இந்த வீட்டின் உரிமையாளர் 5 61

விக்ரம் இருந்த அறையில் என் மொபைலை விட்டு விட்டு வந்து இருந்தேன். கொஞ்ச நேரத்தில் அதன் மணி ஒலிக்க அது விக்ரம் தூக்கத்தை கெடுத்து விட கூடாதுன்னு ஓடி போய் எடுத்து சைலென்ட் மோடில் மாற்றி யார் என்று பார்த்தேன். வேறு யார் ரோஷன் பொறுக்கி தான் நான் அடுத்த அறைக்கு சென்று ரோஷன் என்னை அழைக்கதேனு சொல்லி இருக்கேன் பிறகு ஏன் டிஸ்டர்ப் செய்யறே என்று கேட்க அவன் நித்து நீ எங்கே இருக்கே நவீன் சிகிச்சைக்கு பணம் கேட்கறாங்க என்னால் முடிந்த பணம் முழுசும் கட்டியாச்சு என்று சொல்ல நான் ஏன் உன் கூட நவீனை பார்க்க வந்தாலே ஒரு சிறுக்கி நவீனுக்கு மடி மேலே படுக்க வச்சு உணவு ஊட்டினாலே அவளை குடுக்க சொல்லு நான் என் அம்மா வீட்டிற்கு போய் விட்டேன் நீ ஆச்சு நவீன் ஆச்சு என்னை தொந்தரவு செய்யாதே என்று கோபமாக சொல்ல ரோஷன் நித்து ஏன் இப்படி அப்பட்டமா பொய் சொல்லறே இப்போ நான் பேசறதே உங்க வீட்டில் இருந்து தான் அங்கிள் ரொம்ப கவலையா இருக்கார் சரி நீ எங்கே இருக்கேன்னு சொல்ல வேண்டாம் அட்லீஸ்ட் உனக்கு துணைக்கு யார் இருக்காங்க அது தெரிஞ்சா அங்கிள் கொஞ்சம் நிம்மதி அடைவார் என்று சொல்ல இந்த சிறிய காலத்தில் அவன் எப்படியெல்லாம் பேசி விஷயத்தை கறப்பான் இப்போ கண்டிப்பா அவன் சந்தேகம் எல்லாம் விக்ரம் மேலே தான் இருக்கும்னு நல்லா புரிஞ்சுது விக்ரமை காட்டி குடுக்க விரும்பவில்லை அதனால் ரோஷனிடம் எனக்கு யாரும் துணை இல்லை தனியா தான் இருக்கிறேன் என்னை பற்றி என்னை பாதுகாத்துக்கொள்ள எனக்கு தெரியும் என்று போனை கட் செய்தேன்.