யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 11 151

மெதுவாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். .. என் சிந்தனைகளோ அந்த டைரியில் இருந்த சிறு சிறு நிகழ்வுகளை அசைபோட தொடங்கியது….

“கடவுளே என் தம்பிக்கு சீக்கிரமே உடம்பு குணமாகனும்.. ” என வடிவுக்கரசி கடவுளிடம் பாலமுகுந்தனுக்காக வேண்டிக்கொண்டிருந்தாள்..

சுவாதி ” ஏய்… வடிவு நேரம் ஆச்சிடி .. அம்மா திட்டும். . வெரசா வா ..”

வடிவு ” இருடி.. வறேன். .. ” என கண்களை திறந்து பிராத்தனையை முடித்துகொண்டு கோயிலை விட்டு இருவரும் வெளியேறி வீட்டுக்கு நடந்தனர்..

” என்னடி வேண்டிகிட்ட… அவ்ளோ நேரமா…”

” பாவம். .. என் தம்பிக்கு ஜுரம் … அதான் சீக்கிரம் சரியாயிடுனும்னு வேண்டி கிட்டேன்..டி”

” அடிப்பாவி… நமக்கு அடுத்த வாரம் எஸ்.எஸ்.எல்.சி ரிசல்ட் வருது .. உன் நம்பர் பேப்பர்ல வரனும்னு வேண்டிக்காம .. ஏன்டி இப்டி பன்ற…”

“போதும் நிருத்துடி… எனக்கு என் தம்பி தான் முக்கியம். ..” என அழுத்தமாக கூறினாள்…

“சரி சரி. … உடனே கோச்சிப்பியே… ”

அதற்குள் வீடு வந்ததும் சுவாதியிடம் விடைபெற்று வீட்டினுள் வந்தாள். ..

ராதா ” ஏன்டி. .. இங்க இருக்குற கோவிலுக்கு போய்ட்டு வர இப்புட்டு நேரமாடீ ” என கத்தினாள்

ஆனால் வடிவோ அம்மாவின் கத்தலை கண்டு கொல்லாமல் நேராக பாலாவின் நெற்றியில் விபூதியை பூசினாள்…

பாலா ” அக்கா. ..சாதாரன ஜுரத்துக்கு போய் இப்படி பயப்படுறியே… ”

வடிவு ” உனக்கு வேனா அது சாதாரணம் .. எனக்கு அப்டி இல்ல டா…. சரி… இப்ப பரவால்லலே… ” என அவனின் கழுத்தை தொட்டு பார்த்தாள். .

இப்படிதான் வடிவுக்கரசி அவளுடைய தம்பியின் மீது உயிரையே வைத்திருந்தாள்… அவனுக்கு ஏதாவது என்றால் துடித்து போவாள்… வடிவுக்கரசியும் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மேல் நிலைப்பள்ளிக்கு சென்றாள். .

ராதாக்கு பாலா பிறந்த இரண்டாவது ஆண்டில் தன் கணவனை ஓர் சாலை விபத்தில் இழந்தாள்.. அன்றிலிருந்து செல்லமாகதான் பிள்ளைகளை வளர்த்தாள்… அந்த செல்லமே வடிவுக்கு பிடிவாத குணத்தை கொடுத்தது… இப்போது கொஞ்ச நாட்களில் வடிவுக்கரசிக்கும் பாலாக்கும் இடையில் இருந்த பாச பினைப்பை கண்டு ராதாக்கு கொஞ்சம் பயமாக இருந்தது.. நாளுக்கு நாள் அவர்களின் நெருக்கம் அதிகமானதை போல் உணர்ந்தாள். .. அதன் வெளிபாடாக ஒரு நாள் பாலாவிடம்
” ஏன்டா பாலா… உங்கக்காவுக்கு தான் அறிவும் கெடையாது.. கோவக்காரி…வேற.. நீ யாவது.. பாத்து நடந்துக்கோடா…”

2 Comments

  1. Next episode podunga broo

Comments are closed.