த்ரீ ரோசஸ் 6 47

அதன் பின் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.. இறந்து விட்டேன் என்றே நினைத்து இருந்த நான் இப்போது கண் விழித்தது எனக்கு ஆச்சரியமாகவும்.. அதிசயமாகவும் இருக்கிறது..

நான் எழுந்து நிற்க முயச்சி செய்தது வீண் போகவில்லை..

ஒரு காலில் மட்டும் தான் வலி இருந்தது.. மற்ற கால் நன்றாக தான் இருந்தது..

நெத்தியில் கொஞ்சம் சிராய்ப்பு..

நான் எழுந்து அருகில் இருந்து ஒரு மரக்கிளையை எடுத்தேன்..

அப்படியே அதை ஊன்றுகோல் போல வைத்துக் கொண்டு.. மெல்ல மெல்ல நான் அந்த அடர்ந்த காட்டு மரங்களும் இலைகளும்.. கற்களுக்கு இடையே நடக்க ஆரம்பித்தேன்..

தூரத்தில்.. வெகு தூரத்தில் விமானம் எரிந்து சாம்பளான துர்நாற்றம் இன்னும் அடித்துக் கொண்டு தான் இருந்தது..

எனக்கு தண்ணீர் தாகம் எடுத்தது.. என் அதிர்ஷ்டம் என் அருகில் ஏதோ ஒரு ஓடை ஓடும் சத்தம் கேட்டது..

நான் மெல்ல அந்த மரக்கொம்பை ஊனிக் கொண்டு மெல்ல மெல்ல நடந்து சென்று அந்த அருவியை அடைந்தேன்..

ஆஹா.. இந்த அடர்ந்த காட்டில் இப்படி ஒரு அருமையான அருவியா.. குற்றாலம் தோற்றுவிடும் போல இருந்தது..

அப்படி ஒரு சில் தண்ணீருடன்.. அருவி மிக அழகாக அலையலையாய் விழுந்து புரண்டு ஓடிக் கொண்டு இருந்தது..

நான் அருகில் சென்று ஒரு வழுக்கு பாறையின் மேல் மெல்ல மெல்ல நடந்து.. கவனமாக.. மிகவும் கவனமாக சென்று அந்த பாறையில் அமர்ந்து.. கொஞ்சம் குனிந்து.. தரையில் ஓடிய நீரை என் கைகளால் அள்ளி அள்ளி வேக வேகமாக குடிக்க ஆரம்பித்தேன்..

மடக் மடக் மடக் என்று வேக வேகமாக குடிக்க குடிக்க.. எனக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தெம்பு வரத்துவங்கியது..

அப்படியே டயர்டாக அந்த வழுக்கு பாறையின் மேலேயே சாய்ந்து கொண்டேன்..

இந்த விபத்தில் நான் மட்டும் தான் பிழைத்தேனா.. அல்லது வேறு யாராவது உயிரோடு இருக்கிறார்களா என்று நினைத்தபடி.. மெல்ல அந்த வழுக்கு பாறையில் இருந்து எழுந்தேன்..

ஐயோ.. வலி.. தாங்க முடியவில்லை.. ஆனாலும்.. என்னால் என் ஆர்வத்தை கட்டு படுத்த முடியவில்லை..

இந்த காட்டில் இருந்து எப்படி வெளியேறுவது.. மற்ற பயணிகள் நண்பர்களை எப்படி கண்டு பிடிப்பது.. கண்ட்ரோல் ரூமுக்கு எப்படி தகவல் கொடுப்பது.. என் முழு எண்ணமும் வேக வேகமாக சிந்தித்து கொண்டே இருந்தது..

2 Comments

Comments are closed.