செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 9 164

கொஞ்ச நேரம் கழித்து வளைகாப்பு வைபவத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருந்த வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்மணி ஒருத்தி மேடை மீது ஏறி, மாலினிக்கு பக்கமாக நின்று கொண்டு, கண் மூடி, கை கூப்பி கிழக்கு திசை நோக்கி கடவுளைக் கும்பிட்டாள்.

ஒரு நிமிடம் உதடுகள் ஏதோ முனு முனுக்க கடவுளைக் கும்பிட்டவள், மாலினியின் அம்மாவை அழைத்து நெற் குவியலின் மேல் வைக்கப்பட்டிருந்த அகல் விளக்கினை ஏற்றச் சொல்லி வளைகாப்பு வைபவத்தை தொடங்கி வைத்தாள்.

மாலினியின் கைகளுக்கு முதன் முதலாக வேப்பிலைக் காப்பும், வெள்ளிக் காப்பும் அணிவித்த அந்த சுமங்கலிப் பெண்மணி, கொஞ்சம் வளையல்களை குல தெய்வத்துக்கும், அம்மனுக்கும் சாத்துவதற்காக எடுத்து வைத்துக் கொண்டு “மாலினிக்கு இங்க யாராவது நாத்தனார் முறையிலே இருக்கீங்களா? இருந்தா வந்து வளைகாப்பு மாலை போடுங்க” என்று சொல்ல, புவனா ஆன்டி, அமுதாவை அழைத்து,…..

”போடி,…. நீதான் இப்ப அவளுக்கு நாத்தனார் முறை. போய் மாலை போட்டு, கைக்கும் கன்னத்துக்கு சந்தனம் தடவிட்டு வா” என்று சொல்ல, வாங்கி வந்த ஆளுயர ரோஜா மாலையை எடுத்துக் கொண்டு மேடை ஏறி, அதை மாலினியின் கழுத்தில் போட்டு, அவள் கைக்கும் கன்னத்துக்கும் சந்தனத்தை தடவிவிட்டு மீண்டும் வந்து எங்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள்.

அக்கம் பக்கத்து வீட்டு சிறு பெண் பிள்ளைகள் அவளைச் சுற்றி நின்று சிரித்தபடி பேசிக்கொண்டிருக்க, சில பெண்கள் ஏதோ சடங்குகளைச் செய்து கொண்டிருக்க, நாங்கள் விட்ட பேச்சை தொடர்ந்தோம்.

“என்னைக்கும் இல்லாத மாதிரி, ஸ்வீட், பழம், பால்ன்னு கொடுத்து, ஆக்கிப் போடுறோம், அது இதுன்னு கர்பமா இருக்கிற பொண்ணுங்களை சாப்பிடவச்சே கொல்றாங்களே அது ஏன்?”

“அம்மா உடம்புல சேர்ற சத்துதான் குழந்தைக்கு போகும். குழந்தைக்கும், அம்மாவுக்கு சேத்து அவள்தான் சாப்பிடணும். கர்பமான சில பொண்ணுங்களுக்கு அடிக்கடி வாந்தி வரும். அதனாலே சாப்பாட்டைக் கண்டாலே அவங்களுக்கு பிடிக்காம போகும். அதனால, கர்ப்ப காலத்தில பொண்ணுங்களுக்கு ஸ்பெஷலா ஏதாவது வாய்க்கு பிடிச்ச மாதிரி சாப்பிட்ற ஐட்டம் தரணும்.”

“என் ஃப்ரண்டோட அக்கா சீமந்தம் அப்ப நெறைய நெய்யா சாப்பிட்டாங்க. நெய் தினசரி எடுத்துக்கறது கர்ப்பினி பொண்ணுங்களுக்கு நல்லதாமே, உண்மையா?”

“ம்,..நெய் சாப்பிட்டா பிரவசத்தப்போ இடுப்பு மஸுல்ஸ தளர வைக்கும். அதனால பிரசவம் ஈஸியா இருக்கும். பொதுவா ‘உன்னைச் சுற்றி நாங்கள் தான் இருக்கிறோம். உன் வரவை எதிர்பார்த்து உனக்காகவே காத்திருக்கும் உனது உறவுகள் நாங்கள் இருக்கிறோம்’ என்று குழந்தைக்கு உறுதி கூறும் சடங்கு தான் வளை காப்பு.”

