வாசமான ஜாதிமல்லி – பாகம் 5 49

“ஏன்? நாம பேச மாற்று விவாதிக்க வேண்டிய விஷயத்துக்கு இது பொருத்தமான இடம் இல்லையா?”

இதற்கு முன்பு எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன் என்பதை வலியுறுத்துவதற்காக, மற்றும் முன்பு சத்தியம் செய்தபடியே எந்த காரணத்துக்கும் அவன் மனைவியைப் பார்க்கவோ அல்லது பின்தொடரவோ கூடாது என்று அவனுக்கு தெளிவாக எச்சரிக்கை செய்யா சரவணன் தன்னை இங்கு அழைத்து வந்திருக்கான் என்று பிரபு நினைத்தான்.

“நான் உனக்கு செய்தே துரோகத்துக்கு நான் எவ்வளவு வருந்துகிறேன் என்று சொல்ல முடியாது சரவணா. எப்படி இருந்தாலும் அது மன்னிக்க முடியாத செயல் என்று எனக்குத் நல்ல தெரியும். ஆனால் நான் உன்னிடம் சத்தியம் செய்தபடியே, நான் உன் மனைவியைச் சந்திக்க மாட்டேன் அல்லது அவளுடன் மீண்டும் எந்தவிதமான தொடர்பையும் ஏற்படுத்த முயற்சிக்க மாட்டேன். என்னை நம்பு”

நான் இதை பற்றி தான் பேச வந்தேன் என்று நினைச்சியா? அது சரியான யூகிப்பு இல்லை ‘நண்பன்’ என்று அழைக்கப்படும் ஆளே என்று சரவணன் தனுக்குள் நினைத்துக் கொண்டான்.

“ஹ்ம்ம் அனால் மீரா உன்னை தொடர்பு கொண்டால், நீ என்ன செய்வ?”

இந்த கேள்வியை கேட்டு பிரபு அதிர்ச்சியடைந்தான். பிரபு அப்படியே திடுக்கிட்டான். ஒரு கணம் என்ன சொல்வது என்று தெரியவில்லை.பின்னர் அவர் தன்னை ஓரளவு அமைதி படுத்திக்கொண்டான்.

“தயவுசெய்து சரவணா அவளை இனி சந்தேகபட வேண்டாம் என்று சொன்னேன். அது அவளுடைய தவறு அல்ல. நான் தான் அவளை தொடர்ந்து பின்தொடர்ந்தேன், அவளது பலவீனத்தை, அவளை கவர்ந்திழுக்க பயன்படுத்தினேன். அவள் உன்னை மிகவும் நேசிக்கிறாள். அவள் இனிமேல் இந்த மாதிரியான விவகாரத்தில் ஈடுபட மாட்டாள்.”

கடைசியாக அவர்கள் சந்தித்தபோது, அவன் மன்னிப்பு கேட்கவும், அவர்களின் வாழ்க்கையில் இனி எப்போதும் குறுக்கிட மாட்டேன் என்று சத்தியம் செய்ய வந்த போது அவன் பேசிய வார்த்தைகளை பிரபு மீண்டும் எதிரொலித்தான். சரவணன் அவன் முகத்தை எதோ யோசித்துக்கொண்டு பார்த்தான்.

“சரி, நான் உன்னிடம் ஒன்னு கேட்கிறேன், எனக்கு ஒரு நேர்மையான பதில் வேண்டும். முன்பு போல இல்லை இப்போ நான் உன்னை நன்றாக படிக்க முடியும். நீ பொய் சொன்ன எனக்கு தெரிந்திடும். நீங இன்னும் மீராவைப் பற்றி நினைக்கிறீயா? உனக்கு இன்னும் அவள் மேல் ஆசை இருக்கா?”

இந்த கேள்வியை பிரபு கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இந்த கேள்விக்கு அவன் தயாராக இல்லை. அவனின் அதிர்ச்சியும் முகத்தில் உணர்ச்சியின் வெளிப்பாடும் அவனை காட்டிக்கொடுத்தது. அவன் பொய் சொல்ல முயன்றால், சரவணனுக்கு உடனே தெரியும் என்று அவருக்குத் புரிந்தது.

சரவணன் நான்….,” அவனுக்கு எப்படி மேலும் செல்ல வேண்டும் என்று தெரியவில்லை.

“பரவாயில்லை என்னிடம் உண்மையைச் சொல்லு. இதற்கு முன்பு நீ என் வீட்டிற்கு அடிக்கடி வந்த உன் உண்மையான நோக்கத்தை மறைத்தது போல வேண்டாம். ”

2 Comments

  1. Super Saravana…

  2. சூப்ப்ர்ஹீரோ

Comments are closed.