கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 18 10

“புரியுதுடா …”

“அக்கா … நீ சுகன்யாவோட நாளைக்கு காலையில முதல் வேலையா சுவாமிமலைக்குப் போய் உன் மாமனார், மாமியாரைப் பாத்துட்டு வா. பாவம், வயசானவங்க எப்ப குடும்பம் ஒண்ணா சேரும்ன்னு எதிர்பார்த்து தவிச்சுக்கிட்டு இருக்காங்க.”

“ம்ம்ம் ..”

“இருபத்து அஞ்சு வருஷம் முன்னாடி, நீங்க ரெண்டு பேரும், நீங்களா கல்யாணம் பண்ணிக்கிட்டு, குமார் வீட்டுக்கு போனப்ப, உன் மாமனார் கோபத்துல என்னமோ சொன்னாருன்னு, அதையே மனசுல வெச்சிக்கிட்டு, அவரே வந்து உன்னை வீட்டுக்கு வான்னு சொல்லணும், கூப்பிடணும்ன்னு இன்னமும் நீ பிடிவாதம் பிடிச்சுக்கிட்டு இருக்கக்கூடாது? நம்ம பொண்ணு கல்யாணம் நல்லபடியா நடக்கணும்… புரியுதா?”

“சரிடா … நான் என்ன மாட்டேன்னா சொல்றேன்? ஒரு தரம் உன் மூலமா என் மாமனார் என்னைக் கூப்ட்ட உடனேயே அவங்களை போய் பாத்து இருக்கலாம். நான் தப்பு பண்ணிட்டேன். இப்ப அதை நெனைச்சா எனக்கும்தான் என் மேலேயே எரிச்சலாயிருக்கு.” சுந்தரி உண்மையான வருத்தத்துடன் பேசினாள்.

“ம்ம்ம் … பேச்சு வாக்குல உன் மாமியார் காதுல சுகா கல்யாண விஷயத்தை போட்டு வை. குமார் டீடெய்லா உன் மாமனார்கிட்ட பேசிக்கட்டும். போவும் போது நம்ம வீட்டுலேருந்தே டிஃபன் ஏதாவது செய்து எடுத்துக்கிட்டு போயேன்? அப்படி பண்ண முடியலன்னா, ஹோட்டல்லேருந்து வாங்கிக்கிட்டு போயிடுங்க. பாவம் வயசான உன் மாமியாருக்கு சிரமம் குடுக்காதே..”