கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 17 11

என்னா மாப்ளே, உனக்கும் உன் ஆளுக்கும் நடுவுல சண்டையா … புட்டுக்கிச்சா … அப்படின்னுட்டு உடனே பேஸ்புக்ல,
“செல்வாவுக்கும் சுகன்யாவுக்கும் நடுவுல ரப்சர்ன்னு, இந்த போக்கத்தப் பசங்க ஸ்டேட்டஸ்” போட்டுடுவானுங்க; அப்புறம் ஊரு பூரா கேக்கறவனுக்கு பதில் சொல்லி மாளமுடியாது.

ஒரு பேண்ட் சட்டையோட என் வீட்டுக்கு வந்துடு; மீதியை நான் பார்த்துக்கறேன்னு சொல்லிட்டுப் போனவ, அதுக்கப்பறம் ஆஸ்பத்திரி பக்கம் எட்டிப் பார்க்கவேயில்லை. மீனா கூட கேட்டா? ..
“என்னடா உன் ஆளை காணவே காணோம்? எதாவது திருப்பியும் சண்டையா உங்களுக்குள்ளன்னு” கிண்டல் பண்ணிச் சிரிச்சா?

என் வீட்டுக்கு வந்து
“வீட்டு மாப்பிள்ளையா” இருன்னு சொன்னாளே? அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவளுக்கு சோறு போட எனக்கு யோக்யதை இல்லயா? அவ எப்படி என்னை அந்த மாதிரி சொல்லலாம்? சுகன்யா சொன்னதைக் கேட்டதும், சொந்தமா நான் என் கால்லே நின்னு சம்பாதிக்கிறேன்; என்னைப் பாத்து இப்படி சொல்லலாமான்னு, எனக்கு எரிச்சல் வந்தது உண்மைதான்.

அந்த எரிச்சல்லே முழுசா ஒரு நாள் அவளுக்கு நான் போன் பண்ணல. அதுவும் வாஸ்தவம்தான். மறு நாள் பண்ணணும்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தேன். மறுநாள் என்னைப் பாக்கறதுக்கு என் சித்தப்பா, சித்தி, அவங்க பசங்க எல்லாம் வந்திருந்தாங்க. அதனால அவகிட்ட பேச முடியாமப் போச்சு. அதுக்காக சுகன்யாவும் பிடிவாதமா இப்படி எனக்கு போன் பண்ணாமலே இருந்தா எப்படி? அவளா போன் பண்ணுவான்னு இருந்தது தப்பா போச்சே? இந்த தடவை சுகன்யாவும் ரொம்ப வீம்பாத்தான் இருக்கா. ஆஸ்பத்திரியிலேருந்து நான் வீட்டுக்கு வந்தாச்சான்னு கூட ஒரு வார்த்தை கேக்கலையே?

நான் பாண்டிச்சேரிக்கு போனப்ப கூட நான் அவளுக்கு போன் பண்ணல. அப்பவே என் மேல அவளுக்கு ரொம்ப கோபம். ரெண்டு நாள் பொறுத்துப் பாத்துட்டு அவதானே எனக்கு போன் பண்ணா? இப்பவும் அப்படியே ஆகிப் போச்சு. அவ என்னை தினம் தினம் ஆஃபீஸ்லேருந்து ஓடி வந்து பாத்தாளே? நான்
“ஐ லவ் யூ சுகு”ன்னு ஒரு தரம் போன் பண்ணிச் சொல்லியிருக்கலாம்.
“எப்படி இருக்கே சுகுன்னு” ஒரு வார்த்தைக் கேட்டிருக்கலாம். நான் ஒரு பைத்தியக்காரன். ஒரு அஞ்சு நிமிஷம் அவகிட்ட ஆசையா பேசக் கூட என்னால முடியலன்னா, தப்பு என்னுதுதானே? தப்பு என் பக்கம் இருக்கும் போது அவளைச் சொல்லி என்ன பிரயோசனம்.

நான் என்னப் பண்ணுவேன்? ஆஸ்பத்திரியில இருந்தப்ப அம்மாகிட்ட எங்கக் கல்யாணப் பேச்சை பத்து தரம் எடுத்துத்தான் பார்த்தேன். அம்மா பிடிகொடுத்துப் பேசலை. நம்ம கல்யாணத்தைப் பத்தி என்ன முடிவு எடுத்தேன்னு கேட்டா, என்ன பதில் சொல்றதுன்னு யோசனைப் பண்ணிக்கிட்டே இருந்துட்டேன்.

அப்பா கூட கேட்டார்.
“செல்வா, எங்கடா சுகன்யாவை காணோம்?”
“அவ ஆஸ்பத்திரிக்கு கட்டின அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுக்கணும்டா; இல்லன்னா அவங்க வீட்டுல நம்பளைப் பத்தி தப்பா நினைச்சுக்கப் போறாங்கன்னு சொன்னாரு”.

செல்வாவின் மனது பலவித எண்ணங்களால் தடுமாறிக்கொண்டிருந்தது. சட்டென அவன் மண்டையில் பொறி தட்டியது. சுகன்யாவோட ஃப்ரெண்ட் வித்யாவுக்கு போன் பண்ணா என்ன? வித்யா சுகன்யா ரூம்லதானே உக்காந்து இருக்கா. அவளுக்கு எங்க காதல் விஷயமெல்லாம் நல்லாத் தெரியும்.

“வித்யா மேடம், நான் செல்வா பேசறேன்?

“ஆ ஹாங் … செல்வா!… எப்படியிருக்கே செல்வா! … இப்ப உன் உடம்பு பரவாயில்லயா? ஹாஸ்பெட்டலேருந்து வீட்டுக்கு வந்திட்டியா?

“அயாம் ஒ.கே. … மேடம் … நான் வீட்டுக்கு வந்துட்டேன். சாரி உங்களை நான் உங்க பர்சனல் மொபைல்ல டிஸ்டர்ப் பண்றேன். சுகன்யா பக்கத்துல இருக்காளா? கொஞ்சம் கூப்பிடுங்களேன்.

“என்ன செல்வா இது? என்ன வெச்சு காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலேயே நீ?

“வித்யா மேடம், உங்க கிட்ட நான் காமெடி பண்ணுவேனா? எனக்கு சுகன்யாகிட்ட கொஞ்சம் அவசரமா பேசணும். அவ செல்லுல திரும்ப திரும்ப அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியான்னு மெசேஜ் வருது. அதனாலத்தான் நான் உங்களைத் தொந்தரவு பண்றேன்.”

3 Comments

  1. Kallyanam eapoo seekram sollunga romba boor adikuthu

  2. மொக்கை

  3. Cont.. mannichudunga ram story

Comments are closed.