அன்று இரவு அவர்கள் படுக்கைக்கு செல்லும் போது, மீராவும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று அவன் முடிவு செய்தான். அவர்கள் இருவரையும் அவன் பலவந்தமாகப் பிரித்தது வேலை செய்யவில்லை, இனியும் வேலை செய்யப் போவதும் இல்லை. அவன் நிலைமையை நேரடியாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு வகையில் பிரபு இப்போது இங்கு வருவது நல்லது.
“உனக்கு தெரியும்மா, பிரபுவின் அம்மாவால் பிரபுவைத் தொடர்பு கொள்ள முடிந்தது, அவன் இப்போது இங்கு வருகிறான்,” அவன் கூறியதை கேட்டு என்ன எதிர்வினை மீரா முகத்தில் வருகிறது என்று பார்த்தபடியே இப்படி கூறினான்.
ஒரு அரை விநாடிக்கு அவள் முகம் பிரகாசமானது , ஆனால் அவளால் அதைக் உடனே கட்டுப்படுத்த முடிந்தது மற்றபடி அவள் வெளிப்புறமாக எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. “ஓ அப்படியா? நல்லது, ஒருவேளை அவரைப் பார்த்தால் அவரது தந்தை உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். ”
இன்னும் மோசமாகாமல் இருந்தாலே நல்லது. அவர் தானே அவனை இங்கே வர கூடாது என்று தடை செய்தது என்று சரவணன் மனதுக்குள் நினைத்தான்.
அந்த அரை நொடியில் அவன் பார்த்த அந்த எதிர்வினை, சரவணனுக்கு அவளுடைய உண்மையான உணர்வுகளை அறிய போதுமானதாக இருந்தது. “அவன் தன் மனைவி மற்றும் மகளுடன் வருகிறான்,” என்று கூறினான்.
இந்த முறை மீராவால் தன் உள் உணர்வுகளை சரவணனிடமிருந்து மறைக்க இயலவில்லை. என்ன அது, நான் பிரபுவுக்கு ஒரு மகள் இருப்பதைக் குறிப்பிடும்போது அவள் முகத்தில் பொறாமை ஏற்பட்டதா? அல்லது அந்த பொறாமை நான் அவன் மனைவியை பற்றி குறிப்பித்துக்காகவா? பிரபுவுக்கு இப்போது ஒரு மனைவி இருக்கிறாள் என்பதை நினைவூட்டுவது அவளுக்கு பிடிக்கவில்லையா?
“அவருக்கு ஒரு மகள் இருக்கிறாளா? ஆமாம், அவர் திருமணமாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டது, அவருக்கு இப்போது ஒரு குழந்தை இருப்பது இயல்பு தானே.”
நிச்சயமாக அவனுக்கு குழந்தை இருக்குது என்பதால் தான் அந்த பொறாமை வந்திருக்கு என்று இதை கேட்ட பிறகு சரவணன் முடிவுசெய்த்தான்.
Next,4
Oru naal ki dukaan Mangal
Super story continue pannunga