கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 34 7

“நேத்து வந்தே… இல்லன்னா சொல்றேன்.. இன்னைக்கும் நீ வரணுங்கறேன்…

“சுகன்யாவை நான் விஷ் பண்ணிட்டேம்மா… சுந்தரி மாமிகிட்டவும் நேத்தே பேசிட்டேன்.. அப்பாவும் நீயும் போய்வாங்கம்மா…”

“ராணி… நீ கெளம்புடீ… நேரமாவுது… அவன் எழுந்திருக்கற மாதிரி தெரியலே… என்னமோ உன்னைத்தான் நிச்சயம் பண்ண புள்ளை வீட்டுக்காரங்க வந்திருக்கற மாதிரி அலங்காரம் பண்ணிக்கிட்டு லேட் ஆக்கறே?” நல்லசிவத்துக்கு எங்குமே குறித்த நேரத்துக்கு பத்து நிமிடம் முன்னதாக செல்லும் பழக்கம்.

ராணி அவருக்கு எதிர்மாறாக, வேண்டுமென்றே பத்து நிமிடம் தாமதமாகத்தான் போகவேண்டும் என்பாள். இது அவள் வழக்கம். அப்பத்தான் வந்தவங்க நம்பளைப் பாப்பாங்க… அழைச்சவங்களுக்கும் நாம வந்தோம்ன்னு தெரியும்… இது அவளுடைய அர்த்தமற்ற லாஜிக் என்பார் நல்லசிவம். ராணி அவர் சொல்வதை காதில் போட்டுக்கொள்வதேயில்லை.

நல்லசிவம் ஹாலில் பொறுமையில்லாமல் குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தார். நல்லப் புள்ளை வந்து வாய்ச்சிருக்கான் எனக்கு. நேத்து என்னமோ சொன்னப் பேச்சை கேட்டு எங்கக் கூட வந்துட்டான்! அதைப்பாத்து இவளும் ரொம்பவே குளுந்து போய் நிக்கறா!

“நாய் வாலை உன்னால நிமிர்த்த முடியுமாடீ? இவன்தான் ஒரு வேதாளமாச்சே?”

‘நான் வுட்ட ஒரு அறையில என் புள்ளை எப்படி திருந்திட்டான் பாருங்க’, மவன் பெருமையைப் பாடி பாடியே நேத்து ராத்திரி, பக்கத்துல படுத்துக்கிட்டு, என் தூக்கத்துக்கு அதிர் வேட்டு போட்டுக்கிட்டு இருந்தா… அவளும் தூங்கலை என்னையும் தூங்கவிடலை. ஆசைப்புள்ளை திரும்பியும் காலையில முருங்கை மரம் ஏறிட்டான். அவர் மனசுக்குள் முணுமுணுத்தார்.

“நீங்க கொஞ்ச நேரம் சும்மாயிருக்கீங்களா? நம்ம வீட்டுல, வளந்தப் பையன் ஒருத்தன் கல்யாணத்துக்கு இருக்கான்னு நம்ம ஊர், ஒறவு மொறைக்கு எப்படி தெரியறது…? காலம் பூராத்தான் மூஞ்சி தெரியாத ஊர்ல உங்கக் கூட குடுத்தனம் பண்ணியாச்சு…” அவளுக்கு மூச்சிறைத்தது.

“சரி… இவன் பெருமையை, பாட்டா எழுதி, ஒரு நூறு போஸ்டர் அடிச்சு குடு… தெரு தெருவா நான் ஒட்டிட்டு வர்றேன்…” நல்லசிவம் வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டார்.

“சொல்றதை சத்தமா சொல்லமாட்டீங்களே?”

ராணி தன் கணவரின் பதிலுக்கு காத்திராமல் மேலே பேசத்தொடங்கினாள். தன் வழக்கப்படி அவள் பேச ஆரம்பிக்க, நல்லசிவம் தன் இயல்பின் படி மவுனமாகிவிட்டார். அவருக்கு தலை இலேசாக வலிக்க ஆரம்பித்தது. அவர் இந்த நேரத்துக்கு இருமுறை காஃபி குடித்து இருப்பார். இன்று ஒரு கப் கூட அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை.

“கல்யாணம் கார்த்திகைன்னு நாலு எடத்துக்கு இவன் போனாத்தான்… நம்ம ஜாதியில பொண்ணைப் பெத்து வெச்சிருக்கறவன், ஒருத்தன் இல்லன்னா ஒருத்தன், நம்ம வீடு தேடி வருவான். எதுலயாவது புள்ளையைப் பெத்தவருக்கு ஒரு அக்கறை இருந்தாதானே?”

“ராணீ… உன் பாடு.. உன் புள்ளை பாடு… நான் வெராண்டாவுல நிக்கறேன்.. நீ சீக்கிரமா வந்து சேரு…” தன் தலையை அழுந்த ஒரு முறை தடவிக்கொண்டார். மெல்ல தெருப்பக்கம் நகர்ந்தார், நல்லசிவம்.

“டேய் சம்பத்.. சொன்னா கேளுடா… காலங்காத்தால என் மூடைக் கெடுக்காதே… எழுந்து சட்டுன்னு பல்லைத் துலக்கணமா, குளிச்சம்மான்னு, நல்லதா ஒரு பேண்ட் சட்டையை மாட்டிக்கிட்டு கெளம்புடா…” ராணி கூவிக்கொண்டே அவன் முதுகில் ஓங்கி ஒரு தட்டு தட்டினாள். வலுவாக தன் இரு கரங்களாலும் அவனை உலுக்கத் தொடங்கினாள்.

“நீங்க ரெண்டுபேரும் போய்கிட்டே இருங்க… வீட்டைப் பூட்டிக்கிட்டு பின்னாடியே நான் வர்றேன்..” சோம்பலுடன் எழுந்து பாத்ரூமை நோக்கி நடந்தான், சம்பத்.
செல்வாவிடம் மனம் விட்டு மன்னிப்பைக் கோரியவன், மனதிலிருந்த பாரம், குற்ற உணர்ச்சி, வெகுவாக குறைந்த திருப்தியுடன் வீட்டுக்குள் நுழைந்து, சுடசுட வென்னீரில் குளித்துவிட்டு இரவு சாப்பிடாமலேயே படுத்த சம்பத்தின் கண்கள் வெகு நேரம் வரை தூக்கத்தை தேடிக் கொண்டிருந்தன. அவன் வெகு நேரம் உறக்கமில்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்.