28 வயது அழகுப் புயல் – பாகம் 2 97

இவன் திரும்பி Bye சொல்லும்போது ஸ்கூட்டி சீறிப் பறந்துகொண்டிருந்தது.

பார்வதிக்கு ஆச்சர்யமாகிப் போனது. இவன் சீனுதானா என்று. சதா ஏதாவது வரைந்துகொண்டும், படங்கள் பார்த்துக்கொண்டும், மொபைலை நோண்டிக்கொண்டும் அல்லது வெட்டி பசங்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிக்கொண்டிருந்தவன் இப்போது பொறுப்பாக வேலை தேட ஆரம்பித்துவிட்டானே என்று. ஒரு வாரத்தில் இரண்டு இன்டர்வியூ. செலக்ட் ஆகவில்லை. இருந்தாலும் அவளுக்கு கவலை குறைந்திருந்தது. ஸ்கூலிலிருந்து வந்து வீட்டுக்குள் நுழைந்த நிஷாவைப் பார்த்து ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் கண்ணு என்றாள். பரவால்லக்கா… சீனுவை வரச்சொல்லுங்க ஒரு சின்ன வேலையிருக்கு….

இதோ இப்பவே வர சொல்றேன்.

அவளைப் பார்க்கும் ஆவலில் பிரகாசமாக வந்து நின்றான் சீனு.

உட்காருடா… காஃபி டீ ஏதாவது குடிக்கிறியா?

இப்போதான் அம்மா கொடுத்தாங்க. என்ன வேலைன்னு சொன்னீங்கன்னா…

ம்.. சொல்றேன். ஒழுங்கா பிரிபேர் பன்றியா?

பண்றேங்க்கா….

அப்போது கண்ணனிடமிருந்து போன் வந்தது.

என்னடி… என்ன பண்ணிட்டிருக்கே

காஃபி போட்டுட்டிருக்கேன். இந்த ஸாரிய ட்ரை கிளீனிங்க்கொடுக்கணும்னு எத்தன நாளா சொல்லிட்டிருக்கேன். இப்போ பாருங்க நாளைக்கழிச்சு நான் க்ரீன் கலர் ஸாரிலதான் போயாகனும். உங்ககிட்ட சொல்லி சொல்லி ஓஞ்சு போயிட்டேன்

வீட்டுக்கே வந்து எடுத்துக்க சொல்லியிருந்தேனே… சரி சரி நாளன்னைக்கு வேற ஸாரி கட்டு. இல்லைனா தம்பி சீனிவாசன அனுப்பு.

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *