கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 17 11

செல்வா, ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வந்து இரண்டு நாட்களாகியிருந்தது. அவன் கால் வீக்கம் கணிசமாக குறைந்திருக்க, காலில் வீக்கத்திற்கு
“க்ரெப் பேண்டேஜ்” போடச்சொல்லியும், காலை மாலை இரு வேளைகளிலும், வெதுவெதுப்பான நீரீல் பத்து நிமிட நேரம் தன் வீக்கமுள்ள காலை வைத்திருக்க வேண்டும் எனவும், அவனுக்கு மருத்துவர்களால் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது.

அவன் தலையிலிருந்த கட்டு அவிழ்க்கப்பட்டுவிட்டது. காதுக்குப் பின்னால் போடப்பட்ட தையல்கள் பிரிக்கப்பட்டு, காயம் ஆறிக்கொண்டிருந்தது. இடது கையில் சுற்றப்பட்டிருக்கும் பிளாஸ்டரை இன்னும் ஒரு வாரத்தில் பிரித்து விடலாம் என டாக்டர் சொல்லியிருந்தார். அடுத்த சில நாட்கள் வரை அதிகமாக நடக்கவேண்டாம் எனவும், மிகவும் அவசியமான நேரங்களில் வாக்கிங் ஸ்டிக் துணையுடன் மெதுவாக வீட்டுக்குள்ளேயே அவன் நடக்க அனுமதிக்கப்பட்டிருந்தான்.

“காபி சூப்பர்ம்மா, டிஃபன் என்னப் பண்ணப்போறேம்மா?”

“டேய் உங்கப்பா இன்னைக்கும், நாளைக்கும் வீட்டுலத்தானே ஓய்வா இருக்கப் போறார்? அவரை அந்த சுந்தரம் மெஸ்லேருந்து டிஃபன் வாங்கிட்டு வரச்சொல்லு. எனக்கும் உன் பின்னால அலைஞ்சு உடம்பு அலுத்துப் போயிருக்குது. எனக்கு மட்டும் லீவு வேணாமா? சமையலுக்கு இன்னிக்கு நான் லீவு விட்டுட்டேன். நானும் ரெண்டு நாளைக்கு நாள் பூரா நிம்மதியா படுத்து இருக்கப் போறேன்.”

“அம்மா, நான் வேணா சீனுக்கு போன் பண்ணட்டுமா? அவன் வீட்டுக்கு பக்கத்துலத்தானே அந்த மெஸ் இருக்கு? மீனா கேட்டுக்கொண்டே வெரண்டாவிற்கு வந்தாள்.

“மீனு, நீ சும்மா இருடி; இன்னிக்கு வொர்க்கிங்க் டே; அவன் வேலைக்குப் போக வேணாமா? போன வாரம் பூரா ராத்திரியில அவன்தான் இவன் கூட துணைக்கு இருந்தான். ஆஃபீசுக்குப் போறவனை நீங்க யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம். இப்பத்தானே காஃபி குடிக்கிறோம். இன்னொரு அரை மணி நேரம் கழிச்சு நான் போய் டிபன் வாங்கிட்டு வரேன்.” நடராஜன் குரல் கொடுத்தார்.

“நீங்கதான் ஒரு நாளைக்கு சமையல் பண்ணுங்களேன்? உங்களால முடியாதுன்னா; என்ன வேணா பண்ணுங்க; நான் இன்னைக்கு கிச்சன்ல நுழைய மாட்டேன்.” மல்லிகா மீண்டும் தீர்மானமாக தன் முடிவைச் சொன்னாள்.

“எப்பவும் சாப்பாட்டுப் பிரச்சனைதானா இந்த வீட்டுல? நீயும் உன் புள்ளையும் கடைசியா என்ன முடிவு பண்ணியிருக்கீங்க அதைச் சொல்லுங்க?” நடராஜன் அலுப்புடன் பேசினார்.

“நீங்க எதைப்பத்தி கேக்கறீங்க?”

“அதாம்மா; அண்ணன் கல்யாண விஷயம்தான்; வேறென்ன?” மீனா சிரித்தாள்.

“ஏண்டி; என் கல்யான விவகாரம் நீ சிரிக்கற அளவுக்கு அவ்வள சீப்பா போச்சா?”செல்வா மீனாவின் முதுகில் செல்லமாக அடித்தான்.

“நீங்க எதுக்கு இந்த விஷயத்தைப் பத்தி பேசும் போதே எப்பவும் அலுத்துக்கிறீங்க?” மீனா நடராஜனை சற்று கோபத்துடன் பார்த்தாள்.

“மல்லிகா, நீ தயவு செய்து உன் குரலை கொஞ்சம் இறக்கிப் பேசு. போன வாரம் நீ ஆடின கூத்துல இந்த தெருவுல நான் இறங்கி நடக்க முடியலை. ராமசுவாமி, என் கூட நடக்க வர்றவர், மணியான பசங்களாச்சே உங்களுக்கு, என்னப் பிரச்சனை, உங்க வீட்டுலேருந்து சத்தம் வந்ததைப் பாத்து ஆச்சரியமாப் போச்சுன்னு சிரிக்கிறார்.”

“சரிங்க; அன்னைக்கு நான் பேசினதுதான் உங்களுக்கு பெரிசா தெரியுதா? நான் யாருக்காக பேசினேன்? இவன் நல்லதுக்குத்தான் பேசினேன். இவன் என் புள்ளை மட்டுமில்லே; உங்க புள்ளையும்தான்; நீங்க என்ன முடிவுல இருக்கீங்க? அதை முதல்லச் சொல்லுங்க?”

“என் முடிவு? … என் முடிவு இதுல என்னாயிருக்கு? அவன் அவன், மனசுக்கு புடிச்சவளை இழுத்துக்கிட்டு வீட்டை விட்டு ஓடற இந்த காலத்துல, வீட்டுக்கு வந்து எனக்கு அவளைப் புடிச்சிருக்கு, பண்ணி வையுங்கன்னு இவன் கேக்கறான்; அவகூட இருந்து வாழப் போறவன் செல்வா; அவன் இஷ்டப்படி, சுகன்யாவை இவனுக்கு கட்டி வெக்க வேண்டியதுதான். அந்த பொண்ணு வீட்டுலயும் சரின்னு சொல்லும் போது எனக்கு என்னப் பிரச்சனை?

“ம்ம்ம் … நான் தெரியாமத்தான் கேக்கிறேன். உங்களுக்கு, கொஞ்சமாவது நீங்க பெத்து வெச்சிருக்கற பொண்ணைப் பத்திய கவலை இருக்கா?”

“என் கல்யாணத்துக்கும், அண்ணன் கல்யாணத்துக்கும் இப்ப ஏம்மா நீ முடிச்சு போடறே?” மீனா தயங்கி தயங்கி பேசியவள், தன் தந்தையின் பக்கத்தில் நெருங்கி உட்க்கார்ந்து கொண்டாள்.

“நீ செத்த நேரம் சும்மா இருடி? இப்ப உங்கிட்ட யாரும் எந்த அபிப்பிராயமும் கேக்கலை.” மல்லிகா தன் பெண்ணின் வாயை அடக்கினாள்.

3 Comments

  1. Kallyanam eapoo seekram sollunga romba boor adikuthu

  2. மொக்கை

  3. Cont.. mannichudunga ram story

Comments are closed.