செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 9 84

“பின்னே, நம்ம ஊர விட, இங்க, இந்த வைபவத்த சிறப்பா கொண்டாடுறாங்க.” இப்படி பேசிக்கொண்டே மேடையை நெருங்கி, முன் பக்கத்தில் இருந்த இருக்கைகளில் உட்கார்ந்தோம்.

மேடை, மலர்களால் வண்ண தோரணங்களாக அலங்கரிக்கப் பட்டிருக்க, தரையில் அழகான வண்ணக் மாக்கோலம் போடப்பட்டிருக்க, அதன் மத்தியில் அளக்கும் படியில் நிரப்பி வைத்திருந்த நெற்குவியலின் மேல் ஒரு அகல் விளக்கு வைக்கப் பட்டிருந்தது. மேடையின் மத்தியில் ஒரு நாற்காலி கிழக்கு திசை நோக்கி போடப்பட்டு, அதன் முன்னே பழம், இனிப்புகள், வளையல்கள், பாக்கு, வெத்திலை நிறைந்த வெள்ளித் தட்டுகள் வைக்கப்பட்டிருக்க,… இரு புறமும் இரு குத்து விளக்குகள் ஏற்றப் பட்டிருந்தது.

“பேசிகிட்டு இருங்க இதோ வந்திட்றோம்” என்று சொல்லி, மாலினியின் அப்பாவும், அம்மாவும் ஒரு அறைக்குள் சென்று விட, வளை காப்பு பற்றி தெரிந்து கொள்ளும் ஆவலில்,….

“இந்த காலத்துல கூட இந்த மாதிரி சம்பிரதாய சடங்கு அவசியமா ஆன்டி?”.எனக்கு வந்த சந்தேகத்தை கேட்டேன்.

“கார்த்தி, இதுல அந்தக் காலம், இந்தக் காலமுன்னு என்ன இருக்கு. மனுஷங்க மனுஷங்களாத்தானே இருக்கோம்.ஒவ்வொரு சுமங்கலிப் பொண்ணும், கர்ப்பிணிப் பொண்ணு கையையும் கன்னத்தையும் தொட்டு சந்தனம் பூசி, வளையல் போட்டு விடறப்ப, அந்த கர்பிணிப் பொண்ணு எவ்வளவு சந்தோஷப் படுறா தெரியுமா? அந்த சந்தோஷ உணர்வெல்லாம் வயித்திலிருக்கிற குழந்தைக்கும் போய் சேருதாம். அதுவுமில்லாம அந்த கண்ணாடி வளையல்கள் உண்டாக்குற இன்னிசையான சத்தம் வயித்திலிருக்கிற குழந்தைக்கும் கேட்டு அது சந்தோஷப்படுதாம். அதனாலே குழந்தை ஆரோக்கியமா வளருதாம்.”

“அது சரி ஆண்டி. பிரசவத்த அம்மா வீட்லதான் வச்சுக்கணும்கிறாங்களே. அது ஏன்?”,

“அம்மாங்கிறவ அன்பானவள். பொறந்த வீடுதான் ஒரு பொண்ணுக்கு நிம்மதியையும் சந்தோஷத்தயும், ஒரு தைரியத்தையும் தரும். அப்போதான் பிரசவமும் ஈஸியா இருக்கும். அதுக்காகத்தான் முதல் பிரசவத்தை அம்மா வீட்லேயே கவனிக்கிறாங்க.

“வழக்கமா எத்தனையாவது மாசத்துல பொறந்த வீட்டுக்கு போறாங்க ஆன்டி?”
“வழக்கமா முதல் பிரசவம்னா ஏழாவது மாசத்துல பொறந்த வீட்டுக்கு போய்டுவாங்க.புருஷன் மேலே ரொம்ப அன்பு வச்சிருக்கிற பொண்ணுங்க ஒன்பதாவது மாசத்துல கூட பொறந்த வீட்டுக்கு போறாங்க.”

“அப்போ,….மாலினிக்கு அம்மா விட்டுக்கு போகணும்கிற பிரச்சினை இல்ல.”

“ஏன்,…அமுதாவுக்கு கூட அப்படிதான்.”

இதைக் கேட்ட அமுதாவின் முகம் சிவந்தது. எங்களைப் பார்க்க கூச்சப்பட்டு தலையை குனிந்துகொண்டாள்.

“அமுதாவுக்கு வெக்கத்தப் பாரேன். சரி, இன்னொன்னும் சொல்லிட்றேன். கர்ப்ப காலத்தில பொண்ணுங்களுக்கு பொதுவா மன அழுத்தம் அதிகமாக இருக்கும். அந்த மாதிரி நேரத்துல அமைதியான சூழ் நிலைலே நல்ல மெல்லிய இசையை கேட்டுகிட்டிருந்தா மன அழுத்தம் குறையும். கர்ப காலத்துல பிரச்சினை, சண்டை, சச்சரவுன்னு சூழ் நிலையில இருக்கிற பொண்ணுங்களுக்கு அதிகமான மன அழுத்தம் உண்டாகி ஒன்பது மாசத்துக்கு முன்னாலேயே குறைஞ்ச எடைல குழந்தைங்க குறைப் பிரசவமா பொறந்துடும்
இப்படி பேசிக்கொண்டிருக்கும் போது, மங்கையர்கள் சூழ மாலினியை அலங்கரித்து மெதுவாக அழைத்து வந்தார்கள். எங்களைப் பார்த்ததும், கொழுத்த கன்னங்கள் பள பளக்க முத்துப் பற்கள் தெரிய சிரித்து கை கூப்பி வணக்கம் சொன்னாள்.

மஞ்சளும், இளம் சிவப்பு நிறத்திலும் பார்டரும் இருந்த பட்டுப் புடவையில் மாலினி ஜொலித்தாள். வளை காப்பு வைபவத்திற்கென்றே எடுத்திருப்பார்கள் போல இருந்தது. புடவையே கிட்டத் தட்ட ஐம்பதாயிரம் ரூபாய் இருக்கும்.

முன்பை விட இன்னும் சிவந்து, முகத்தில் தேஜஸ் கூடி, உடம்பு கொஞ்சம் சதை போட்டிருந்தாள். வேலை இல்லாத போலீஸ்காரர் போல வயிறு நன்றாக முன்னே தள்ளி முட்டிக் கொண்டு இருந்தது.

மெதுவாக அழைத்து வந்தவர்கள். மேடையில் இருந்த நாற்காலியில் மாலினியை மெதுவாக உட்கார வைத்தார்கள். பெருத்த வயிற்றின் எடையை சுமந்திருந்த வேதனையை முகத்தில் காட்டி, கொஞ்சம் சிரமப் பட்டு உட்கார்ந்தாள். அவளுடன் கூடவே வந்த சுரேஷ் அவளுக்கு ஆறுதல் சொல்லி அவள் அருகில் நிற்க,” வந்திட்டு இருக்கிறவங்களை போய் கவனிங்க.” என்று சொல்லி, தனக்கு பரிட்சயமானவர்களைப் பார்த்து உடல் வேதனையை மறைத்து உதட்டளவில் நட்புடன் சிரித்து வைத்தாள்.