கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 34 5

மல்லிகா, சுகன்யாவின் கையை அன்புடன் பிடித்துக்கொண்டாள். அவள் பேசிய வார்த்தைகள் நேராக அவள் மனதிலிருந்து வந்து கொண்டிருந்தது. அவள் மனம் நிறைந்திருந்தது. சுகன்யா அவள் மனதுக்குள் நுழைந்து, தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டாள் என்பது அவள் பேச்சிலிருந்து புரிந்தது.

தன்னுடைய மகன் வழியாக கிடைத்துள்ள புது உறவுகளின் இதமான பேச்சும், அவர்கள் தனக்கும் தன் குடும்பத்துக்கும், உறவினர்களுக்கும் தந்த உரிய மரியாதையும், கனிவான உபசரிப்பும், மல்லிகாவைத் திக்குமுக்காட வைத்திருந்தது.

“பிளீஸ்.. அத்தே.. நீங்க இப்படியெல்லாம் எதுவும் சொல்லாதீங்க.. நான் உங்க பொண்ணு. நீங்க எங்க வீட்டுக்கு வந்தீங்க…!! எங்க ரெண்டு பேரோட ஆசையை நிறைவேத்திட்டீங்க. அதுவே எனக்கு போதும்…!! நடுவுல நான் எதாவது தப்பா நடந்திருந்தா நீங்கதான் என்னை மன்னிச்சிடணும்.”

சுகன்யா மல்லிகாவின் முகத்தை நிமிர்ந்து பார்த்து மென்மையாக பேசினாள். பின்னர் செல்வாவை ஒரு நொடிப் பார்த்து குறும் புன்னகை ஒன்றைப் பூத்தாள்.

“என்னங்க… எல்லார்கிட்டவும் சொல்லிக்கிட்டீங்களா, நேரமாகுதே… இப்ப கிளம்பினாத்தான் ராத்திரிக்குள்ள போய் சேரலாம்” தன் கணவரை பார்த்தாள் மல்லிகா.

“ம்ம்ம்.. நானும் உன்னை
“சுகா”ன்னே கூப்பிடறேன். சரிதானேம்மா. நாங்க கிளம்பறோம்… நீ எப்ப வர்றே சென்னைக்கு..? நடராஜன் தன் வீட்டுக்கு வரப்போகும் மகளின் தலையை வாஞ்சையுடன் தடவினார்.

“மாமா… இன்னையோட எனக்கு லீவு முடிஞ்சிப் போச்சு..!! அப்பா ஞாயித்துக்கிழமை சென்னைக்கு கிளம்பறார். அவர் கூட கார்லேயே நானும் வரலாம்ன்னு இருக்கேன். அவள் தன் தந்தையை திரும்பிப் பார்த்தாள்.

“சம்பந்தி.. என்னைப் பெத்தவங்க என் கூட இருக்கணும்ன்னு நான் ஆசைப்படறேன். என் வைப் சுந்தரிக்கு இதுக்கு மேலே வேலை செய்ய பிரியமில்லே. தன்னோட ஸ்கூல் டீச்சர் வேலையை ரிசைன் பண்ணிட்டு என் கூட வந்துடனும்ன்னு ரொம்ப ஆசைப்படறாங்க. நான் சொல்றது உங்களுக்கு புரியும்ன்னு நெனைக்கிறேன்..”

“புரியுதுங்க… அவங்களுக்கு வேலை செய்யணும்ன்னு என்ன அவசியம்? உங்ககூட இருக்கணுங்கற ஆசை ஞாயமானதுதானே? அவங்க ஆசையை நீங்க உடனடியா நிறைவேத்தணும். நீங்க ரெண்டு பேரும் தனித்தனியா இருந்ததெல்லாம் போதும்…” மல்லிகா புன்னகையுடன் அவர் சொன்னதை ஆமோதித்தாள்.

“நான் சென்னையில அஞ்சாறு பேருக்கு சவுகரியமா இருக்கற மாதிரி வாடகைக்கு ஒரு வீடு பாத்துக்கிட்டு இருக்கேன். சரியா ஒரு வீடு அமைஞ்சதும், சுகன்யாவும், எங்க கூட வந்துடுவா. அது வரைக்கும் வேணியோட வீட்டுலதான் அவ இருந்தாகணும். நான் இன்னும் கொஞ்ச நாளைக்கு எங்க கெஸ்ட் ஹவுஸ்ல இருக்கலாம்ன்னு நினைக்கிறேன்.”

“குமார் சார், நீங்க அதைப்பத்தி கவலைப் படாதீங்க… ஏற்கனவே நான் எனக்கு தெரிஞ்ச நாலு பசங்க கிட்ட சொல்லியிருக்கேன்… இந்த வாரத்துல நல்லதா ஒரு வீடு செட் ஆகிடும்…” சீனு நடுவில் புகுந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *