இந்த வீட்டின் உரிமையாளர் 5 61

இருவரும் தனியாக இருந்த இந்த ஒரு நாளில் ரொம்ப நாள் பழகிய நண்பனை போன்ற நெருக்கம் உண்டானது இருந்தாலும் இவனிடம் எவ்வளவு நெருங்கலாம் மனம் திறந்து பேசலாம் என்ற ஐயப்பாடு இருக்கத்தான் செய்தது. சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் மேல் ஆனது உடம்பு தானாக சாய விரும்பியது. விக்ரம் நீ கட்டிலில் படுத்துக்கோ நான் தரையில் படுக்கறேன் என்றதும் அவன் என்ன இன்னும் நம்பிக்கை வரவில்லையா சரி உன் இஷ்டம் என்று சொல்லி எனக்கு தரையில் ஒரு கம்பளத்தை விரித்து தலையணை போட்டு போர்வையும் எடுத்து குடுத்தான். நித்தியா நீ படுத்து கொள் இரவு ஒரு முக்கியமான கால்பந்து போட்டி இருக்கு சவுண்ட் வைக்காமல் நான் பார்த்து விட்டு பிறகு படுக்கிறேன். குட் நைட் என்று சொல்ல நானும் படுத்து கொண்டு முந்திய நாளை போலவே போர்வையால் முகம் முழுக்க மூடி கொண்டு படுத்தேன். ஆனால் முந்திய இரவு இருந்த பயம் இன்று இல்லை அது தான் திருடன் ரோஷன் இல்லையே.

அன்று இரவு பல நாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினேன். அடுத்த நாள் காலையில் விக்ரம் வெளியே கிளம்பும் போது என்னிடம் கதவை பூட்டி கொண்டு போகிறேன் உனக்கு ஏதாவது அவசரம் என்றால் என் மொபைலை கூப்பிடு வந்து விடுவேன் இரவு உணவு வாங்கி வந்து விடுகிறேன் என்றான். நான் விக்ரம் உன்னாலே ஒரு பதினைந்து நிமிடம் இருக்க முடியுமா நான் அருகே கடைக்கு சென்று விட்டு வருகிறேன் என்றேன். அவன் என்ன வேணும் சொல்லு நானே வாங்கி வருகிறேன் என்று சொல்ல நான் இல்லை நானே போகிறேன் எனக்கு பணம் மட்டும் குடுக்க முடியுமா என்றேன். விக்ரம் அருகே இருந்த அலமாரியை திறந்து விட அதில் பணம் நகை எல்லாமே இருந்தது. நான் எடுக்கட்டுமா என்று கேட்க அவன் தாராளமாக என்றான். நான் தேவையான பணத்தை எடுத்து கொண்டு அருகே இருந்த கடைக்கு சென்று சமையல் செய்ய தேவையான பொருட்களை வாங்கி கொண்டு திரும்பினேன். விக்ரம் என்ன வாங்கினேன் என்று பார்த்து நித்தியா அப்போ இரவு சாப்பாடு நீ தான் என்று சொல்ல எனக்கு அவன் சொன்ன சாப்பாடு நீதான் என்பது கொஞ்சம் உதைக்க நான் என்ன சொல்லறே என்று கேட்க அவன் நீ சமைக்க தானே வாங்கி வந்தே இரவு சாப்பாடு உன்னுடையது தானே என்றதும் நான் சரி சீக்கிரம் வந்து விடு சூடு ஆறினா சாப்பாடு சுவைக்காது என்றேன். விக்ரம் தலை ஆட்டிக்கொண்டே வெளியே சென்றான்.