இப்படி பேசிக்கொண்டிருக்கும் போதே, மீண்டும் அந்த சுமங்கலிப் பெண்மணி, வளைகாப்பு பூஜையை தொடங்கி வைத்தாள்.

முதலில் மாலினியின் அம்மாவும், என் அம்மாவும் மாலினிக்கு முன்னால் நின்று, மாலினியின், உச்சந்தலை, வலது இடது தோள் பட்டைகள், உள்ளங்கைகள், பாதங்கள், வயிறு, இடுப்பு என , ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு வெள்ளி நாணயம் வைத்து கைகள் கன்னங்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு, காலில் நலங்கு வைத்து, தாலியில் பூ வைத்து, நெற்படியால், மேலிருந்து பாதம் வரை ஏற்றி இறக்கி மூன்று முறை வலமாகவும், பின் இடமாகவும், சுற்றி கீழே வைத்து, மாலினியின் இடது கையில் ஒற்றைப் படை வளையல்களையும், வலது கையில் இரட்டைப் படை வளையல்களையும் போட்டுவிட,……மாலினி அவள் அம்மாவையும், என் அம்மாவையும் குனிந்து நமஸ்காரம் செய்தாள்.

அப்படி நமஸ்காரம் செய்ய குனிந்த போது, மாலினியின் இடுப்பில், பூவும் அக்ஸதையும் கலந்து தெளித்தார்கள். இதே போல அக்கம் பக்கமிருந்த இன்னும் சில மூன்று சுமங்கலிப் பெண்கள் அடுத்தடுத்து செய்து, ஆரத்தி எடுத்து, வளைகாப்பு சடங்கை நிறைவு செய்தார்கள்
மாலினியின் அம்மா வந்திருந்த சுமங்கலிப் பெண்களுக்கு அவர்கள் அணிந்து கொள்ளவும், மாலினிக்கு அணிவிக்கவும் வளையல்கள் கொடுத்து, வந்திருந்தவர்களைப் பார்த்து, ”எல்லோரும் இருந்து வளைகாப்பு விருந்தை சாப்டுட்டுதான் போகணும்.” என்று கை கூப்பி கேட்டுக் கொள்ள , அனைவரும் எழுந்து சாப்பாட்டு அறையை நோக்கி நகர்ந்தோம்.

வாழை இலை வைத்து, இலையில் ஐந்து வித பட்சணங்களும், புளி சாதம், எழுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் என வகை வகையான வண்ண சாதங்கள் கூட்டு பொறியலோடு பறிமாறப்பட்டது.

மாலினியை அவள் பக்கமிருந்து அவள் கை பிடித்து அவள் அம்மாவும், சில சுமங்கலிப் பெண்களும் அழைத்து வந்து சாப்பிட உட்கார வைத்தார்கள்.

இலையில் அனைத்து உணவுப் பண்டங்களும் பரிமாறப்பட்ட பிறகு அவளது வலது தொடையில் ஒரு சின்ன ஆண் குழந்தையையும், இடது தொடையில் ஒரு சின்ன பெண் குழந்தையையும் உட்கார வைக்க, அவர்களை மாலினி தன் இரு கையாலும் அனைத்துப் பிடித்துக் கொள்ள, மாலினியின் அம்மா
மாலினிக்கு உணவை ஊட்டி விட்டாள்.

அதன்பிறகு ஆண் குழந்தையை மட்டும் அவள் இடது தொடையில் வைத்து அவளை சாப்பிடச் சொல்ல,….. மாலினி மடியில் உட்கார்ந்திருந்த குழந்தைக்கு ஊட்டி விட்டுக் கொண்டே, தானும் சாப்பிட்டாள்.

அடுத்ததாக பெண் குழந்தையையும் அப்படி உட்கார வைத்து அந்த குழந்தைக்கு ஊட்டிவிட்டுக்கொண்டே சாப்பிட்டாள்.