வாசமான ஜாதிமல்லி – பாகம் 5 49

“சரவணா, நான் உன்னைப் பார்க்க வரலாமா?”

“நான் உன்னை அழைக் நினைத்தேன் அனால் நீ என்னை முதலில் கூப்பிட்டுவிட்டாய். சரி சந்திக்கலாம். நான் உன்னிடம் பேச வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ”

“எனக்கும் அதே தான் சரவணா, நாம எங்கே சந்திப்போம்?”

“பழைய கோவிலுக்கு முப்பது நிமிடங்கள்லில் வந்துடு.”

“இல்லை, சரவணா, ஏன் அங்கே. வேறொரு இடத்தில் சந்திப்போம்.” சரவணனின் மனைவியுடனான தனது விவகாரம் பற்றி அவன் தந்தை முதலில் கண்டுபிடித்த இடத்திற்கு செல்வது பிரபுக்கு பிடிக்கவில்லை.

“இல்லை, நான் உன்னிடம் பேச வேண்டிய சரியான இடமாக அது தான்” என்று சரவணன் சொல்லி தொலைபேசியை துண்டித்தான்.

அவர்கள் கள்ள உறவு முடிந்து போக காரணமான இடத்தில் அவன் இப்போது பேச வேண்டியதை பேசுவத்துக்கு சரியான இடம் என்று சரவணன் முடிவு எடுத்திருந்தான்.

சரவணனின் கார் பழைய கோயில் மைதானத்தை அடைந்தபோது, பிரபுவின் மோட்டார் சைக்கிளை ஏற்கனவே அங்கே நிறுத்தி வைத்திருப்பதைக் காண முடிந்தது. அதே மோட்டார் சைக்கிள். அவன் அதை இன்னும் விற்கவில்லை என்று தெரிகிறது, அவன் அந்த இடத்தை விட்டு போகும் போது அதை இங்கேயே விட்டுவிட்டிருக்க வேண்டும். பிரபு எங்கும் காணப்படவில்லை. அவன் பழைய கோயில் மண்டபத்தின் உள்ளே இருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் முன்பு அந்த இருண்ட மாலை நேரத்தில் வந்ததுக்கு இப்போதைக்கு வித்தியாசம் இருந்தது. அன்று அந்தி பொழுது, இடி மின்னல் மழை பேயும் நேரம் அனால் இப்போது பிற்பகல் 3 மணிக்கு இது மிகவும் சூடாகவும் வெளிச்சமாகவும் இருந்தது. அன்று மனதில் இருள் சூழ்ந்திருந்தது அனால் இன்று இப்போது இருக்கும் வானிலை போல மனம் தெளிவாக இருந்தது.

என்னவென்றால் மனதில் சில காலமாக இல்லாதது போல இப்போது மிகவும் நிம்மதியாக இருந்தது. ஒருவேளை அவன் தடுமாறுவதை நிறுத்திவிட்டு, இறுதியில் உறுதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததனால் இப்படி இருக்கலாம். சரவணன் மண்டபத்திற்குள் நுழைந்தபோது, பிரபு சுவரோடு ஒட்டி இருந்த ஒரு சிறு திண்ணையில் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவன் முற்றிலும் வழுக்கையாக மற்றும் மீசை இல்லாமல் இருந்தான். தனது தந்தையின் இறுதிச் சடங்குகள் மற்றும் அவர் நல்லுடலுக்கு தீ வைத்தபின் பாரம்பரிய நடைமுறையின்படி முழுதாக ஷேவ் செய்திருந்தான்.

2 Comments

  1. Super Saravana…

  2. சூப்ப்ர்ஹீரோ

Comments are closed.