அவளும், அவ புருசனோட, புனே பக்கம் போய் செட்டிலானாலும், புருசன் குடிகாரன்னும், அடிக்கிறான்னு லெட்டர் வரும். அப்போ எல்லாம், அம்மாதான், அழுகிற அத்தைக்கு ஆறுதல் சொல்லுவாங்க. ஏம்மா, மாலதி பேசாம அவங்க அம்மா வீட்டுக்கே வந்துரவேண்டியதுதானேன்னு? கேட்டப்ப, “கஷ்டப்பட்டாலும், புருசன விட்டு பிரிஞ்சு வந்துட்டா, வாழாவெட்டின்னு ஊரு சொல்லும். அப்புறம் தங்கச்சிங்க வாழ்க்கையும் கெட்டுடும்னு, மாலதி எல்லாத்தையும் சகிச்சுகிட்டு, அவ புருசன் கூடவே இருகிறதா” அம்மா சொல்வாங்க. “பத்மா தன் பொண்னுகள தங்கமா வளர்திருக்கிறா”, அப்படின்னும் சொல்லுவாங்க. அத கேட்கிறப்ப எல்லாம், பத்மா அத்தை முகத்தில, ரொம்ப பெரும தெரியும். “என்ன அண்ணி பண்றது?, நம்மளமாதிரி இல்லாதவங்களுக்கு மானம்தான, அண்ணி முக்கியம்” அப்படின்னு சொல்லுவாங்க. அம்மாவும், அத்தையும் ரொம்ப நல்ல பிரண்ட்ஸ். ஊர் கத எல்லாம் இரண்டு பேரும் பேசிக்கிட்டே இருப்பாங்க.
சகுந்தலா என்னைவிட நாலு வயசு பெரியவ. எனக்கு இப்பவும், நல்லா ஞாபகம் இருக்குது, நான் முத முதலா, அந்த ஊர் ஸ்கூல்ல 1 ங் கிளாசு சேர்த்த அன்னிக்கு, ரொம்ப அழுது, “போகமாட்டேன்”னு அடம்பிடிச்சப்ப, எங்க அப்பாவும், அம்மாவும் “சகுந்தலா, சுந்தர நீதான் பாத்துக்கனும்னு” சொன்னவுடனே, ஸ்கூலுக்கு எங் கூடவே வந்து, “அழுகாத சுந்தர் நான் உன் கூடவே இருப்பேன் உனக்கு மிட்டாய் எல்லாம் வாங்கிதர்ரேன்னு” ஆசை காட்டி ஸ்கூலுக்கு கூட்டிட்டு போனவ சகுந்தலாதான். என் கிளாஸ் டீச்சர்கள்ட்ட, பெர்மிசன் வாங்கிக்கிட்டு என் கூடவே உட்கார்ந்து முத நாள் கிளாஸ்பூராம் அட்டெண்ட் செஞ்சா. ஐந்தாம் வகுப்பு ஸ்டுடண்ட் ,முதல் வகுப்பில உட்கார்ந்திருந்ததை, எல்லாரும் கேலி செஞ்சாலும், அவ அத பத்தி கொஞ்சங்கூட கண்டுக்கல. அவ நோக்கம் முழுசும் எனக்கு நம்பிக்கை ஊட்ரதிலதான் இருந்தது. அதே மாதிரி வகுப்பில என்ன யாராவது அதட்டினாலோ, அடிச்சாலோ முதல்ல சண்டைக்கு வர்ரவளும் அவளாதான் இருந்தா. படிப்பு, டான்ஸ், பாட்டுன்னு எல்லாத்துலயும் அவ பேருதான். எப்பவுமே ‘ஸ்கூல் பர்ஸ்ட் ரேங்க் கோல்டர்’ங்கிறதால அவதான் ‘கிளாஸ் லீடர்’. எல்லா டீச்சர்ஸுக்கும் அவ ‘பெட்’ங்கிறதால என் வழிக்கு வரவே மத்த பசங்க பயந்தாய்ங்க. என் கிளாசுக்கு, நேர் எதித்தாப்லதான் அவ படிச்ச 5 ங் கிளாசு A செக்சன் இருந்துச்சு. அவ உட்காந்திருந்த சன்னலோர கடைசி பெஞ்ச்சிலந்து அடிக்கடி என்ன பார்த்து ‘ஸ்மைல்’ பண்ணுவா. அந்த support ல தான், முதவருசம் நான் ஸ்கூலுக்கு போய்ட்டு வந்தேன். லஞ்ச்சப்ப அவளோட close friends மேகலாவையும், சாந்தியையும் கூட்டிகிட்டு எங்கூட சாப்பிட வந்துருவா. அப்படி என் கூட நல்ல பிரண்டா இருந்தவ சகுந்தலா.
