இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 6 127

சுபர்ணா: என்ன கலை.. நான் சொல்ல வர்றதை ரெண்டு காது கொடுத்து கேக்க மாட்டியா?

கலை அமைதியாக இருந்தாள்..

சுபர்ணா: தேங்க்ஸ் கலை.. இந்த நாய் எவ்ளோ மோசமானவன் ன்னு எனக்கு தெரியும்.. நீ எதுவும் பாதிக்கப்பட கூடாது ன்னு சொல்றேன்.. அவன் அவ்ளோ நேரம் யோசிச்சுட்டு அடுத்து யாருக்கோ போன் போட்டு பேசிட்டு இருந்தான்.. நான் எதுவும் பெருசா கண்டுக்கல.. ஆனா அவன் பேசுறது என் காதுல தானா விழுந்தப்போ தான் கவனிச்சேன்..ரொம்ப வித்தியாசமா சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்தான்..

சரி யாருகிட்ட பேசுறான் ன்னு கொஞ்சம் எட்டி பாத்தப்போ “மஞ்சு” ன்னு நேம் இருந்துச்சு.. நீ கூட ஒரு தடவை உங்கம்மா நேம் கூட மஞ்சு ன்னு..

கலை என்ன சைலன்ட் ஆ இருக்குற.. கலை இருக்கியா??

கலை..

ஹலோ கலை..

கலை என்னாச்சு லைன் ல இருக்கியா??

கலையின் கைப்பேசியில் சுபர்ணா வின் குரல் வந்து கொண்டே இருக்க,, கலை அங்கு இல்லை.. தன் தாயின் பெயரை கேட்ட அந்த நொடியில் கைப்பேசியை அப்படியே மெத்தையில் போட்டுவிட்டு தன் தாயை தேடி கொலை வெறியுடன் வேகமாக எழுந்து சென்றாள்..

தொலைக்காட்சி பேட்டியின் ஒலிப்பான் செயலிழந்து விட்டதா? என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு மிக மிக மெல்லிய சத்தத்துடன் தொலைகாட்சி ஓடிக் கொண்டிருந்தது.. கேட்பார் யாருமில்லாமல் மின்னிக்கொண்டிருந்த அந்த தொலைக்காட்சியில் சிறிதும் நாட்டம் செலுத்தாமல், அதற்கு நேர் எதிரே நாற்காலியில் மஞ்சு உட்கார்ந்திருந்தாள்.. அவள் கண்கள் மட்டும் வெறுமென தொலைகாட்சி திரையை பார்த்துக்கொண்டிருக்க, அவள் கவனம் முழுவதும் அவள் காதில் இருந்த கைப்பேசியில் தான் இருந்தது..

மஞ்சுவுக்கு அப்படியே பின்னால் அவள் பெற்றெடுத்த கலை கண்களில் கொப்பளிக்கும் கோபத்துடன் பத்திரகாளி போல நின்றிருந்தாள்.. மஞ்சு பேசும் வார்த்தைகள் யாவும் அலையாய் பறந்து கலையின் செவியை வந்தடைவதற்குள் இருவருக்குள்ளும் இருந்த தொலைவு காரணமாக வார்த்தைகள் காற்றில் கரைந்து போனது.. “தன் தாய் என்ன பேசுகிறாள்?” என்ற கலையின் கேள்விக்கு, இருவருக்குள்ளும் இருந்த தொலைவு விடை கொடுக்க மறுத்தது. அதே போல “அந்த நயவஞ்சகனோடு பேசும் பொழுது தன் தாயின் முகப்பாவனை எப்படி இருக்கிறது?” என்ற கேள்விக்கு, மஞ்சு அமர்ந்திருந்த விதம் விடை மறுத்தது..

“என்ன பேசுகிறாள் என்று தெரியவில்லை, எப்படி பேசுகிறாள் தெரியவில்லை” என்ற ஆதங்கம் அவளின் கோபத்தில் எண்ணெய் தெளித்து விட, வேகமாக மஞ்சுவின் முன் நின்றாள்..

கலை: யாரு கூட பேசிட்டு இருக்குற இப்போ??

கலையை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல், அவளை உதாசீன படுத்தி விட்டு, கைபேசியில் “ஆமா அவ தான்.. வந்து மொறச்சிட்டு நிக்குறா!! வேலையும் தொலைச்சிட்டு, எவனையோ கூட்டி வந்து கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம லவ் பன்றேன்னு சொல்லிட்டு, இப்போ என்னை வந்து மொறச்சிட்டு நிக்குறா!!!”

கைபேசி எதிர்முனை: (மஞ்சுவின் காதில் ஏதோ சொல்ல)..

1 Comment

  1. தலைப்பு பிழை

Comments are closed.