நீயும், உன் அப்பாவும் சேர்ந்துகிட்டு என்னை வேணா, ஜாதி, மதம் இதுக்கெல்லாம் அர்த்தமில்லேன்னு சொல்லி என் வாயை மூடிடலாம். ஆனா இந்த ஊர்ல இருக்கற எத்தனைப் பேர் வாயை உங்களால மூட முடியும்?”
“அ…அம்மா..” செல்வா முனகினான்.
“நாளைக்கு உன் தங்கையைப் பார்க்க வர்றவங்க, நீங்க உங்க புள்ளைக்கு பொண்ணு எடுத்து இருக்கற எடம் எதுன்னு கேட்டா; நான் என்ன பதில் சொல்றது? எந்த ஜாதியில பொண்ணு எடுத்து இருக்கீங்கன்னு கேட்டா, நான் என்ன பதில் சொல்லணும்? இவனுக்குத்தான் புத்தியில்லே? நீங்க என்னப் பதில் சொல்லப் போறீங்க..?” மல்லிகா தன் கணவனிடம் ஆவேசத்துடன் சீறினாள்.
நடராஜன் தன் மனைவியின் கேள்விக்குப் பதில் சொல்வதற்குள், மீனா தன் தொண்டையை கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள். நடராஜனின் வலது கையை, அவள் தன் கைக்குள் வைத்து வருடிக்கொண்டிருந்தாள்.
“அம்மா, நீ என்னை வாயை மூடுன்னு சொன்னே; இருந்தாலும் ஒரே ஒரு நிமிஷம் என்னைப் பேசவிடும்மா; நான் இன்னும் படிச்சே முடிக்கலை; சுகன்யா மாதிரி படிச்சுட்டு ஒரு நல்ல வேலைக்கு போகணும், என் கால்ல நான் நிக்கணும்ன்னு நான் நெனைச்சுக்கிட்டு இருக்கேன். என் கல்யாணம் இப்போதைக்கு இல்லை; எப்பவோ நடக்கப் போற ஒரு விஷயத்துக்கு இப்பவே ஏம்மா மூச்சு பிடிச்சி நீ பேசிக்கிட்டு இருக்கே?”
“சரிடி … அந்த சுகன்யா மாதிரி நீயும் ஒருத்தன் பின்னால சுத்தணும்ன்னு உனக்கு ஆசையில்லையா? அதை ஏன் சொல்லாம விட்டுட்டே?
“அம்ம்ம்மா .. என்னம்மா பேசறே நீ” மீனாவின் குரல் உயர்ந்தது.
“நிறுத்துடி உன் பேச்சை … அண்ணணுக்கு வக்காலத்து வாங்க வந்துட்டா.. அவனை மாதிரி நீயும் என் பேச்சை கேக்காம அலையப் போறியா?”சுந்தரி தன் கூந்தலை இறுக முடிந்து கொண்டு எழுந்தாள்.
Kallyanam eapoo seekram sollunga romba boor adikuthu
மொக்கை
Cont.. mannichudunga ram story