இந்த வீட்டின் உரிமையாளர் 5 61

பெண்கள் தவறினால் அது துரோகம் தவறு அதுவே ஆண்கள் செய்தால் அது ஒரு வடிகால் மன்னிக்கப்படனும் ஏன் இந்த பாகுபாடு ஆண்களுக்கு இருக்கும் அதே ஆசாபாசங்கள் உடற்தேவைகள் எல்லாம் பெண்களுக்கும் இருப்பது இயற்க்கை தானே அப்படி இல்லை என்றால் எந்த ஆணுக்கும் ஒரு பெண் கிடைத்து இருக்க மாட்டாளே கற்பு என்பதற்கு ரெண்டு அர்த்தங்கள் இருப்பதாக நான் கேள்விப்படவில்லையே அந்த வார்த்தையே ஆண்களின் கண்டுப்பிடிப்பு தானே பெண் மட்டும் உடல் பசி எடுத்தால் அவள் கட்டிக்கொண்டவன் வந்து அந்த பசியை தீர்க்கும் வரை காத்திருக்கணும் அதுவே ஆண்கள் வழியில் பசித்தால் ஹோட்டல் சென்று பசியாற்றி கொள்வது போல கிடைக்கும் பெண்களுடன் தன்னுடைய இச்சையை தீர்த்து கொள்வார்கள் அது தவறாக கருதப்படுவது இல்லை. இது பாரபட்சமான ஒரு நியாயம் இல்லையா யோசிக்கும் போது எனக்குள் ஒரு மிருகம் உறுமியது உணர முடிந்தது. இந்த எண்ணம் வளர்வது நல்லது இல்லை என்று எழுந்து குளிக்க சென்றேன். அது தானே பெண்கள் உள்ளே எழும் தீக்கு பதில் குளித்த பிறகு மனம் கொஞ்சம் அமைதி அடைய தூங்கலாம் என்று படுக்கையில் சாய்ந்தேன்.

எழுந்த போது மணி ஐந்து . முகம் கழுவி உடை மாற்றும் பழக்கத்தில் உடையை தேடும் போது தான் நான் மாற்று உடை என்று ஏதும் எடுத்து வரவில்லை என்ற நினைவு வந்தது. வேறு வழியில்லாமல் அணிந்து இருந்த உடையையை சரி செய்து கொண்டு ஹாலில் உட்கார்ந்தேன். விக்ரம் நினைத்ததை விட சீக்கிரமாகவே வந்து விட்டான். நான் அதே உடையில் இருப்பதை அவனும் கவனித்து நித்தியா என்ன உடை கூட மாற்றாமல் இருக்கிறே என்று கேட்க நான் விக்ரம் நான் மாற்று உடை கூட எடுத்து வரவில்லை என்றேன். விக்ரம் புரிந்து கொண்டு சரி வா இங்கேயெல்லாம் கடை சீக்கிரமே மூடி விடுவார்கள் உனக்கு மாற்று உடை வாங்கி வரலாம் என்றான். நான் அவனிடம் காலையில் தவறுதலாக ரோஷனிடம் பேசினதை சொன்னதும் விக்ரம் தலையில் அடித்து கொண்டு என்ன நித்தியா ஏன் அப்படி செய்தே இங்கே இருக்கிறதை சொல்லி விட்டாயா என்று கேட்க நான் இல்லை சொல்லவில்லை என்றேன்.