எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 2 78

அங்கே கோவிலில்,
சேகர் நேரே கோயிலுக்குச் பின்புறம் ஹேமா கைகழுவிய இடத்திற்கு சென்றான். அங்கே அந்த நால்வரும் நின்றுகொண்டிருந்தார்கள் சேகர் அங்குசென்று “என்ன மச்சான் அடி பலமா விழுந்துடுச்சா” என்றான். அதற்கு அவன் நண்பன் “ஆமாடா நீ விளையாட்டுக்கு அடிப்பனு நெனச்சா சீரியஸா அடிக்கிற”. “சாரி மச்சான் சரி ஐட்டம் எப்படி”. “டேய் செமையா இருக்காடா மச்சான் விட்டுராத” என்று ஒருவன் சொன்னான். “சேகர் ட்ரை பண்ணிகிட்டே இருக்கேன் கிடைச்சுதுனா எல்லாருமே சேர்ந்து முடிச்சிடலாம் டா” என்றான் அதற்கு ஒருவன் மச்சான் நம்ம எல்லாத்துக்கும் இதுதாண்டா ஃபர்ஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் என்று சொன்னான். அதற்கு சேகர் அதான்டா இவ்ளோ வேல பண்றோம் என்று சொல்லி விஷமாக சிரித்தான். இவர்கள் வேறு யாருமல்ல சேகரின் காலேஜ் டிபார்ட்மென்ட் நண்பர்கள் ஊர் திருவிழாவிற்காக இவன்தான் வரசொன்னான். ஹேமா சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அவன் நண்பர்களுக்கு போன் செய்து கோவில் பின்புறம் வந்து நிற்குமாறு விஷயத்தை கூறினான். அவர்களும் வந்து நின்றார்கள் ஹேமா கைகழுவ செல்லும்போது சேகர் போன் பேசியது அவர்கள் நால்வருள் ஒருவனுக்கு தான். ஹேமாவை காட்டுவதற்காக. அவர்களும் அவன் சொன்னது போலவே கேலி செய்தார்கள் .இதுவே நடந்த சம்பவம்.

மறுப்பக்கம்
ரகுவை அவன் நண்பர்கள் கோவிலை விட்டு வெளியே கூட்டிச் சென்றார்கள்.

ரகு : எங்கடா போறோம்

வினோத் : இது என்னடா கேள்வி எப்பவுமே எங்க போகும்

குமார் : அதானே இன்னைக்கு உன்னோட ட்ரீட்

ரகு : டேய் இன்னைக்கு வேணாண்டா நாளைக்கு நைட் என்னோட ட்ரீட்

குமார் : ஏன்டா???

ரகு : அது நாளைக்கு சொல்றேன்

வினோத் : என்னடா சஸ்பென்ஸ் வைக்கிற

ரகு : அது நாளைக்கு என்னுடைய ட்ரீட் இதுல எந்த சந்தேகமும் வேண்டாம்

வசந்த் : சரிடா அவன் நாளைக்கு ட்ரீட் வைக்கட்டும் இன்னைக்கு என்னோட ட்ரீட்.

குமார் : தோடா புது மாப்பிள்ளை செலவு பண்றான்

ரகு : என்னடா சொல்ற புது மாப்பிள்ளையா

குமார் : ஆமாடா இன்னைக்குதான் கோயில்ல வச்சு பேசி முடிச்சாங்க