கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 34 5

“அப்பா இதுக்கு என்னப்பா அர்த்தம்? எப்பப்பாத்தாலும் இதை சொல்லிக்கிட்டே இருக்கீங்களே?” எட்டு வயது சம்பத்குமாரன் தன் தந்தையிடம் கேட்டான்.

“பிரபஞ்சமே நான்தான் – அப்படீன்னு நெனைச்சிக்கறதுடா கண்ணு..”

“பிரபஞ்சம்ன்னா”

“நாம இருக்கற உலகம், சூரியன், சந்திரன், நட்ச்சத்திரம், செடி, கொடி, மரம்… எல்லாம்…நாமாதான்…”

“அப்டீன்னா… நான் சம்பத்து – எனக்கு நான் தான் அப்பாவா?.. நானே அம்மாவா? நானே பாட்டியா?” குழந்தை சம்பத் வாய்விட்டு சிரித்தான்…

“ஆமாண்டா கண்ணு..” தன் பிள்ளை சட்டென்று பிடித்துக் கொண்டானே, நல்லசிவம் மனசுக்குள் ஒரு தித்திப்பை உணர்ந்தார்.

“அம்மா… அப்பாவுக்கு பைத்தியம் புடிச்சிப் போச்சும்ம்மா… எல்லாம் நானாம்.. நான் சம்பத்து மட்டும்தானேம்மா” சிறுவன் கைகொட்டி சிரித்தான். அம்மாவின் தோளைக் கட்டிக்கொண்டான்..”

பதினெட்டு வயதில் மீண்டும் ஒரு முறை தன் தந்தையிடம்
“சிவோஹத்தின்” பொருளைக் கேட்டான்.

“உனக்கு யார் மேலயாவது கோபம் வந்தா, அந்த கோபத்தை அடக்க இது ஒரு வழிடா… நாலு தரம் மனசுக்குள்ளவே சொல்லுடா … அவன் மேல இருக்கற கோபம், வெறுப்பு, கசப்பு, எல்லாம் போயிடும்..’ நல்லசிவம் கண்மூடி உட்க்கார்ந்திருந்தார்.

“அது எப்படி” பதினெட்டு வயது ரத்தம்.. முழுசூடுள்ள ரத்தம் எகிறியது.

“கோபப்படுகிறவன் நான்… யாரை கோபிக்கிறேனோ அவனும் நான்… கோபமும் நான்… இதான் சிவோஹத்தோட அர்த்தம்..” அவர் மெல்ல சிரித்தார்.

அந்த வயதிலும் சம்பத்துக்கு
“சிவஹோத்தின்’ முழு அர்த்தம் புரியவில்லை. ஆனால் இன்று அவனுக்கு அதன் அர்த்தம் புரிந்திருக்கிறது.

சிவோஹம். சிவோஹம். சிவோஹம். மீண்டும் மெல்ல தன் மனதுக்குள் முணுமுணுத்தான் சம்பத்.

ஐபோடில் பாடிக்கொண்டிருந்தவள் தன் கணீரென்றக் குரலால் சம்பத்தின் உறைந்திருக்கும் இதயத்தை காதல் தீயால் உருகவைத்தாள். நெகிழவைத்தாள்.

“நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திரண்டு நிற்கிறதே… திறக்காத சிப்பி என்னைத்
திறந்து கொள்ளச் சொல்கிறதா என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே…
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன்; உன் வருகையினால் வயதறிந்தேன்..!
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா..?!!”

சுகன்யா தன் முகம் தாமரையாக மலர்ந்து பாட்டுக்கேற்றவாறு ஆடிக்கொண்டிருந்தாள். சம்பத் தன் பாளம் பாளமான பரந்த மார்பில் துணியில்லாமல், நீல நிற ஆகாயத்தை நோக்கியவாறு பாடிக்கொண்டிருந்தான். துள்ளி துள்ளி ஆடினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *