கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 17 11

“மல்லிகா, நீ என்ன சொல்ல வர்றே?”

“மீனாவுக்கு நீங்களா போய் வரன் தேடப்போறீங்களா? இல்லே?… அவளையும் உனக்கு புடிச்சவன் எவனாவது இருந்தா இழுத்துக்கிட்டு வாடீ; உனக்கும் நான் சட்டுன்னு கல்யாணத்தை முடிச்சிடறேன்னு சொல்லப் போறீங்களா?”

“மல்லிகா … உன் மனசுல இருக்கறதை நீ நேரடியா சொல்லு … இப்படி சுத்தி வளைச்சுப் பேசாதே..”

“டேய் செல்வா .. சுகன்யா நம்ம ஜாதியை சேர்ந்தவளா?”

“அம்மா … இது நாள் வரைக்கும் நீ இதைப் பத்தி பேசினதே கிடையாது; இன்னைக்கு ஏம்மா நீ திடீர்ன்னு அவ ஜாதியை இப்ப இழுக்கறே?”

“நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்லுடா..”

“சுகன்யாவோட பேரண்ட்ஸ்ங்க ரெண்டு பேருமே வேற வேற ஜாதிதாம்மா .. அவங்க ரெண்டு பேருமே நம்ம ஜாதியில்லேம்மா. இப்ப சுகன்யா ஜாதி என்னான்னு கேட்டா நான் என்ன சொல்றது?”

“செல்வா, உனக்கு கீழே வேற யாரும் இந்த வீட்டுல இல்லாமயிருந்தா, இந்த கேள்வியை நான் எழுப்பியிருக்க மாட்டேன்.”

“அம்மா, நீயும் எல்லோரையும் மாதிரி கண்ணுக்குத் தெரியாத விஷயங்களை பெரிசா, கவுரவமா நினைக்க ஆரம்பிச்சிட்டியே? செல்வா அழாத குறையாகப் பேசினான்.

“என்னடா சொல்றே நீ” மல்லிகாவின் விழிகளில் திகைப்பிருந்தது.

“சுகன்யா என் மேல வெச்சிருக்கற அன்பு, நேசம், பாசம், இதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியலையாம்மா? இந்த குணங்களை யாராலும் கண்ணால பார்க்க முடியாதுதான். ஆனா ஒருத்தர் பழகற விதத்துல இதை எல்லாத்தையும் நாம நல்லாப் புரிஞ்சுக்க முடியும்.”

“ஜாதியை கண்ணால பார்க்க முடியுமா? இல்லே … ஒருத்தர் பேசறதை, பழகறதை வெச்சுத்தான் யார் எந்த ஜாதியை சேர்ந்தவங்கன்னு எப்படி சரியா சொல்லமுடியும்? இல்லே ஒருத்தரோட உடல் நிறத்தை வெச்சுத்தான் சாதியை சொல்ல முடியுமா? இல்லே ஒருத்தரோட உணவு பழக்கத்தை வெச்சு யார் எந்த ஜாதின்னு சொல்லமுடியுமா?

நான் அடிபட்டு ஆஸ்பத்திரியில என் சுயநினைவு இல்லாம இருந்தப்ப அவ ஓடி வந்து தன் ரத்தத்தை குடுத்தா; அப்ப அவ ஜாதி என்னன்னு நாம யாரும் கேக்கலைம்மா. யார் கண்ணுக்கும் தெரியாத அவ ஜாதி உனக்கு ஏம்ம்மா இப்ப தெரியுது” செல்வா நிதானமாக பேசினான்.

“செல்வா, அதெல்லாம் எனக்கு தெரியாம இல்லடா. போன வாரம் பூரா அந்த பொண்ணு உனக்காக உண்மையா உருகிப் போய் நின்னதை என் கண்ணாலப் பாத்தேண்டா. அதனாலத்தான் நீ செய்ததுக்கு எல்லாம் நன்றின்னு என் கையெடுத்து அவளை கும்பிட்டு நின்னேண்டா.

3 Comments

  1. Kallyanam eapoo seekram sollunga romba boor adikuthu

  2. மொக்கை

  3. Cont.. mannichudunga ram story

Comments are closed.