த்ரீ ரோசஸ் 6 29

ஹாலுக்கு வந்தார்கள்..

டேய் தம்பி ராகவா.. என்ன பெரிய சின்ன ஹீரோவா ஆகலாம்னு பார்த்தியா.. உன்ன வீட பெரிய பெரிய ஹீரோ எல்லாம் இந்த கதையில இருக்காங்க.. நாங்க மலேசியா போறவரை இந்த மாதிரி ஏடாகூடம் பண்ணதனு உனக்கு எப்பவோ வார்ண் பண்ணிட்டேன்..

இல்ல சார்.. இனிமே அப்படி தப்பிக்க முயற்சி பண்ண மாட்டேன் சார்.. என்று ராகவன் காலில் விழுந்து கெஞ்சினான்..

ப்ரியா பேந்த பேந்த முழிந்தாள்..

காரணம் இங்கு என்ன நடக்கிறது.. எதற்கு தன்னை ராகவன் தோட்டத்து பக்கம் உப்பு மூட்டை தூக்கி கொண்டு ஓடினான் என்று எதுவும் புரியாதவளாய் எங்களை மாறி மாறி திரு திருவென பார்த்து முழித்தாள்..

நான் ப்ரியா என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளும்படி மீண்டும் எங்களை பற்றியும்.. நாங்கள் ஜெயிலில் இருந்து தப்பி வந்த விஷயத்தையும் சொன்னேன்..

நான் சொன்ன பிறகு தான் ப்ரியாவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிந்தது போல இருந்தது..

அவள் முகம் இப்போது கொஞ்சம் தெளிவானது..

இவ்வளவு நேரம் மௌமாகவே இருந்து ப்ரியா திடீர் என்று அப்பாவியாய் ஒரு விஷயம் சொன்னது எங்கள் மூவரையும் அதிர்ச்சி அடைய செய்தது..

தொடரும்

===========

ஐஸ்வரியா

மெல்ல கண் விழத்தேன்.. பளிச் என்று என் கண்களுக்கு நேராக சூரிய ஒளி அடித்தது.. கண்கள் கூசின.. கொஞ்சம் கொஞ்சமாக கண்களை திறந்து பார்த்தேன்.. எங்கேயோ ஒரு காட்டில் மரங்களுக்கு இடையே விழுந்து கிடந்தேன்..

உடம்பெல்லாம் செம வலி.. மெல்ல எழுந்து அமர முயற்சித்தேன்.. ஆனால் முடியவில்லை.. என் கையில் நிறைய மரங்களின் கிளைகள் பட்டு சிராய்ப்பு.. நிறைய ரத்த கட்டிகளாக இருந்தன..

ஆனாலும் இருந்த வலிகளை பொருட்படுத்தாமல்.. மெல்ல மெல்ல கை ஊன்றி எழுந்து அமர்ந்தேன்..

மெல்ல எழுந்து நிற்க முயற்சித்தேன்.. ஆனால் முடியவில்லை..

வலது காலில் நல்ல அடி.. ப்ராக்சர் ஆனது போன்ற வலி..

ஆனால் ரத்தம் இல்லை.. கை முழங்கையில் மட்டும் தான் சிராய்பு.. ரத்தம் கட்டி இருந்தது.. மற்றபடி என் உடம்பில் எங்கும் ரத்த காயங்கள் இல்லை..

எனக்கே ஆச்சரியமாக இருந்தது.. இவ்வளவு பெரிய ஏரோப்ளேன் விபத்தில் இருந்து எப்படி நான் தப்பித்தேன்.. என்று நினைக்கையில்.. நான் இன்னும் உயிரோடு இருப்பது கனவா நினைவா என்றே எனக்கு தெரியவில்லை..

கடைசியாக.. நான் தான் விமானம் ஆபத்தில் இருக்கிறது.. அனைவரும் தப்பிக்க தயாராகுங்கள் என்ற அறிவிப்பை சொல்லிக் கொண்டிருந்தேன்..

அப்போது தான் ஒரு திடீர் வெடி சத்தத்துடன் விமானம் வெடித்து.. பூமியை நோக்கி படுவேகமாக இந்த அடர்ந்த பழைய காட்டிற்குள் விழுந்து நொருங்கியது..

2 Comments

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *