கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 17 8

அப்பா சொன்ன மாதிரி
“என் காதல் நாடகத்துல” வித்யா என்னடான்னா ஒரு புத்தம் புது பிட்டு போடறாளே? ஒரு புது ஆக்டர்; ஒரு புது சீன். செல்வாவின் தலைக்கு ரத்தம் குப்பென ஏறியது. அவன் நாக்கு உலர ஆரம்பித்தது. அவன் மனதின் எங்கோ ஒரு மூலையில் சுரீரென இனம் தெரியாத சினம் தலை தூக்கியது.

“வித்யா மேடம் உங்களுக்கு இதெல்லாம் யார் சொன்னது?

“செல்வா, யார் சொன்னாங்கன்னு கேக்காதே; அதுவா உனக்கு முக்கியம்? நான் சொன்ன விஷயம் உண்மையா? இது தானே முக்கியம்.” வித்யா சூடிகையாகப் பேசினாள்.

சை.. என்னப் பொம்பளை இவ? எல்லாப் பொம்பளைங்களும் இப்படித்தான் இருக்காளுங்க; நேரம் காலம் தெரியாமா இவ என் உயிரை எடுக்கிறா? என்னை பேச்சுல மடக்கிட்டதா நெனைச்சு சந்தோஷப்படறா. நான் ஒரு புத்தி கெட்டவன் இவகிட்ட போய் சுகன்யாவைப் பத்தி ஏன் கேட்டேன்?

“அப்புறம் … செல்வா ..”

“வேற ஓண்ணும் இல்லை மேடம் … நீங்க சொல்ற விஷயம் எனக்கு நிஜமாவே தெரியாது.”

“செல்வா, எனக்கும் முழு விவகாரம் தெரியாது. எனக்குத் தெரிஞ்சதை, நான் கேள்விப்பட்டதை உனக்கு சொல்லிட்டேன். பொண்ணுன்னு இருந்தா நாலு பேரு அவளைப் பாக்கறதுக்கு வரத்தான் செய்வாங்க; அதுல ஒண்ணும் தப்பு இல்லே. சுகன்யா என்னப் பண்ணுவா? வீட்டுல சொல்றதை கொஞ்சமாவது அவ கேட்டுத்தானே ஆகணும். உன்னை மாதிரி ஆம்பளை சட்டுன்னு ஒரு முடிவுக்கு வந்தாத்தானே?”

“பொம்பளையா பொறந்தவ, வயசு காலத்துல, கல்யாணம் முடியற வரைக்கும், அவளுக்கு இஷ்டம் இருக்கோ இல்லையோ; இப்படி வர்றவன் போறவன் முன்னாடி உடம்புல பட்டுப்புடவையை சுத்திக்கிட்டு நின்னுதான் ஆகணும்! மிஞ்சி மிஞ்சிப் போனா என்ன ஆயிடும்?. கடைசியா அந்த பையனை எனக்குப் பிடிக்கலைன்னு அவ சொல்லப்போறா அவ்வளவுதான். நீ ஒண்ணும் உன் மனசை போட்டு குழப்பிக்காதே? அவ உன்னைத்தான் தன் மனசுல இருபத்து நாலு மணி நேரமும் நினைச்சுக்கிட்டு இருக்கா. இது எனக்கு நல்லாத் தெரியும்.”

“ம்ம்ம்ம்” செல்வா சுரத்தில்லாமல் முனகினான்.

“சீக்கிரமா, நீ ஆகவேண்டிய வேலையைப் பாரு. நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே; அவ நல்லப்பொண்ணு … கோட்டை விட்டுடாதே. அவ்வளதான் நான் உனக்கு சொல்லுவேன். சுகன்யா எனக்கு போன் பண்ணால், நான் உன் கிட்ட உடனே அவளைப் பேச சொல்றேன். ஓ.கே. வா? சாவித்திரி என்னைக் கூப்பிடறா.” வித்யா வினயமாக பேசி லைனை கட் பண்ணினாள்.

வித்யா சொன்னது உண்மையா இருக்கலாமோ? அதனாலத்தான் சுகன்யா சொல்லாமா கொள்ளாமா ஊருக்குப் போயிட்டாளா? செல்வாவுக்கு ஒரு வினாடி தலை சுற்றுவது போலிருந்தது. இப்ப நான் என்னப் பண்றது? அவ நம்பரும் கிடைச்சுத் தொலைக்கலை. சுகன்யாகிட்ட எப்படிப் பேசறது? பேசினாலும் இந்த விஷயத்தை என்னன்னு கேக்கறது? செல்வாவின் நெற்றி நரம்புகள் புடைத்துக்கொண்டிருந்தன.

ஒரு வினாடி செல்வா யோசித்தான். சுகன்யாவை எவனோ பொண்ணு பாக்க வர்றான்னு தெரிஞ்சதும் எனக்கு ஏன் இவ்வளவு கோபம் வருது? என் ஆளை, எவனோ ஒருத்தன், கல்யாணம் பண்ணிக்கணுங்கற நோக்கத்துல, எப்படி பாக்க வரலாம்? அவன் அவளுக்கு சொந்தமாவே இருக்கட்டுமே? அவங்க அம்மாவே சொல்லியிருந்தாலும், சுகன்யா இதுக்கு எப்படி ஒத்துக்கிட்டா?வெறுப்புடன் அவள் நம்பரை மீண்டும் தன் செல்லில் அழுத்தினான்.

“நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தற்சமயம் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொள்ளவும்.”

செல்வாவுக்கு பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது.

மல்லிகா, கிச்சனை சுத்தம் செய்துவிட்டு, முகத்தையும், பின் கழுத்தையும், நன்றாக சோப்பு போட்டுக் கழுவிக்கொண்டவள், தன் சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்தவாறே, மறு கையில் பால் சொம்புடன் படுக்கையறைக்குள் நுழைந்தாள். முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் கழுவியதும் தன் மனம் சிறிதே இலேசானது போல் உணர்ந்தாள். நடராஜன், இரவு சாப்பாட்டுக்குப் பின், கட்டிலில் படுத்தவாறு, தன்னுடைய வழக்கப்படி ஒரு புத்தகத்தை ஆழ்ந்து படித்துக்கொண்டிருந்தார்.

தன் கணவன் கையில் ஒரு புத்தகத்துடன் நிம்மதியாக அனந்த சயனத்தில் இருப்பதைக் கண்டதும் அவளுக்கு குபீர் என மனதில் மீண்டும் எரிச்சல் எழுந்தது. இந்த மனுஷனுக்கு எதைப்பத்தியாவது கவலை இருக்கா? கையில புஸ்தகத்தை எடுத்துட்டா, இந்த வீடே பத்தி எரிஞ்சாலும், கவலை கிடையாது. அறைக்கதவை படிய மூடியவள், அறையில் எரிந்துக்கொண்டிருந்த குழல் விளக்கை படக்கென அணைத்தாள். விடிவிளக்கைப் போட்டுக்கொண்டு தான் கட்டியிருந்த புடவையை அவிழ்க்க ஆரம்பித்தாள்.

3 Comments

Add a Comment
  1. Kallyanam eapoo seekram sollunga romba boor adikuthu

  2. மொக்கை

  3. Cont.. mannichudunga ram story

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *