இதுக்கு முன்னாடி பொண்ணுங்கள பாத்தது இல்லையா? 6 126

எல்லாம் மறைந்து போயிருக்க அவனுக்கு முன்னே கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் பச்சை பசேலென்று சமமான பரந்த நிலப்பரப்பு.. அண்ணாந்து மேலே வானத்தை பார்த்தால் அப்படி தெளிவான வானம்.. வாகனங்கள் விடும் புகை, தொழிற்சாலைகள் கொப்பளிக்கும் ரசாயன காற்று எதுவும் இல்லாமல் தூய்மையான வானம்.. அந்த சூழலுக்கே உகந்த பரிசுத்தமான குளிர்ந்த காற்று அவன் நாசிக்குள் செல்ல அவன் உடலை உள்ளுக்குள் இருந்து குளிப்பாட்டியது போன்ற ஒரு உணர்வு..

“என்ன இது உணர்ச்சி பொங்கலில் மூர்ச்சையாகி உயிரை இழந்து சொர்கத்திற்கு வந்து விட்டேனா?” என்று எண்ணம் வந்தது.. ஆனால் அந்த எண்ணத்தால் அவனுக்கு அச்சம் வராமல் முகத்தால் எதிரே நிகழும் வினோதத்தை பருகிய வண்ணம் இருந்தான்.. அந்த பச்சையான பரந்த நிலப்பரப்பில் ஆங்காங்கே அழகிய மரங்களும் தொலை தூரத்தில் மலைக்குன்றுகளும் தென்பட்டது.. “ம்ம்ம்.. தான் செல்ல வேண்டிய இடம் அதுவே” என்று மனம் சொல்ல, அந்த திசையை நோக்கி நட என்று அவன் மூளை கட்டளையிட்டது.. ஆனால் அவன் கால்கள் கட்டளையை ஏற்க மறுத்து ஒரு அணு கூட அசையாமல் அப்படியே இருந்தது..

“தன் கால்களும் செயலிழந்து விட்டதா?” என்று கீழே பார்த்தான்.. கால்கள் முழுவதும் முற்கள் குத்தி இருந்தது.. மேலும் அவன் ஒரு ஒற்றை காலடி பாதையில் நின்று கொண்டிருந்தான்.. அந்த பாதையின் தொடர்ச்சி மலைக்குன்றுகளை நோக்கி சென்று கொண்டிருந்தது.. பாதை முழுதும் முற்கள் இருந்தது.. கால்களும் அசைய மறுக்க, எங்கே இருக்கிறோம்? என்ன செய்கிறோம்? என்ன நடக்கிறது? என்று எதுவும் புரியாமல் கிஷோர் தவித்துக் கொண்டிருந்தான்..

மனமானது எப்பொழுதெல்லாம் சங்கடத்தில் தவித்து திக்கற்று இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் அது தனக்கு விருப்பப்பட்டவர்களை நாடிச்செல்லும்.. கிஷோரின் மனம் தானாக கலையை நாடியது.. கடிவாளம் போடாத குதிரை போல சிந்தனைகள் கலையை தாண்டி பலதிக்கமும் ஓடி ராகுலிடம் வந்து நின்றது.. அவன் தரும் இன்னல்கள் அதில் இருந்து தப்பிக்கும் வழி என்றெல்லாம் சிந்தித்தான்..

“ராகுலின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு எங்கள் வாழ்க்கையில் இருந்து சென்று விடு” என்று கேட்டு விடலாமா என்று அவன் மனதில் எண்ணம் உதித்த அதே நொடியில் அவனுடைய வலது கால் தானாக ஒரு அடி முன்னே எடுத்து வைத்தது.. பாதையில் இருந்த முள் பாதத்தில் தைக்க, ராகுலின் பிம்பம் கண் முன் தோன்றி ஏளனமாக சிரித்து “என் காலை நக்கு டா நாயே.. அதுக்கு அப்புறம் வேணும்னா உன்னை மன்னிக்கலாமா? வேணாமா? ன்னு யோசிக்குறேன்” என்று கூறி மறைந்தது.. பாதத்தில் தைத்த முள் அவனுக்கு உடலில் வலி ஏற்படுத்தாமல், மனதில் வலி கொடுத்தது..

கிஷோருக்கு தான் பைத்தியம் ஆகியது போல உணர்ந்தான்.. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்று புரியவில்லை.. சூழ்நிலையை ஆராய்வதை கைவிட்டு “கலையை ராகுலிடம் இருந்து காப்பாற்றுவதற்கு அவன் சொல்லியபடி செய்வதில் தவறில்லை.. கலைக்காக அவனிடம் கெஞ்சுவதில் எனக்கொன்றும் இழுக்கில்லை” என்று அவன் மனதில் மற்றொரு எண்ணம் உதிக்க, அவனுடைய இடது கால் தானாக ஒரு அடி எடுத்து வைத்தது.. மற்றொரு முள் பாதத்தில் தைக்க சுவிட்ச் போட்டது போல சிவந்த முகத்தோடு ராகுலின் பிம்பம் தோன்றி “உன்னையும் அந்த தேவடியா முண்டையையும் சந்தி சிரிக்க வைக்கிறேன் டா” என்று கூறி மறைந்தது.. ராகுலிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடுவது போல கிஷோரின் மனதில் எண்ணங்கள் உதிக்க உதிக்க அவனுடைய கால்கள் ஒரு அடி முன்னே எடுத்து வைத்துக் கொண்டே இருந்தது.. பாதத்தை முற்கள் குத்தி கிழிக்க ராகுலின் பிம்பம் மனதில் வலியை கொடுத்த வண்ணம் இருந்தது..

1 Comment

  1. தலைப்பு பிழை

Comments are closed.