இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 6 126

“யேஏஏஏஏ…” என்றபடி கிஷோரின் அம்மா புவனேஷ்வரி கிஷோரை கட்டி அணைத்து கன்னத்தில் நெற்றியில் மாற்றி மாற்றி முத்தமிட்டு “டேய் நான் உன்னை என்னமோ ன்னு நினைச்சேன் டா.. அவங்க வீட்டுல பேசி சம்மதம் வாங்குறதுக்கு எப்படியும் ஒரு வருஷம் ஆக்கிருவ ன்னு நினச்சேன்.. ஆனா கலைய வீட்டுல விட்டுட்டு வர்றேன் ன்னு சொல்லிட்டு போயிட்டு அவங்க அப்பா கிட்ட சம்மதம் வாங்கிட்டு வந்துருக்க.. என் தங்கோம்ம்ம்…… உம்மாஆஆ”

கிஷோர்: ஐயோ போதும்மா சின்ன பிள்ளையை கொஞ்சுற மாதிரி கொஞ்சிட்டு இருக்குற.. நான் எதுவும் பிளான் பண்ணி போகல.. எல்லாம் தானா நடந்திருச்சு ம்மா..

ராம்: ம்மா எனக்கு இவன் மேல சுத்தமா நம்பிக்கையே இல்ல.. அண்ணி தான் அவங்க அப்பாகிட்ட பேசி சம்மதிக்க வச்சிருப்பாங்க ன்னு தோணுது..

புவனேஷ்வரி: இருக்கட்டும் டா.. இவ்ளோ தைரியமான பொண்ணை செலக்ட் பண்ணது அவன் தான..

நாகராஜன்: ம்ம்ம் சரி நீங்க ரெண்டு பேரும் இருங்க.. நானும் அம்மாவும் ஜோசியர் வீட்டு வரைக்கும் போயிட்டு நிச்சயதார்தத்துக்கு நல்ல நாள் பாத்துட்டு வர்றோம்..

எல்லாம் நல்லபடியாக சென்றாலும், ஏதோ ஒரு பெரிய பாரம் தலைமேல் இருப்பதாக கிஷோர் உணர்ந்தான்.. ராகுல் தான் அந்த பாரம் என்று அவன் சொல்லிக்கொண்டாலும் அவன் மனமானது அதை விட பெரிய பாரமொன்று இருக்கிறது, அதை எப்படி சமாளிப்பாய் என்று கேள்வி கேட்டது.. கண்களை இறுக்க மூடி மூளையை போட்டு பிசைய, அந்த பாரம் என்னவென்று அவனுக்கு விளக்கியது..

“எவ்ளோ நாள் தான் இதை பத்தி பேசாம இருக்குறது.. இன்னைக்கு முழுசா பேசி இதுக்கு ஒரு முடிவு கட்டணும்” என்ற வைராக்கியத்தோடு கிஷோர் எழுந்து ராமின் அறைக்கு சென்று “தம்பி…. உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் டா”

ராம்: ஹாஹா முக்கியமான விஷயமா.. நேரா வந்து இதுதான் விஷயம் ன்னு பேச வேண்டி தான.. வித்தியாசமா கேக்குற..

1 Comment

  1. தலைப்பு பிழை

Comments are closed.