நாங்கெல்லாம் அப்பா அம்மா விளையாட்டு விளையாடுறப்ப, அவதான் எப்பவுமே அம்மா, நான் அவளுக்கு அடங்கி நடக்கிற அப்பா, மத்தவங்கெல்லாம் புள்ளைங்க, யாராவது ‘ரோல்’ மாத்தி வேணும்னு கேட்டா அவங்க அன்னிக்கு ‘டீச்சர்’ வேசம் கட்டலாம். எங்க ஆட்டத்துல சொப்பு பாத்ர சமையல், மணல்ல வீடு கட்றது, குழந்தைகள ஸ்கூலுக்கு அனுப்றது, மார்க் கம்மியா வாங்கின பிள்ளைகளை திட்றது, டீச்சர் பாடம் நடத்துறது, ஸ்கூல் டீச்சர்கிட்ட போய், பிள்ளைங்க சரியா படிக்க மாட்டீங்கறாங்கன்னு சொல்லி டீச்சர்விட்டு அடிக்க வைக்கிறது, அப்பறம் ராத்திரி ஆயிடுச்சு எல்லாரும் கண்ண நல்லா மூடி படுத்து தூங்குங்கன்னு சொல்லி, பிள்ளைகள படுக்க வச்சுட்டு, அப்பா, அம்மா ரெண்டு பேரும் மாறி மாறி முத்தம் கொடுத்துக்கிட்டு, பக்கத்துல பக்கத்துல கட்டிவச்சு படுக்கிறதுன்னு subject மாறாது, ஆர்டர் மட்டும்தான் அன்னைக்கு விளையாட வந்திருகிற ஆள்கள வச்சு மாறும். அதயும் சகுந்தலாதான் முடிவு பண்ணுவா.எங்க ஜோடிய மாத்த சகுந்தலா ஒத்துக்கவே மாட்டா. அப்படியாருனாச்சும் அடம்பிடிச்சா, அந்த ஆட்டத ‘கேன்சல்’ பண்ணிட்டு கோவிச்சுகிட்டு போயிருவா, அதனால அவளோட பிரண்ட்ஸ் என்னய ‘சகுந்தலா புருசன்’னு கிண்டல் பண்ணுவாங்க. அப்புறம் அவ ஆறாங் கிளாசு படிக்க எங்க ‘எலிமெண்டரி’ ஸ்கூல விட்டு, ‘ஹைஸ்கூல்’ போயிட்டாலும், எங்க பிரண்ட்சிப், சாயங்காலம் ஸ்கூல் விட்டு வந்த பின்னாடியும், லீவு நாளுலையும் தொடர்ந்துச்சு. அவளுக்கு இங்கிலீஸ் knowledge அதிகம். Grammer ல் எந்த சந்தேகம் வந்தாலும் எல்லோரும் அவகிட்டதான் போய் நிப்பாங்க. 8 வது படிக்கும் போதே, அவ பேசுர இங்கிலீஸ் ஸ்டைல பாத்து, எங்க ஊர் ஹைஸ்கூல் HM, கண்டிப்பா “இவ foreignல தான் போயி செட்டிலாவா”ன்னு சொல்லுவாரு.ஹைஸ்கூல் படிப்புல, பெரிய, பெரிய இங்கிலீஸ் ரைம்ஸ் எல்லாம் கத்துகிட்டு வந்து எனக்கு சொல்லி கொடுப்பா. அத நான், எங்க கிளாசுல போய் சொல்லி, எல்லாரையும் அசர வச்சிருக்கேன். அவ பெரியவளா ஆனதுக்கப்பறமும், அவ வீட்டில விளையாட போனாலும், நான் 9 வகுப்பு வந்த பின்னாடி, கொஞ்சம், கொஞ்சமா அங்கே போவதை குறச்சு, பின் ஒரு ஸ்டேஜ்க்கு அப்புறம் தேவையில்லாமல் போறதை நிறுத்திக்கிட்டேன். அதற்கு மேல் வயசு பிள்ளைகள் இருக்கிற வீட்டிற்கு போக எனக்கு வெட்கமாக இருந்தது. எப்போதாவது எங்க வீட்டிற்கு, அவ புஸ்தகம் வாங்க வர்ரப்ப, நேருக்கு நேரா பார்க்கிறப்ப ரெண்டு பேரும் புன்னகையை பறிமாறிக்கிறதோட சரி. சகுந்தலா, பத்தாம் வகுப்பில, நல்ல மார்க் எடுத்திருந்தாலும், அவள் அம்மா, “இதுக்கு மேல பொம்பளபிள்ளைக்கு படிப்பு எதுக்கு? மேல படிக்க வச்சா, அதுக்கேத்த மாப்ள பார்க்கனும்.. நமக்கு அதுகெல்லாம், வசதியில்லை”ன்னுட்டு, வீட்டிலேயே இருக்கட்டும்னு சொல்லிட்டாங்க. ஆனா எங்க அப்பாதான், “டீச்சர் டிரைனிங்காவது படிக்கட்டும், நாளைக்கு கல்யாணத்திற்கு அப்பறம், புருசன் வேலைக்கு போக சொன்னா, போகட்டும்னு” சொன்னதால, பத்மா அத்தை அவள் டீச்சர் டிரைனிங் படிக்க ஒத்துகிட்டாங்க.

Hiii semmaya irukku story .i like u. im saravanan. Story semmaya irukku pesa Virupam iruntha enaku reply pannu