யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 11 152

பாவம் எனக்காக அனைவரும் இரவு உணவை இன்னும் சாப்பிடாமல் இருக்கிறார்கள். .. உடனே பாத்ரூம் சென்று முகம் கழுவிவிட்டு வந்தேன்.. அம்மாவும் அக்காவும் அமர்ந்திருந்தனர் .. இன்றைக்கும் அப்பாவையும் பாட்டியையும் சாப்பிட அழைக்கவில்லை போல.. நேற்று அவர்களை சாப்பிட கூப்பிட்ட என்க்கு… இன்று என்னவோ டைரியை படித்ததால் அவர்கள் மீது சில காரணங்களால் வருத்தங்கள் உண்டானது…

அம்மா அருகில் அமர்ந்து அவளின் முகத்தை பார்த்தேன்… அன்று அப்பா மற்றும் பாட்டியின் துரோகத்தால் தன் வாழ்க்கை போய்விட்டதே என எவ்வளவு அழுதிருப்பாள் என நினைத்து பார்த்தேன்… . அவளோ எனக்கொரு தட்டு வைத்து சோறும் குழம்பும் வைத்தாள்.. நான் தட்டில் கை வைக்கும் தருணத்தில் ” டேய்…சுயநலகாரா… ” என ஓர் குரல் கேட்டது. .. வேறு யாரு அது என் மனசாட்சியாகிய அந்த நல்லவன் தான்…

” வந்துட்டியா. … எங்கடா கானோம்னு பாத்தேன்..” என்றேன்..

” ஏன்டா… அங்க இரண்டு பேரு சாப்டாம பட்னி கெடக்குறாங்க… நீ மட்டும் சாப்டா போதும்ல… ” என்றான்

” அம்மாவ அவங்க ஏமாத்துனால… நானே அவங்க ரெண்டு பெரு மேல கோத்துல இருக்கேன்.. நீ பேசாம போய்டு…”

” டேய். .. அவங்க ரெண்டு பேரும் எந்த சுஜ்சுவேஷன்ல அப்படி பன்னாங்கனு தெரியாம… இப்டி நீ கோவபடுறது தப்பு.. ஒழுங்கா போய் அவங்கள சாப்ட கூப்டு ” என கூறி என்னுள் மறைந்தான். . எனக்கும் அவன் கூறியதுதான் சரியென பட்டது.. அன்று எந்த சூழ்நிலையில் அவர்கள் அப்படி செய்தார்கள் என்று தெரியாமல் யாரையும் குற்றவாளியாக எண்ணுவது தவறு என நினைத்து கோண்டிருந்தேன்…

திடிரென நான் அம்மாவின் குரல் கேட்டு நிகழ்காலத்திற்கு வந்தேன். . ” ரவி… சாப்டாம என்னடா யோசன..” என்றாள்

” மா… அவங்க சாப்டாங்களா…மா??” என்றேன் மெதுவாக. ..

அம்மா சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு பின் ” ஏன்… டெய்லியும் அவங்கள வெத்தல பாக்கு வச்சி கூப்டாதான் வருவாங்களோ… பசிச்சா அவங்களே வரப்போறாகங்க … நீ.. சாப்டு..டா..” என்றாள். ..

எனக்கு அப்பாவையும் பாட்டியையும் விட்டுட்டு சாப்பிட ஒருமாதிரியாக இருந்தது.. எனவே சாப்பிடாமல் அமைதியாக இருந்தேன். ..
பின் அம்மாவே என்னை புரிந்துகொண்டு “டேய்… கூப்டு தொல… ” என கூறினாள்.

இவ்வளவு நேரம் நாங்கள் பேசியதை கேட்டு கொண்டிருந்த அக்கா ” மா……” என கத்தினாள்

அம்மா ” நான் என்ன பன்றது அவங்க வராம இவன் சாப்ட மாட்டான்..டி…” என கூறியதும் அக்கா அமைதியானாள்.. நான் எழுந்து அப்பாவின் அறைக்கு சென்று அப்பாவையும் பாட்டியையும் பிடிவாதமாக கூட்டி வந்து சாப்பிட அமர வைத்தேன். .. அம்மா அவர்களுக்கும் சாப்பாடு பறிமாரினாள்… அனைவரும் சாப்பிட தொடங்கினோம்…

நான் அப்பாவிடம் ” அப்பா… சித்தி எங்கப்பா இருக்காங்க ” இன்றேன்.. இந்த கேள்வியினால் என்னை தவிர மற்ற அனைவரும் முழித்து கொண்டிருந்தார்கள்… பாவம் இல்லாத ஒருவரை பற்றி கூற அவர்களாள் எப்படி முடியும்..

2 Comments

  1. Next episode podunga broo

Comments are closed.