யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 11 152

நான் அம்மா என்ன கூறுகிறாள் என்று புரியாமல் முழித்து கொண்டிருந்தேன்

” செரி.. ராசு குட்டி. … சூடு இறங்கியாச்சி.. நீ குளிச்சிட்டு வா ” என்றாள்

அப்போது என் வாயிலிருந்து ” பாட்டி நீங்க ரோம்ப யெங்கா அழகா இருக்கீங்க ” என என்னையும் அறியாமல் வார்த்தைகள் வந்தது..

” அப்டியா ராசா…. சீக்கிரம் குளிச்சிட்டு வந்திடு இல்லனா ஜன்னி புடிச்சிக்கும் ” என கூறி வெளியே கிணற்றில் குளிக்க சென்றுவிட்டாள்..

நானோ எப்படி இதெல்லாம் நிகழ்ந்தது என வியந்து. .. கடகடவென்று குளித்து விட்டு வீட்டினுள் சென்றேன். ..

அம்மாவின் முகம் ,தலை ,சேலையில் எண்ணெய் சிதறி இருந்ததால் நான் வந்ததும் அவள் குளிக்க சென்றுவிட்டாள்..

நான் என் கர்ச்சீபை காணவில்லை என தேடிகொண்டிருந்தேன்… அப்போது தான் நினைவுக்கு வந்தது அம்மாவின் கைகுட்டையும் என் கைகுட்டையும் ஒரே டிசைன் என்று. .. ஒரு வேளை அம்மா மாற்றி வைத்திருப்பாள் என் அம்மாவின் அறைக்கு சென்று பீரோவில் இருக்கும் என்று திறந்தேன். .. நான் நினைத்தது சரிதான் அது அங்கியேதான் இருந்தது. .. எடுத்து விட்டு பூட்டினேன்… திரும்பி நடக்கும் போது என் ஏதோ ஒன்றை வித்தியாசமாக பார்த்ததாக எண்ணினேன். .

மீண்டும் பீரோவை திறந்தேன் அங்கே என் கண்ணில் பட்டது அந்த டைரிதான்…. ஒருவேளை அக்காவும் அம்மாவும் அன்று பேசியது இந்த டைரி’யாக இருக்குமோ என தோன்றியது. ..

மீண்டும் என்னுள் இருந்த நல்லவன் பேசினான் ” டேய். … கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான நீ முடிவு பன்ன .. இனிமே அம்மாவோட பர்ஸ்னல் விஷயத்தில தலையிட மாட்டேனு இப்ப என்னடானா… டைரிய பாக்குற. .. ஒழுங்கா கதவ மூடிட்டு வெளியே போ..” என கூறியது.

ஆனால் என் மூளையோ அந்த டைரியின் என்ன இருக்கிறது என்ற ஆவலில். .. அவனின் பேச்சை கேட்காமல் டைரியை எடுத்து கொண்டு வெளியே வந்தேன்… குளித்து கொண்டிருந்த அம்மாவிடம் ஃப்ரென்ஸ் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு. .. நேராக பார்க்’கிற்கு சென்றேன். .. பூங்காவில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அமர்ந்து கொண்டு கனமாக இருந்த அந்த டைரியின் முதல் பக்கத்தை திறந்தேன். ..
அதில் ” என் தம்பி பாலா’வுக்கு ஜுரம் சரியாக வேண்டி…………………….. ” என அதில் எழுதி இருந்ததை படிக்க தொடங்கினேன்…

இரவு மணி 8:00

இன்னும் அந்த பூங்காவில் தான் அமர்ந்திருக்கிறேன்… அம்மாவின் டைரியை படித்து…. அவளின் கடந்தகால வாழ்கையின் பல ரகசியங்களை அறிந்ததனால் … என் மனநிலையோ சோகமாக இல்லைஇல்லை ,*இருக்கமாக அதுவும் இல்லை, குழப்பமாக ஆம் சரியாக சொன்னால் என் மனதோ குழப்பத்தில் தான் இருக்கிறது… இந்த குழப்பத்திலும் ஒரு ஆறுதல் என்னவென்றால் என் அப்பா வேறொரு பெண்ணுடன் ஒடி போய்விடவில்லை என்பதுதான்..

அப்பொழுது இவ்வளவு நாட்கள் நான் உண்மை என்று நம்பி கொண்டிருந்த அனைத்தும் பொய்யாக இருக்கிறது … அதேசமயம் இவ்வுலகில் எங்கும் நிகழாதது என் வாழ்க்கையில் உண்மையாக நடந்துகொண்டிருக்கிறது. .. இதையெல்லாம் நினைக்க நினைக்க என் மனமோ ஏதோ சொல்ல முடியாத உணர்வில் தவித்தது…

2 Comments

  1. Next episode podunga broo

Comments are closed.