கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 17 11

“அம்மா … ஒரு நிமிஷம் உக்காரும்மா … என்னைக் கட்டிக்க வர்றவன் நான் என்ன ஜாதின்னு கேப்பான்னு நீ சொல்றே. அப்படி அவன் கேட்டா நீ சொல்ற மாதிரி அதுல கொஞ்சம் அர்த்தம் இருக்குன்னு நான் ஒத்துக்கறேன். ஆனா என் அண்ணியோட ஜாதி என்னான்னு எவனாவது கேட்டா அதுல என்ன ஞாயம் இருக்கு? அப்படி கேக்கறவனை நான் ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்?”

“இப்ப காலமும் மாறிக்கிட்டு இருக்கும்மா; நாமும் கொஞ்சம் கொஞ்சமா மாறித்தாம்மா ஆகணும். அம்மா! செல்வாவை நீ எவ்வள தூரத்துக்கு தடை பண்ணுவே? இதுக்கு மேல அவன் உன்னைத் தூக்கி எறிஞ்சுட்டு முடிவா சுகன்யா பின்னால போறதுக்கு முன்னாடி, இந்த கல்யாணத்துக்கு நீ சரின்னு சொல்லும்மா.” மீனாவும் விடாமல் பேசினாள்.

“பேசி முடிச்சிட்டியாடி நீ” மல்லிகாவின் முகம் சிவந்து கொண்டிருந்தது.

“அம்மா … அந்த சாவித்திரி என்ன முயற்சிப் பண்ணாலும், ஜானகி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டா; அதை நீ நல்லாப் புரிஞ்சுக்கோ; நீ என்ன சொன்னாலும் செல்வா ஜானகியை கல்யாணம் பண்ணிக்க மாட்டான். ஜானகி ஏற்கனவே ஒருத்தனை லவ் பண்ணிக்கிட்டு இருக்கா. செல்வாவும், சுகன்யாவும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றாங்கங்கற விஷயம் அவளுக்கு நல்லாத் தெரியும். செல்வா, ஜானகியை பொண்ணு பாக்கப் போறதை அவ அம்மா அவகிட்ட இவன் போறதுக்கு பத்து நிமிஷம் முன்னாடித்தான் சொல்லியிருக்கா; அந்த எரிச்சல்லத்தான், கோவத்துலதான் அவ என் அண்ணனை சண்டைப் போட்டு அனுப்பிச்சிட்டா.”

இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்ன்னு நீ என்னை கேக்காதே?ரொம்ப சிம்பிள். நானும் ஜானகியோட தங்கை ஜெயந்தியும் ஒண்ணாத்தானேம்மா படிக்கிறோம். அவ என்னோட நல்ல சினேகிதிம்மா. உனக்கு தெரிஞ்சதைவிட அந்த சாவித்திரியைப் பத்தி எனக்கு அதிகமா தெரியும்.”

“ம்ம்ம் … அதனால …” மல்லிகா தன் பொறுமையை இழக்கத் தொடங்கியிருந்தாள்.

“என்னைத் தப்பா நினைக்காதேம்மா; சுகன்யாவை வேண்டாம்ன்னு சொல்றதுக்கு இன்னும் ஒரே ஒரு காரணம் தான் உங்க கிட்ட இருக்கு. இவங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு முன்னாடி கொஞ்ச நேரம் தனியா இருந்தாங்கன்னு சொல்லுவே! அவ்வளவுதானே?

3 Comments

  1. Kallyanam eapoo seekram sollunga romba boor adikuthu

  2. மொக்கை

  3. Cont.. mannichudunga ram story

Comments are closed.