யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 11 152

அம்மா ” டேய் ரவி…. சாப்டும் போது பேசகூடாதுனு சொல்லிருக்கேன்ல.. ஒழுங்க சாப்புடா ” என்றாள்

” ஏம்மா… ஒரு டவுட்டு கூட கேக்க கூடாதா…” என சாப்ட ஆரமித்தேன்.
பின்பு அப்பா மற்றும் பாட்டியை பார்த்து ” இங்க பாருங்க. . நீங்க இங்க இருக்குற வரைக்கும் இது உங்க வீடுனு நெனசிகோங்க… தயவு செஞ்சி சாப்டாம மட்டும் இருக்காதிங்க. .. ” என்றேன். .அவர்களும் சரியென்றார்கள்…

இப்போது என்னை… அம்மாவும் அக்காவும் முறைத்து கொண்டிருந்தார்கள்.

நான் டைரியை எடுத்த ஆர்வத்தில் காலையிலும் அதை படிக்கும் ஆர்வத்தில் மதியமும் சாப்பிடவில்லை என்பதால் நன்றாக சாப்பிட்டுகொண்டிருந்தேன்…

” எப்டி பாட்டி… அம்மாவோட சமையல் “என்றேன்..

பாட்டி ” ம்…. கொஞ்சம் சுமார்தான்… ராசா….” என்றாள்.. இப்போது அம்மா பாட்டியை முறைத்தாள்.

” அப்டியா… நீங்க நல்லா சமைப்பிங்களா.. பாட்டி ” என்றேன்..

” என் சமையல் பத்தி உன் ஆத்தா கிட்ட கேட்டு பாரு. ..பா… அவளே சொல்லுவா ” என்றாள்

உடனே அம்மா ” டேய் சொன்னா உங்களுக்கு புரியாதா… பேசாம சாப்புடுடா… ” என பாட்டிக்கும் மறைமுகமாக கூறினாள்..
பின் அனைவரும் சாப்பிட்டு முடித்து* .. ஹாலில் கீழே அமர்ந்து சன் டிவியில் வாணி ராணி நாடகம் பார்த்து கொண்டிருந்தோம்..

எனக்கு வலதுபக்கத்தில் அக்காவும் அம்மாவும் , இடது பக்கத்தில் பாட்டியும் அப்பாவும் அமர்ந்திருந்தனர்.. எனக்கு சீரியல் பிடிக்காது என்றாலும் இன்று என்னவோ அனைவரும் பார்ப்பதால் நானும் உடன் இருந்தேன். மெதுவாக அக்காவின் தோளில் சாய்ந்தேன்.. அவளோ சாப்பிடம்போது அப்பாவிடமும் பாட்டியிடமும் பேசியதால் கோவத்தில் இருந்திருப்பால் போல எனவே என் தலையை தட்டிவிட்டாள்…

நான் உடனே அவளை இன்னும் வெறுப்பேற்ற பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டேன்.. இப்போது அம்மா என்னிடம் ” ரவி… தூக்கம் வந்தா ரூம்ல போய் படு ” என ஆதகங்கத்தில் கூறினாள்..

” இல்லம்மா… சும்மாதான் படுத்திருக்கேன்… ” என டிவியை பார்த்தவாறே கூறினேன். ..

அக்காவும் முறைத்து கொண்டிருக்க .. பாட்டியோ என் தலையை கோதிவிட்டாள்.. இப்போது என் மனதில் அம்மாவையும் அப்பாவையும் எப்படியாவது சேர்த்து வைக்க வேண்டும் என்று தோன்றியது. .. ஆனால் எப்படி என தெரியவில்லை. .

இரவு மணி 11:00..

டிவியில் காமெடி ஜங்ஷன் முடிந்ததும் படுக்க சென்றோம்.. பாட்டியும் அப்பாவும் புழுக்கம் காரணமாக ஹாலில் போர்வை விரித்து படுத்துக்கொண்டனர்…

2 Comments

  1. Next episode podunga broo

Comments are closed.