கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 34 7

உண்மையை பேசுவதால் மனம் இந்த அளவிற்கு இலகுவாகி நிம்மதியை தருமா? என்னுடைய கல் மனசிலும் பூக்கள் பூக்குமா? சம்பத்தின் மனது மயில் பீலிகையாக காற்றில் மிதக்க, உள்ளத்துக்குள் பொங்கி வந்த இனம் புரியாத மகிழ்ச்சியை வெகுவாக அனுபவித்துக் கொண்டிருந்தான்.

காற்றே என் வாசல் வந்தாய்… மெதுவாகக் கதவு திறந்தாய்…!!
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்!!
நேற்று நீ எங்கு இருந்தாய்? காற்றே நீ சொல்வாய் என்றேன்;
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்..!!!

உடல் தூக்கத்தை தேடிக்கொண்டிருந்த போதிலும், அவன் உள்மனது தூங்காமல் களிப்புடன் பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. என்ன மாதிரி பாட்டு வருது? என் மூடுக்கேத்த பாட்டு வருதே? வெரிகுட்… வாய்விட்டு ஒரு முறை சிரித்தான்.

மூடிக்கிடந்த இமைகளுக்குப் பின்னால், முல்லை நிற பற்கள் பளிச்சிட, விழி இமைகள் கட்டுப்பாடில்லாமல் துடி துடித்துக்கொண்டிருக்க, கேசம் காற்றில் அலைபாய, ரோஜா நிற சேலையில் சுகன்யா வானத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்த தேவதையாக ஆடினாள். பாடினாள்.

படுத்திருந்தவன் எழுந்தான். அறை விளக்கை எரிய விட்டான். அர்த்த ராத்திரியில் தன் தலையை சீராக வாரிக்கொண்டான். கண்ணாடியில் தன் முகத்தை உற்று நோக்கினான். கண்ணாடியில் அன்று தெரிந்தவன் அவன் கண்களுக்கு, புதியவனாக, சிறிதும் பரிச்சயமில்லாதவனாக இருந்தான்.

இதுவரை அவனே அறியாத ஒரு சம்பத்குமாரன் அழகு பிம்பமாக புன்முறுவல் பூத்துக்கொண்டிருந்தான். நிஜமாவே இது நான்தானா? இவன் எஸ்.என். சம்பத்குமாரனா? இவன்தான் சுவாமிமலை நல்லசிவம் சம்பத்குமாரனா? பேச்சு மூச்சில்லாமல் அதிசயித்து நின்றான்.

எனக்கு இளம் பெண்ணின் தொடுகை புதுசு இல்லையே…! எத்தனை பேரை நான் வயசு வித்தியாசம் பாக்காம, இருட்டு, வெளிச்சம், பகல், இரவுன்னு நேரம் காலம் இல்லாம, அந்தரங்கமா தொட்டிருக்கேன்? அவர்களில் சிலரை முயங்கியும் இருக்கிறேன்… முயங்கும் சமயத்திலேயே உள்ளத்தால் வெறுத்துமிருக்கிறேன்.

காலேஜ்ல… பிக்னிக் போன எடத்துல… ஆபீஸ்ல பழக்கமான பெண்கள்.. அப்புறம் யார் யார்? வேற எங்கே? எந்த எடத்துலே? இப்ப அவங்க அட்ரஸா முக்கியம்? பலர் பணத்துக்காக என் கிட்ட வந்தவளுங்க… சிலர் பொழுது போகலேன்னு டயம் பாஸுக்கு வந்து போனவளுங்க; மனதில் ஒரு ஆணைக் கூடும் இச்சையில்லாமல், ஈர்ப்பில்லாமல், இயந்திரங்களாக என் படுக்கையை சிறிது நேரம் சூடாக்கியவர்கள்.

ஜிம்ல தேவையில்லாத உடம்பு கொழுப்பை எரிச்சி எரிச்சி… டீயூன் பண்ண என் வடிவான தேகத்தைப் பாத்து, அதன் முழுமையான வலிமையை உணர்ந்து, அதன் திண்மையில், அதன் வேகமான வலுவான இயக்கத்தில், மயங்கி என் கிட்ட ஒண்ணு ரெண்டு பேரு திரும்ப திரும்ப வந்தாளுங்க; பின்னாடி அவளுகளுக்கு நான் அலுத்துப்போய் அவளுங்களே மெல்ல என்னை விட்டு விலகிப் போனாளுங்க… நிரந்தரம் என்றுமே எதிலுமே இல்லை.

பெண்களோட ஒடம்பை நெறையப் பாத்தாச்சு.. துணியோட, துணியில்லாம, எல்லாத்தையும் பாத்தாச்சு.

இவர்கள் தேடல்களே வேறு… இவர்களின் வட்டங்களே வேறு… இவர்கள் வசிக்குமிடங்களே வேறு… இவர்களை நான் தேடிப் போகவில்லை. அவர்கள் என்னைச் சூடாக்க வந்தவர்கள் அல்ல… தங்கள் சூட்டை தணித்துக்கொள்ள என்னிடம் வந்தவர்கள்… என் சூட்டை நீ தணி… . நீ என்னை சொறி.. நான் உன்னை கொஞ்சம் சொறியறேன்.. சுயநல பன்றிகள். முகத்துக்கு முன் தளுக்காக பேசி, முதுகின் பின்னால் நக்கலாக சிரித்த பத்தினிகள்… கண்ணகிகள்…

ஒரு நாள்ல மிஞ்சிப்போனா அரை மணி நேரமே நீடிச்ச நிலையில்லாத உறவுகள்… எல்லாம் எட்டிக்காய்கள். சுவைக்கும் போதே கசப்பில் முடிந்த உடல் விளையாட்டுக்கள்? இருபத்தாறு வயசுலயே பொம்பளைன்னா மனசால வெறுத்துப் போய் நிக்கறேன்… யாருமே என்னப் புரிஞ்சுக்கலை. என் தேவை என்ன? என் தேடல் என்ன? ப்ச்ச்ச்…