கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 17 11

“மீனா … போதும்மா… நீ பேசினது போதும் … இதுக்கு மேல நீ இந்த விஷயத்தைப் பத்தி பேசாதே.” நடராஜன் அவள் பேச்சில் குறுக்கிட்டார்.

“அப்பா … ப்ளீஸ் … என்னைப் பேச விடுங்கப்பா …”

“நீ என்ன சொல்லப் போறேன்னு எங்களுக்குப் புரியுது …”

“சரிப்பா … நான் அதைப்பத்தி பேசலை …”

“அம்மா … சுகன்யாவோட அம்மாவையும், மாமாவையும் நீ ஆஸ்பத்திரியிலே பாத்தே? நாலு பேரு எதிர்ல நீ கோவப்பட்ட போதும், அவங்க எவ்வளவு இங்கிதமா நடந்துகிட்டாங்க? அவங்களோட குணம்தானேம்மா முக்கியம். இதுக்கும் மேல சுகன்யாவோட ஜாதி எதுவாயிருந்தா நமக்கென்னம்மா?” மல்லிகா தன் மனதுக்குள் பொங்கி எழுந்து வரும் சினத்தை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

“அம்மா … இவங்க ரெண்டு பேரு கல்யாணத்துக்கு நீ சந்தோஷமா ஒத்துக்கணும்மா. சுகன்யா நிச்சயமா இந்த வீட்டுக்கு ஏத்த மருமகளா இருப்பாங்கங்கறதுல எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ஏன்னா இந்த ஒரு வாரத்துல உன்னை விட அதிகமா சுகன்யா கூட ஆஸ்பத்திரியில நான் இருந்தேன். செல்வாவோட ஆபீசுலேருந்து இவனைப் பாக்க வந்தவங்க எல்லாம், ஆணாயிருக்கட்டும் இல்லே பெண்ணாயிருக்கட்டும்; சுகன்யாவை பத்தி நல்லபடியாத்தான் சொன்னாங்க. இதுக்கு மேல நீயாச்சு; உன் பிள்ளையாச்சு.”

மீனா தன் மனதிலிருந்ததை பேசி முடித்த திருப்தியில் தன் தாயின் முகத்தை அமைதியுடன் பார்த்தாள். நான் தப்பா ஏதும் பேசிடலையேப்பா என்ற பாவனை முகத்தில் தோன்ற தன் தந்தையின் முகத்தையும் ஒரு தரம் கூர்ந்து நோக்கினாள். பின் அமைதியாக தன் தலை முடியைக் கோதிக்கொண்டவள் காலியாக இருந்த காபிக் கோப்பைகளை சேகரித்துக்கொண்டு நிதானமாக கிச்சனை நோக்கி நடந்தாள். மல்லிகா தன் முகத்தில் எந்த வித சலனமுமில்லாமல் தெருவை நோக்கிக்கொண்டிருந்தாள்.
“மல்லிகா, எழுந்து வாம்மா சாப்பிடலாம்.”

“இல்லீங்க நீங்க சாப்பிடுங்க; இப்ப எனக்குப் பசியில்லை.” மல்லிகா சிறு குழந்தையாக தன் கணவனிடம் முரண்டினாள்.

“அம்மா என் மேல இருக்கற கோவத்தை நீ அப்பா மேல ஏம்மா காட்டறே? நீ சொன்னியேன்னுதான் அவர் ஓடிப் போய் மெஸ்லேருந்து டிஃபன் வாங்கிட்டு வந்திருக்கார் ..” செல்வா தன் தாயிடம் டிஃபன் தட்டை நீட்டினான்.

“சரிடா … உன் தங்கச்சிக்கு நல்லாவே சொல்லிகுடுத்து இருக்கே … இப்ப நீ சொல்ல வேண்டியது ஏதாவது இருந்தா அதையும் சொல்லிடு…ஒரு வழியா அதையும் நான் கேட்டுக்கறேன்.”

“அம்ம்மா … நீ என் கல்யாணப் பேச்சை விடும்மா; அது எங்கப் போவுது? எப்ப வேணா பேசிக்கலாம்.. நீ முதல்ல சாப்பிடும்மா.. நீ பசி தாங்க மாட்டே; உனக்கு பசி வந்துட்டா தலைவலி வந்துடும்…” செல்வா தன் தாயிடம் கொஞ்சினான்.

“டேய் .. நீ எனக்காக ரொம்ப உருக வேணாம்… அப்புறம் அந்த சுகன்யா இங்க வந்து என் ஆளு ஏன் இளைச்சுப் போயிட்டான்னு என் கிட்ட மல்லு கட்டப் போறா” மல்லிகா விரக்தியாகப் பேசினாள்.

“ரொம்ப தேங்க்ஸ்ம்ம்மா, கடைசியா இப்பவாவது, நீ அவ என் ஆளுன்னு ஒத்துக்கிட்டயே … எனக்கு அதுவே போதும்.” செல்வாவின் முகம் மலர்ந்தது.

“செல்வா, இந்த கல்யாணம் ஏன் வேண்டாம்ங்கறதுக்கான காரணங்களை நான் சொல்லிட்டேன். பின்னாடி என் கிட்ட வந்து நான் ஏன் இதெல்லாம் முன்னாடியே சொல்லலேன்னு நீங்க யாரும் என்னைக் கேக்கக்கூடாது.”

“அம்மா … என் வாழ்க்கையைத் துணையை நானே தேடிக்கிட்டது ஒரு தப்பாம்மா? இதைத் தவிர நான் வேற எந்த தப்பும் பண்ணி உன் மனசை எப்பவாது நான் நோக அடிச்சிருக்கேனா?

“நிச்சயமா இல்லடா…”

“அம்மா, சுகன்யாவைப்பத்தி நீ தவறா நினைச்சுக்கிட்டு இருக்கற ஒரே ஒரு விஷயத்தைப் பத்தி சொல்றேம்மா..”

“சுகன்யா சென்னையில தனியாத்தான் இருக்கா. எனக்கு ஈக்வலா கை நிறைய சம்பாதிக்கறா. அழகா இருக்கா. அவ சரின்னு சொன்னா, அவளைத் தலை மேல தூக்கி வெச்சிக்கறதுக்கு என் ஆபீசுலேயே நாலு பேரு போட்டி போட்டாங்க. தலை கீழா நின்னுப் பாத்தானுங்க; ஒருத்தன் புதுசா காரு கூட வாங்கிட்டு வாங்க ஜாலியா சுத்திட்டு வரலாம்ன்னு அவளைக் கூப்பிட்டான்; அவ யாரையும் திரும்பிக்கூடப் பாக்கலை. எங்க வேணா சுத்தாலாம்; யார் கூட வேணா போவலாம்; அவளைத் தட்டிக்கேக்க இந்த ஊருல யாரும் இல்லே. ஆனா அவ லீவு நாள்ல வீட்டை விட்டு வெளியவே வரமாட்டாம்மா.”

“அப்படிப்பட்டவ அவளா வந்து எங்கிட்ட பேசினா. அப்படி பேசினவ என்னை சினிமாவுக்கு போகலாம்ன்னு கூப்பிடலை. ஹோட்டலுக்கு அழைச்சுட்டுப் போய் வாய்க்கு ருசியா வாங்கி குடுன்னு கேக்கலை. பீச்சு, பார்க்குன்னு சுத்தறதுக்கு கூப்பிடலை. நான் இதுவரைக்கும் அஷ்டலட்சுமி கோவில் பாத்தது இல்லே; நீங்க என்னை அந்த கோவிலுக்கு கூப்பிட்டுகிட்டு போக முடியுமான்னு கேட்டாம்மா. நானும் வயசுப்பையன்ம்மா. நான் எப்படிம்மா அவளை ஒதுக்கிட்டு போக முடியும்?

3 Comments

  1. Kallyanam eapoo seekram sollunga romba boor adikuthu

  2. மொக்கை

  3. Cont.. mannichudunga ram story

Comments are closed.