இந்த வீட்டின் உரிமையாளர் 5 61

விக்ரம் உடனே அப்போ முதலில் அந்த வேலையை ஆரம்பிக்க வேண்டியது தானே அதில் உனக்கு ரெண்டு நன்மைகள் உனக்கும் ஒரு வேலை இருக்கும் நவீன் குணம் அடைஞ்ச பிறகு பெங்களூரில் இருந்தால் மீண்டும் அவன் பழைய பழக்கங்களுக்கு அடிமை ஆவது சுலபம் ஆனால் சென்னையில் புதிய இடம் உன்னை மற்றுமே நம்பி இருப்பான் குடும்பம் நல்ல படியாக நடத்த முடியும் அவன் சொல்ல சொல்ல எனக்கு அந்த வழி பிடிக்க ஆரம்பித்தது. ஆனால் சென்னையில் எங்கே போவேன் தோழிகள் உதவி செய்வார்களா அங்கே வேலை கிடைப்பது எளிதா போன்ற கேள்விகள் எழுந்தன.

அவற்றை விக்ரமிடமே கேட்டேன். அவனும் நித்தியா நீ கேட்கறதும் உண்மை தான் சென்னை பெரிய ஊர் தான் என்றாலும் உதவி செய்பவர்கள் கொஞ்சம் கம்மி தான் இருந்தாலும் முயற்சி செய்வது தப்பில்லை. ஒண்ணு பண்ணுவோம் நான் காலையில் இங்கே இருக்கும் என் வேலைகளை சில நாட்கள் என் நண்பர்கள் கூட்டாளிகளை பார்த்துக்க சொல்லிவிட்டு சென்னைக்கு உண்டு வரேன் ஒரு வாரம் இருந்து முயற்சிப்போம் பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு என்றான். நானும் சரி விக்ரம் ரொம்ப செலவு ஆகும் என்றால் என் நகைகள் சிலதை குடுக்கிறேன் இங்கேயே அதை காசாக்கி குடு என்று சொல்லி விட்டு என் கைபையில் வைத்து இருந்த ரெண்டு சங்கிலி தங்க கொலுசு ரெண்டு மோதிரங்கள் எல்லாவற்றையும் எடுத்து அவனிடம் குடுத்தேன். அவன் அவற்றை பத்திரமாக அவனுடைய பிரீப் கேசில் வைத்து விட்டு சரி நான் காலையிலேயே கிளம்பறேன். என்று தயாரானான்.

விக்ரம் வழக்கம் போல வெளியே செல்லும் போது வெளிப்பக்கம் போட்டி கொண்டு சென்றான். இந்த முறை அவன் மொபைல் நம்பரை வாங்கி கொண்டேன். அவன் சென்றதும் நான் என் உடமைகளை எடுத்து வைத்து கொண்டு இந்த இடத்தை விட்டு கிளம்ப தயாரானேன். அப்போது என் பெட்டியை திறந்து பொருட்களை பெட்டிக்குள் வைக்க பெட்டியில் நானும் நவீனும் சேர்ந்து எடுத்த ஒரு படம் பார்த்து கொஞ்ச நேரம் அழுதேன். என் திருமண வாழ்க்கை தொங்கி ஒரு வருடத்திலேயே இப்படி முடியற நிலையில் இருக்கேன்னு. இன்னொரு எண்ணமும் வந்தது. இங்கிருந்து அருகே இருக்கும் ஊருக்கு சென்று நவீனை பார்த்து விட்டு பிறகு சென்னைக்கு போகலாம் என்று முடிவு செய்து விக்ரமை அழைத்து அந்த ப்ளான் சொன்னேன். அவனும் உன் இஷ்டம் சரி ரெடியா இரு அப்போ நாம் சீக்கிரம் கிளம்பி அங்கே சென்று உன் கணவரை பார்த்து விட்டு திரும்பி பிறகு சென்னைக்கு பயணிக்கலாம் என்றான். சொல்லி கொஞ்ச நேரத்திலேயே விக்ரம் வந்து என்னிடம் இந்தா நீ குடுத்த நகைகளுக்கு கிடைத்த பணம் என்று ஒரு கவரை குடுக்க நான் அவனிடமே குடுத்து இப்போதைக்கு செலவு செய் பிறகு பார்த்து கொள்ளலாம் என்றேன்.