கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 17 8

“நாங்க பழக ஆரம்பிச்சதுக்கு அப்புறமும், ஷாப்பிங் போகலாம்ன்னு இழுத்துக்கிட்டுப்போய், பிரா, ஃபாண்டீசுன்னு அவளுக்குத் தேவையானதை வாங்கிக்கிட்டு பில்லை என் தலை மேல கட்டினதில்லை. இன்னைக்கு வரைக்கும் எனக்கு வீடு இருக்கா? என் சொத்து விவரம் என்னா? என் அப்பா என்ன சம்பாதிக்கறார்ன்னு ஒரு கேள்வி கேட்டது கிடையாது. நான் அடிபட்டு ஆஸ்பத்திரியில கிடந்தப்ப, அவ ஓடி ஓடி எனக்கு பண்ணதெல்லாம் உனக்கேத் தெரியும்; இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல விரும்பலை.”

“அம்மா, உடல் கவர்ச்சி மட்டுமே எங்க காதலுக்கு அடிப்படையில்லே. நாங்க ரெண்டு பேரும் படிச்சவங்க; ரெண்டு பேரும் ஒரு குடும்பத்தை நடத்த கூடிய அளவுக்கு சம்பாதிக்கிறோம்; எனக்கு இப்ப 26 வயசும்மா. என்னை விட வயசுல அவ மூணு வருஷம் சின்னவ. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு நடக்கற வயசும்மா எங்களுக்கு. நானும் அவளும் உடலாலும், மனசாலும் தேவையான அளவுக்கு முதிர்த்தியடைஞ்சதுக்கு அப்பறம் தான் ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சிருக்கோம்.”

“நிதானமா யோசிச்சு, நான் செய்யற காரியங்களின் பின் விளைவுகள் என்னவாக இருக்கலாம்ன்னு மனசுல ஒரு தெளிவோடத்தான் ஒரே ஒரு தரம் அவ ரூமுக்கு நான் போனேம்மா. எங்க வயசை பாரும்மா; திடீர்ன்னு எனக்கு மாத்தல் வந்ததும், ஒருத்தரை ஒருத்தர் பிரியப்போற ஏக்கத்துல, நானும் அவளும் தொட்டுக்கிட்டோம். அந்த சாவித்திரி மேல எங்களுக்கு இருந்த கோபம், தாபமா அன்னைக்கு மாறிடிச்சி. அவ்வளவுதான். அன்னைக்கு கிடைச்ச தனிமையை நாங்க தப்பா பயன் படுத்தி முழுசா தாம்பத்தியம் நடத்திடலம்மா.”

“உன் மனசு எனக்குப் புரியுதுமா. இதை நாங்க தவிர்த்து இருக்கலாம். கல்யாணம் நடக்கிற வரை நாங்க பொறுமையா இருந்திருக்கலாம். இதுல நீ சுகன்யாவை மட்டும் பிரிச்சு வெச்சு தப்பு சொல்றதுல ஞாயமில்லேம்மா. எனக்கும் இந்த தப்புல சரி பாதி பொறுப்பு இருக்கு.”

“அன்பார்ச்சுனேட்லி, சுகன்யா நம்ம ஜாதியில்லே. இந்த ஒரு காரணத்துக்காக எங்க கல்யாணத்துக்கு நீ மறுப்பு சொல்லாதேம்மா. அவளும் நம்பளை மாதிரி உணவு பழக்க வழக்கம் உள்ள ஒரு சைவ குடும்பத்துலேருந்து வந்தவம்மா. அவளுக்கு அதிக எதிர்பார்ப்புகளும் கிடையாதும்மா. ஆண்டவன் நினைச்சா எனக்கு எல்லாம் கிடைக்கும்ன்னு நம்பற ரொம்ப சிம்பிளான, உன்னை மாதிரி கடவுள் நம்பிக்கை உள்ள பொண்ணும்மா; சுகன்யாவைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அவளைத் தவிர வேற ஒருத்தியை என் மனைவியா என்னால நினைச்சுப் பாக்க முடியாது.”

“ம்ம்ம் …செல்வா உன் முடிவை நீ தெளிவா சொல்லிட்டே … ரொம்ப சந்தோஷம்.” மல்லிகாவின் குரல் சற்று கம்மியிருந்தது.

“ஏம்மா … உனக்கு என் மேல கோபமா?”

“இல்லப்பா … எனக்கு யார் மேலேயும் கோவமில்லே …”

“அப்புறம் ஏம்மா உம்ம்ன்னு இருக்கீங்க” செல்வா தன் தாயின் அருகில் நகர்ந்து அவள் மடியில் படுத்துக்கொண்டான்.

மீனா இந்த அளவிற்கு செல்வாவின் தரப்பில் தெளிவாகப் பேசுவாள் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. தன் பெண்ணை அவள் இன்னும் சிறு குழந்தையாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தாள். வீட்டில் யாரும் இதற்கு மேல் செல்வாவின் கல்யாண விஷயத்தில் தன் பேச்சைக் கேட்க்க மாட்டார்கள் என்று அவளுக்கு தெரிந்திருந்த போதிலும், தன் வீட்டில் இதுவரை இல்லாமல் இந்த விஷயத்தில் தான் தனிமைப்படுத்தபட்டதை நினைக்கும் போது அவள் மிகவும் வருத்தமாக உணர்ந்தாள்.

3 Comments

Add a Comment
  1. Kallyanam eapoo seekram sollunga romba boor adikuthu

  2. மொக்கை

  3. Cont.. mannichudunga ram story

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *