கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 18 5

“இத பாருங்க; நல்லா ஞாபகப்படுத்தி பாருங்க; நான் உங்களை, என்னைக் கல்யாண சத்திரத்துல வந்து பாருங்கன்னு கூப்பிடலை. அன்னைக்கும் நான் ஒண்ணும் முதல்ல உங்களைத் தொடலை. நீங்கதான் என் பின்னாலேயே சுத்தி சுத்தி வந்தீங்க. எல்லாரும் நம்பளையே பாக்கறாங்கன்னு சொன்னனா இல்லையா? வெக்கமில்லாம கூத்தடிச்சதெல்லாம் நீங்கதான்.”

“ஒரு வாண்டுகிட்ட என் பெயரை போடாம, சினிமா ஹீரோ மாதிரி, என் அன்பே ஆருயிரேன்னு ஆரம்பிச்சு, தனியா என்னை கல்யாணச் சத்திரத்து மாடிக்கு வந்து பார்க்கவும் … உடன் யாரையும் அழைத்து வராதேன்னு அசடு மாதிரி லெட்டர் எழுதி, அந்த லெட்டர்ல உங்க பேரை மட்டும் பெருசா கொட்டை கொட்டையா எழுதி, அதுல போதா குறைக்கு கையெழுத்தோட தேதி, வெக்கக்கேடு, அந்த குட்டி அதை என் அத்தை பொண்ணுக்கிட்ட கொண்டு போய் கொடுத்துட்டுது.”

“என் அத்தைப் பொண்ணு, மகா திமிர் புடிச்சவ; உன் ஆளு என்னைத் தனியா மாடிக்கு கூப்பிடறாண்டின்னு என்னை மிரட்டி, அழவெச்சு, நான் அழுததுக்கு அப்புறமா, உனக்குத்தாண்டி அவன் எழுதினான், தப்பா எங்கிட்ட வந்துடுத்துன்னு சொல்லி, அவர் ஆசைபடறார் இல்லையா, என்னான்னு கேட்டுட்டு வாடீன்னு எனக்கு தைரியம் சொல்லி என்னை அனுப்பி வெச்சா; கூடவே வந்து மாடிக்கதவுக்கு பக்கதுல நின்னுகிட்டு காவல் காத்தா. அந்த கடுதாசியை அவகிட்ட இருந்து வாங்கறதுக்குள்ள நான் பட்டபாடு எனக்குத்தானே தெரியும்?”

“அடிச்சக்கை … நீலா அவ்வள தூரம் அன்னைக்கு உன்னை ஆட்டிவெச்சாளா?”

“எல்லாம் உங்க அலைச்சலால அன்னைக்கு என் மானம் போச்சு. இப்பவும் என் அத்தைப் பொண்ணு நீலா என்னைப் பாக்கும் போதெல்லாம், திருட்டுத்தனமா வரப்போற புருஷனை, தண்ணித் தொட்டிக்கு பின்னாடி, தனியா பாக்கப் போனீயேடீன்னு நமட்டுத்தனமா விஷமச் சிரிப்பு சிரிக்கறா. இவ்வளவுக்கும் காரணம் நீங்கதானே? உங்க ரத்தம் தானே உங்க புள்ளை உடம்புல ஓடும்?”

“நான் தான், மாடிக்கு வாடீன்னு உன்னைக் கூப்பிட்டு, தண்ணி தொட்டிக்குப் பின்னாடி, உன்னைக் கட்டிப்புடிச்சு, முதல் முதலா உனக்கு முத்தம் குடுத்தேன். ஒத்துக்கறேன். நான் வெக்கம் கெட்டவன். அலையறவன். அதுக்கு அப்புறம் நீ என்னப் பண்ணே? அதைச் சொல்லுடி?” நடராஜன் அவள் புட்டங்களில் ஓங்கி அடித்தார்.

“நீங்கதான் பதிலுக்கு முத்தம் குடு குடுன்னு என் கையை பிடிச்சிட்டு கெஞ்சினீங்க. உங்க மூஞ்சைப் பாத்தா அய்யோ பாவமாயிருந்தது. யாராவது வந்து தொலைச்சுடப் போறாங்கன்னு பயம் வேற எனக்கு. போனாப் போவுது … இவ்வள தூரம் ஏங்கினீங்களேன்னு ஒண்ணே ஒண்ணு உங்க கன்னத்துல குடுத்துட்டு ஓடியே போயிட்டேன். நான் பண்ணதும், சுகன்யா பண்ணதும் ஓண்ணாயிடுமா?”

“அடியே நீ முத்தமா குடுத்தே; என் கன்னத்தை நக்கிட்டு போனேடி.. அதைப் போய் முத்தம்ன்னு சொல்றே?” அவர் சிரித்தார்.

“போங்க … நான் எவ்வளவு பயந்துகிட்டு இருந்தேன் தெரியுமா அன்னைக்கு” மல்லிகா முனகிக்கொண்டே தன் கணவனின் கழுத்து வளைவில் முத்தமிட்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *