிருக்கான்! என்று கொதித்தான்.

8 Comments

  1. அருமையான கதை நீண்ட தொடறாக
    எழுதவும். அருமை

  2. Quick shot but good shot,,,

  3. Wow.. what a wonderful short… shot..

  4. This is difference if Kamini and Nisha…

  5. வீணாவும், காயுவும் சேர்ந்துட்டாங்களா!! அப்ப சீனுவுக்கு கொண்டாட்டம்தான்!!!!!.

  6. 31 அடுத்த கதையை சீக்கிரம் போடுங்கள்

  7. Superb bro, vera level vera level..Kamini Seenu potta vitham sema..unexpected..Kindly don’t stop this story go lengthy…definitely u can go more than 100 parts..eagerly waiting for next part bro…verithanama irukku bro..keep going…

Comments are closed.