இந்த வீட்டின் உரிமையாளர் 5 61

வெளியே சென்ற விக்ரம் மத்தியானத்திற்கு பிறகு தான் வந்தான் அவன் ஊரிலே இவ்வளவு வெயில் அனுபவிச்சு இருக்க மாட்டான் உள்ளே ஏசி அறைக்குள் வந்ததும் வாடிய ரோஜா தண்ணீர் தெளித்தால் எப்படி கொஞ்சமாக மலருமோ அது போல முகம் மலர எனக்கே அவனை பார்க்க பாவமாக இருக்க அவனிடம் விக்ரம் நீ போய் அந்த அறையில் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு ரொம்ப டையர்டா இருக்கே என்றேன். அவனும் சொன்னா போதும் என்ற கணக்கில் எழுந்து சென்று படுக்கையில் சாய்ந்தான். போட்டிருந்த ஷூ கூட கழட்டவில்லை. நான் எழுந்து சென்று அவன் ஷூவை கழட்டி விட்டு சாக்ஸையும் கழட்டி விட விக்ரம் நித்தியா இப் யு டோன்ட் மைண்ட் கொஞ்ச நேரம் பாதங்கள் மட்டும் மசாஜ் செய்ய முடியுமா இந்த வெயிலில் நடந்ததால் நெறைய வாட்டி கிராம்ப்ஸ் வந்தது எப்படியோ சம்மாளிச்சு வந்து சேர்ந்தேன் என்றான். நான் எதுக்கு நடந்து வந்தே விக்ரம் ஆட்டோ இல்ல கால் டாக்ஸி எடுத்து இருக்கலாமே என்று கேட்க இல்ல நித்தியா நாம் இங்கே எத்தனை நாள் தங்க போறோம்னு தெரியலை உன்னிடமும் பணம் இல்லை அது தான் கொஞ்சம் சிக்கனமா செலவு செய்ய நினைத்தேன். அது மட்டும் இல்ல நீயும் நானும் சேர்ந்து போகும் போது உன்னை நடத்தி கூட்டி போக முடியாது அப்போ கண்டிப்பா கால் டாக்ஸி எடுக்கணும் என்று சொல்ல நான் பதில் சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தேன்.

பிறகு சரி காலை நீட்டி படு விக்ரம் பாதங்களை அமுக்கி விடுகிறேன் என்று சொல்ல விக்ரம் கால் நீட்டி படுக்க அவன் அணிந்து இருந்த ஜீன்ஸ் பாண்ட்டை மேலே உயர்த்தி விட்டு பாதங்கள் துவங்கி கணுக்கால் வரை மிதமான அழுத்தம் குடுத்து அமுக்கி விட்டேன். விக்ரம் எப்போ தூங்கினான் என்று பார்க்கவில்லை. ஒரு ஆச்சரியம் நவீன் கால்கள் ஆகட்டும் அந்த பொறுக்கி ரோஷன் கால்கள் ஆகட்டும் முரட்டு தனமா இருக்கும் ஆனால் விக்ரம் கால்கள் வெள்ளைவெளேரென்று வாழைத்தண்டு போல இருந்தன அதை அமுக்கும் போது கைகளுக்கு வலி தெரியவில்லை அழுத்தி விட்டு கையை எடுக்கும் போது அழுத்தின இடத்தில் புது ரத்தம் பாய்ந்து பச்சை கலந்த இளம்சிகப்பு நிறத்தில் கால்களின் நிறம் மாறியது பார்க்க நன்றாக இருந்தது. நன்றாக தூங்கி விட்டான் என்று தெரிந்து கொண்டு எழுந்து அடுத்த அறைக்கு சென்றேன்.