கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 34 7

நான் அவளை அழ வைக்க நினைத்தேன். இது அவளுக்குத் தெரியாது… ஆனால் முகம் தெரியாத ஒருத்தன் கிட்ட, நட்ட நடு ரோல என்னை மனசார மன்னிப்பு கேக்க வெச்சுட்டாளே…! இவ என் கூடவே, என் ஆயுசு பூரா இருந்தா நான் என்ன ஆவேன்? சம்பத் பிரமித்தான். மனம் ஸ்தம்பித்து நின்றான்.

சிவோஹம்… சிவோஹம். சிவோஹம்.

நான் என்ன ஆவேன்? நான் இந்த பிரபஞ்சமாக ஆகிவிடுவேன்.. சம்பத் மனதுக்குள் மகிழ்ச்சியானான்.

***

என் சுவாசத்தில இருக்கற ஒருத்தி,
“வந்துட்டேன் சம்பத்… என்னை உனக்குத் தெரியலையா…’ புருவத்தை உயர்த்திப் பார்த்தாளே? இவ என் எதிர்ல வர்றதுக்கு இத்தனை வருடங்களா ஆயிற்று? இது நாள் வரை இவள் எங்கு இருந்தாள்?

மூடின கம்பிக் கதவுக்குப் பின்னால நின்னு
“உங்களுக்கு என்ன வேணும்’ உதடு சுழித்து கேட்டவளை… இனம் காண முடியாமப் போச்சே? சம்பத் தன் முகம் சுருங்கினான்.

சம்பத்துக்கு சந்தோஷத்தில் தொண்டை அடைத்து அழுகை வந்தது. மவுனமாக அழுதான். எத்தனை நேரம் அழுதிருப்பான்? கண்களைத் துடைத்துக்கொண்டான். தன் ஆப்பிளைத் தேடினான். ஓடவிட்டான். ஸ்பீக்கருடன் இணைத்தான். கண்கள் மூடி ஒரே இலக்கில் தன் மனம் லயிக்கக் கிடந்தான்.

சுகன்யா! சுகன்யா! சுகன்யா! அவன் இழுத்த மூச்சில் சுகன்யா அவனுள்ளே நுழைந்தாள். அவன் இழுத்துக் கட்டிய மூச்சில், நெஞ்சில் சுகன்யா நிலைத்து ஆடாது அசங்காது தீபத்தின் ஓளியாய் நின்றாள். அவன் விட்ட வெப்ப மூச்சில் சுகன்யா மெல்ல வெளியேறினாள்.

மீண்டும் அவனுள் நுழைந்தாள்.

***

‘சிவோஹம்… சிவோஹம். சிவோஹம்.’ கண்மூடி கட்டிலில் கிடந்த சம்பத் தன் வாய்விட்டு உரக்கச்சொன்னான். மனதில் மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடியது.