கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 17 11

“இதுல தொந்தரவு என்ன இருக்கு? ஆனா சுகன்யா, பத்து நாள் லீவுல, அவங்க அம்மாகூட, அவங்க ஊருக்கு – அதாம்பா – கும்பகோனம் போயிருக்காளே; உனக்குத் தெரியாதா இது?” அவள் குரலில் ஆச்சரியம் அப்பட்டமாகத் தெரிந்தது.

“ஏன்? இப்ப எதுக்கு கும்பகோணத்துக்கு அவ போயிருக்கா?”

“நல்லாருக்கு செல்வா நீ பேசறது. சுகன்யா உன் ஆளு; உன் ஸ்வீட் ஹார்ட்; நீங்க ரெண்டு பேரும் சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க; அவ ஊருக்குப் போனது உனக்கேத் தெரியலை; அவ எங்கப்போனா? அவ ஏன் போனான்னு என் கிட்ட கேக்கறே? இது எப்படி இருக்கு?” வித்யா, பதினாறு வயதில் ரஜினி மாதிரி நொடித்துக்கொண்டு சிரித்தாள்.

“ம்ம்ம்.. சுகன்யா ஊருக்குப் போகணும்ன்னு சொல்லிக்கிட்டிருந்தா; ஏதாவது அவசர வேலையா சட்டுன்னு போயிருக்கலாம். ஆனா அவ எப்ப கிளம்பிப் போனான்னு எனக்குத் தெரியாது?

செல்வா தன்னிடம் குரல் குழறி அசடு வழிகிறானென்று வித்யாவுக்கு நன்றாகப் புரிந்தது. சுகன்யா தன்னிடம் சொல்லாமல் ஊருக்குப் போனது அவனுக்கு சற்றே அதிர்ச்சியாக இருந்தது. சுகன்யா எனக்கு போன் பண்ணல; பிடிவாதமா இருக்கான்னு நினைச்சேன்; ஆனா இப்ப ஊருக்குப் போயிருக்கா; அதைக்கூட எங்கிட்ட சொல்லலை. அப்படி என்ன அவளுக்கு என் மேல கோபம்?

“செல்வா, உங்க கல்யாண விஷயம் எவ்வளவு தூரத்துல இருக்கு?” வித்யா கரிசனத்துடன் வினவினாள்.

“உங்களுக்குத்தான் தெரியுமே … வீட்டுல என் அம்மாவை சரிக்கட்டிக்கிட்டு இருக்கேன். ஏறக்குறைய முடிஞ்ச மாதிரிதான்.”

“சீக்கிரமா ஒரு முடிவுக்கு வா செல்வா … எங்களுக்கெல்லாம் நல்ல கல்யாண சாப்பாடு போடு; சுகன்யா ரொம்பவே மனசாலத் தவிச்சுப் போயிருக்கா. எப்பவும் சிரிச்சிக்கிட்டே இருக்கறவ … இப்ப சிடுசிடுன்னு ஆயிட்டா.”

“ம்ம்ம்ம் …”

“சுகன்யாவை யாரோ பொண்ணு பார்க்க வரதா நான் கேள்விப்பட்டேன். பையன் பெங்களூர்ல ஐடியில வேலை செய்யறானாம். அவளுக்கு தூரத்து உறவுன்னு நெனைக்கிறேன். அவனுக்கு வருஷத்துக்கு பத்து லட்சம் பேக்கேஜ் அப்படின்னு, சொன்ன மாதிரியிருந்தது. சுகன்யா, அவங்க அம்மா கூட பத்து நாள் லீவுல நேட்டிவுக்கு போனது இதுக்காகத்தான் இருக்குமோ? என்ன நடக்குதுன்னு உனக்கும் தெரியலைங்கறே?” வித்யா மெல்லிய குரலில் பேசினாள்.

இது என்ன? வித்யா ஒரு புது விஷயத்தை சொல்றா. இதுல எவ்வளவு உண்மை? ஆனா வித்யா நல்ல மாதிரி. மத்தவங்க மாதிரியெல்லாம் வீணா
“குசுகுசு” பேசறவ இல்ல. இவ சொன்னதுலே கொஞ்சமாவது விஷயம் இருக்கும். என் அம்மா எங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்ட சந்தோஷமான விஷயத்தை சுகன்யாவுக்கு சொல்லணும்ன்னு நான் துடிச்சிக்கிட்டிருக்கேன்.

3 Comments

  1. Kallyanam eapoo seekram sollunga romba boor adikuthu

  2. மொக்கை

  3. Cont.. mannichudunga ram story

Comments are closed.