நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 2 8

மாலை நேரம்… களைப்பு நீங்க….நன்றாகக் குளித்தாள் உமா. குளித்த பின்…மிகவும் பரவசமாக இருந்தது. உடம்பில் புத்துணர்ச்சி.. நிரம்பியிருந்தது.
டிவி முன்னால் உட்கார்ந்து…ஆர்வமாகக் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த… தாமுவிடமிருந்து ரிமோட்டைப் பிடுங்கி… ஒவ்வொரு சேனலாக மாற்றி. .. ஒன்றுமே பிடிக்காமல் போய்… பழைய பாடலைபக போட்டு விட்டு. .. அவளும் கூட சேர்ந்து பாட… அவளிடமிருந்து ரிமோட்டைப் பிடுங்கினான் தாமு.” குட்றா…” என்றாள்.
”உனக்குத்தான்.. ஒன்னுல்ல..இல்ல… என்னையாவது பாக்க விடு..”
”இப்ப நீ… ஒழுங்கு.. மரியாதையா குடுக்கல… மகனே… ” என்றாள்.
” ப்ளீஸ்க்கா..!”
” மரியாதையா… மாத்திரு..”

ரிமோட்டைத் தூக்கி. . அவள் மடிமேல் வீசிவிட்டு. . விருட்டென எழுந்து வெளியே போனான் தாமு.

இரவு ஒன்பது மணிக்கு… கார்த்திக்கு போன் செய்தாள் உமா.
”ஹாய்..” என்றான். எடுத்ததும்
”’ஹாய்…கார்த்தி..”
”எங்கருக்க..? அரைலூசு..?” என அவன் கேட்டான்.
”வீட்லப்பா… நீ..?”
” வசூலுக்கு வந்தேன்…”
”முடிஞ்சுதா…?”
” முடிஞ்சிரும்..!”
” சரி..நான் என்ன பண்ணட்டும்.?”
”என்ன பண்ற…?”
”வரட்டுமா..? நீ ஊருக்கு எதும் போகலதானே…?”
” ம்… வர்றியா..?”
” ரெடியா இருக்கேன்..”
” சரி.. ஒரு பத்து நிமிசம் கழிச்சு கூப்பிடறேன்… பஸ் ஸ்டாப்புக்கு வந்துரு.. நா வநது.. உன்ன பிக்கப் பண்ணிக்கறேன்..! சாப்பிட்டியா.?”
” ஏழு மணிக்கே சாப்பிட்டேன் கார்த்தி..”
”சரி… நா.. கூப்பிடறேன். .”என இணைப்பைத் துண்டித்தான்.

மறுபடி.. தன்னை அலங்கரித்துக்கொண்டாள் உமா. அவள் வாங்கியிருந்த.. புது சுடிதார்.. போட்டபோது.. இன்று அவள் மிகவும். ..அழகாக இருப்பதாக.. அவளுக்கே தோண்றியது.
கால்மணிநேரம் கழித்து… கார்த்திக் போன் பண்ண…கிளம்பினாள் உமா.

”கதவ.. தாப்பா போட்றாதமா..நான் எப்ப வருவேனு தெரியாது. .” என அம்மாவிடம் சொன்னாள்.
”ஏன். .?” என்றான் தாமு”தாப்பா போடலேன்னா திருடன் எவனாவது வந்துருவான்..”
”ஆமா. . இது பெரிய… மங்கம்மா மகாலு..! வைரமும். . வைடுரியமுமா கொட்டிக்கெடக்குபாரு.. திருடன் வந்து. .. அள்ளிட்டு போறதுக்கு… போக்கத்த பயலே.. தப்பித்தவறி அப்படி எவனாவது வந்தாலும்… இந்தக் காயலான்கடைச் சாமான பாத்து. . பரிதாபப்பட்டு… வேற வீட்லருந்து திருடிக்கொண்டு வந்து… இங்க வெச்சிட்டு போவான்… கவலப் படாத..!” என்றாள்.
சிரித்து விட்டு ”நம்ம கதவ தாப்பா போட்டாலும். . அத தெறக்கற ஐடியா என்கிட்ட இருக்கு..” என்றான்.
”என்ன ஐடியா. .?”
”லாக் பண்ணாம.. ஸ்ட்ரெய்ட்டா.. தாள மாட்டிவிட்டா… வெளிலருந்து தள்ளினா போதும்… எறங்கிரும்..” எனக் கதவைச் சாத்தித் தாளிட்டு… அதை இழுத்து…செய்து காட்டினான்.

”அட.. அனாம்பத்துக்கு பொறந்த.. அறிவாளியே..” என அவன் கன்னத்தில் தட்டிவிட்டுப் போனாள் உமா.

பேருந்து நிறுத்தத்தில்.. யாரோ இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள்… கொஞ்சம் தள்ளிப்போய்… பூட்டப்பட்டிருந்த கடையோரமாக நின்றுகொண்டாள்.
அவள் போய் நின்ற.. பத்து நிமிடங்களில் வந்து விட்டான் கார்த்திக்.
”நேரமாச்சா..வந்து. .?” எனக்கேட்டான்.
”இல்ல…ஒரு பத்து நிமிசம்தான் ஆச்சு…”
”உக்காரு…”
அவன் பின்னால்.. பைக்கில் உட்கார்ந்து…அவன் தோளைப் பிடித்துக்கொண்டாள்.

”போலாமா..?” கார்த்திக்.
” ம்… போ..” என்றாள்.

பைக்கை நகர்த்தியவாறு கேட்டான் .
”இன்னிக்கெல்லாம் நீ.. என்ன பண்ணின..?”
”நல்லா.. தூங்கினேன்… நீ..?”
” மத்யாணம் ஒரு… தூக்கம் போட்டேன்.. அவ்வளவுதான்..”
”ஏன். . ஏதாவது வேலை இருந்துச்சா..?”
” ம்…!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *