28 வயது அழகுப் புயல் – பாகம் 30 169

சொல்லிவிட்டு வேகமாக கேபினுக்கு வெளியே வந்தாள்.எல்லோரும் எழுந்து நின்றார்கள். மறக்காம ஈமெயில் பண்ணிடுங்க.. I have to check என்று அவர்களிடம் சொல்லிவிட்டுப் பறந்தாள்.

அன்று இரவு –

ராஜ்ஜும் மலரும் சென்னை ஏர்போர்ட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அவர்களை வரவேற்க காத்திருந்த மோகனும் நிஷாவும் உற்சாகத்தில் கை காட்டினார்கள். மோகன் அந்த ஜோடியை புன்னகையோடு பார்த்துக்கொண்டிருக்க…. நிஷாவும் மலரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக்கொண்டனர்.

மலருக்கு பெண்களே பொறாமைப்படும் அளவுக்கு நீண்ட கூந்தல். அளவான உடம்புடன் ராஜ் அளவுக்கு நல்ல உயரமாக இருந்தாள். ஜீன்ஸ் டாப்ஸில் இளமை ததும்பும் அழகான தோற்றம். கழுத்தில் சின்னதாய் ஒரு தங்கச் செயின். கொலுசு மாதிரி….மெல்லியதாய் ஒரு anklet ஒரு காலில் மட்டும் போட்டிருந்தாள். மூக்கும் முழியுமாக களையாக இருந்தாள். முகத்தில் எப்போதும் ஒரு துறுதுறுப்பு.

அண்ணி… இந்த ட்ரஸ்ல சூப்பரா இருக்கீங்க

தேங்க் யூ நிஷா. பட் என்னைவிட நீங்கதான் அழகு

பரவால்லயே… பெருந்தன்மையா புகழ்றீங்களே.

உங்க அண்ணன் உங்களைப் பற்றி நிறைய சொல்லியிருக்கார். எப்போ பார்த்தாலும் நிஷா நிஷா

என்கிட்டே எப்போ பார்த்தாலும் மலர் மலர். நீங்க ரெண்டு பேரும் மீட் பண்ணவே முடியாத அளவுக்கு பிஸியா இருந்தீங்களாமே

அ…ஆமா. அவருக்கு அவர் வேலை. எனக்கு என் வேலை – மோகன் அருகிலிருந்ததால் மலர் நெளிந்தாள்.

ராஜ் மலரின் காதுக்குள் கிசுகிசுத்தான். அவளுக்கு நாம தினமும் மீட் பண்ணது தெரியும். என்கிட்ட ஆல்ரெடி போட்டு வாங்கிட்டா

மலர் நிஷாவைப் பார்க்க முடியாமல் தலையை குனிந்துகொண்டாள். மாமனார் மோகனைப் பார்த்து கைகூப்பி வணக்கம் வைத்தாள். கரண்டைக்காலுக்கும் கொஞ்சம் மேலே வரை மட்டுமே இருந்த slim fit ஜீன்ஸை போட்டுக்கொண்டு வந்திருக்காமல் வேறு ட்ரெஸ்ஸில் வந்திருக்கலாமோ என்று கால்களை நெருக்கி வைத்துக்கொண்டு அடக்கமாக நிற்க முயன்றாள்.

காருக்குள் ஏறும்போது நிஷா சொன்னாள். அப்பா… மருமக வேணும். மருமக வேணும்னுதானே சொல்லிட்டிருந்தீங்க. அண்ணியை வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடலாம். இவனை மும்பைக்கே அனுப்பிடலாம். அங்க வேலை கிடக்குல்ல

ராஜ் நீ கிளம்புப்பா – அவர் சட்டென்று சொன்னார்.

அப்பா…! – ராஜ் அவரைப் பார்த்து முறைத்தான்

அவனைத்தவிர அவர்கள் மூவரும் சிரிக்க… பின்னால் மலரின் தொடையில் கைவைத்து தாளம்போட்டுக் கொண்டிருந்த ராஜ், முன் சீட்டில் இருந்த நிஷாவின் தலையில் கொட்டினான்.

ஆஆஆ… அப்பா பாருங்கப்பா

டேய்….. நல்லா வலிக்கிற மாதிரி கொட்டமாட்டியா

இப்போது நிஷா அவரைப் பார்த்து முறைத்தாள். வீட்டுக்கு வாங்க அம்மாகிட்ட சொல்லி பட்டினி போடுறேன்…

டோன்ட் வொரி Dad. இவங்க பட்டினி போட்டா என்ன? மலர் நமக்கு சாப்பாடு போடுவா. என்ன மலர்?

எந்த ஹோட்டல்லேர்ந்து வாங்கிப் போடணும் ராஜ்?

அப்படிக் கேளுங்க அண்ணி

இப்போது நிஷாவும் மலரும் சிரித்தார்கள்.

8 Comments

  1. அருமையான கதை நீண்ட தொடறாக
    எழுதவும். அருமை

  2. Quick shot but good shot,,,

  3. Wow.. what a wonderful short… shot..

  4. This is difference if Kamini and Nisha…

  5. வீணாவும், காயுவும் சேர்ந்துட்டாங்களா!! அப்ப சீனுவுக்கு கொண்டாட்டம்தான்!!!!!.

  6. 31 அடுத்த கதையை சீக்கிரம் போடுங்கள்

  7. Superb bro, vera level vera level..Kamini Seenu potta vitham sema..unexpected..Kindly don’t stop this story go lengthy…definitely u can go more than 100 parts..eagerly waiting for next part bro…verithanama irukku bro..keep going…

Comments are closed.