கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 18 10

காலையில் மீனா, பின்னர் செல்வா என மாறி மாறி, அவள் விருப்பத்துக்கு மாறாக பேசியதை எல்லாம் பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்ததால், மல்லிகாவின் மனதில் கூடிக்கொண்டிருந்த எரிச்சல் இப்போது சீற்றமாக மாறியதால், தன் உள்ளத்தில் பொங்கும் குமுறலை அவள் தன் கணவன் தலையில் கொட்ட ஆரம்பித்தாள். அடுத்த கணம், அவள் மனது அவள் மீதே குற்றம் சாட்டியது. சே… சே… என் புள்ளைங்க மேல இருக்கற எரிச்சலை நான் ஏன் சாதுவான என் புருஷன் மேல காட்டறேன்?

அடியே மல்லிகா, இவன் உன் புருஷன்; நீ காரணமேயில்லாம கோச்சிக்கிட்டாலும் பொறுத்துக்கிட்டு போற நல்ல மனசு இவனுக்கு இருக்கு. நீ பேச ஆரம்பிச்சா, அவன் பொறுமையா கேக்கறவன்; உன் மனசுல இருக்கறதை நீ மட்டும் யாரு கிட்ட கொட்டப் போறே? மனசுல எந்த கோபத்தையும் வெச்சுக்கிட்டு படுக்கைக்கு போகக்கூடாதுன்னு உன் மாமியார் எத்தனை தரம் சொல்லியிருப்பா உங்கிட்ட? சனியன் புடிச்ச கோபத்தையும், எரிச்சலையும் மனசை விட்டு சுத்தமா வழிச்சுப் போட்டுட்டு நிம்மதியா படுத்து தூங்குடி.

“மல்லி … ஏண்டி இப்ப என் கிட்ட கோபப்படறே? எங்கேந்து சந்தன வாசனை ஜோரா வருதேன்னு யோசனைப் பண்ணிக்கிட்டே இருந்தேன். அது உன் நைட்டியிலேருந்துதான் வருதா? நான் படுக்கற தலயணைக்கு மேல உன் நைட்டியை நீ வெச்சிருக்கே; நான் கவனிக்காம அது மேல என் தலையைத்தானே வெச்சு படுத்துக்கிட்டு இருந்தேன்? நான் வேற எதையும் வெச்சிடலியே? இப்பெல்லாம் நீ என்ன செண்ட் கிண்ட் அடிச்சிக்கிறியா?”

நடராஜன் ஒன்றும் தெரியாதவர் போல் மனைவியிடம் குழைய ஆரம்பித்தார். பிள்ளைகள் மீது காட்டமுடியாத கோபத்தை தன் மனவி தன் மீது திருப்புகிறாளென்று அவருக்குப் புரிந்தது. கடல் கொதித்து சீற ஆரம்பித்தால் அது கரையைத்தானே சுடும். இப்ப அவ கடலா இருக்கும் போது நான் கரையா மாறித்தான் ஆகணும்.

“தலை முடி கொட்டி வழுக்கை பளபளக்குது … மண்டையில இருக்கறது இன்னும் நாலு மசுரு; இப்ப அந்த நைட்டியை எடுத்து உதறிப் பாருங்க … எவ்வள முடி அதுல ஒட்டிக்கிடக்குதுன்னு தெரியும் உங்களுக்கு?”

நடராஜன், தலையணை மேல், தன் தலைக்கு கீழிருந்த மல்லிகாவின் நைட்டியை எடுத்து உதறியவாறு, ஒரு கையில் நைட்டியுடன் விருட்டென எழுந்து, பாவாடை, ஜாக்கெட்டுடன் நின்று கொண்டு, புடவையை மடித்துக் கொண்டிருந்தவளை, தன் புறம் இழுத்து தன் பக்கத்தில் கட்டிலில் உட்கார வைத்துக்கொண்டார். தன் வலது கையை அவள் தோளில் போட்டுக்கொண்டவரின் இடது கரம் அவள் இடுப்பில் தவழ்ந்தது.

“உங்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. சாப்பிட வேண்டியது, புஸ்தகத்தை கையில எடுத்துக்கவேண்டியது, அப்படியே கொறட்டை விட்டுக்கிட்டு தூங்கவேண்டியது. கட்டின பொண்டாட்டி மனசுல என்ன இருக்கு ஏது இருக்கு? தாலி கட்டின புருஷனுக்கு ஒரு அக்கறை கிடையாது.” மல்லிகா பேச ஆரம்பித்தாள்.