கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 17 11

“மீனா! எனக்கு இப்படியெல்லாம் ஒரு பிரமோஷன் தேவையே இல்லடா கண்ணு! என் புரமோஷன் வரும் போது அதுவா தன்னால வரட்டும். இந்த குமாரசுவாமியும் ஆஃபீசுல ஒழுங்கா வேலை செய்யறவன். இங்கேருந்து போனானே அவனை மாதிரி தப்புத் தண்டா பண்ற ஆள் இல்லே.”

“குமாரசுவாமி, இந்த வாரக்கடைசியில தன் குடும்பத்தோட காஞ்சிபுரம், மஹாபலிபுரம்ன்னு, தன் சொந்த கார்ல போய் வந்திருக்கார். இதுக்கு முன்ன இருந்தவன்ல்லாம், ஆஃபீஸ் காரையும் டிரைவரையும் லீவு நாள்ல்ல தன் சொந்த வீட்டு வேலைக்கு யூஸ் பண்ணுவானுங்க. இல்லன்னா ப்ரைவேட் வண்டியை எடுத்துக்கிட்டு போய் சுத்திட்டு வந்து பில்லை என் தலையில கட்டி பாஸ் பண்ணுன்னு என் உயிரை எடுப்பாணுங்க.”

“இவர் அந்த மாதிரி பிக்கல் பிடுங்கல் வேலையெல்லாம் எனக்கு குடுக்கறது இல்லே; ஆஃபீஸ் வேலை ஆஃபீஸ்க்குள்ள … நம்ம பர்சனல் ரிலேஷன்ஷிப் வெளியில அப்படின்னு ஒரு வரைமுறையோட எங்கிட்ட பழகறார். இந்த ஆள் இங்கே மேனேஜரா வந்ததுலேருந்து நான் கொஞ்சம் நிம்மதியா வேலை செய்றேன். எனக்கு இதுவே போதும்.”

“ஏம்பா … உங்களுக்கு புரமோஷன் வேணாம்; ஒத்துக்கறேன்; உங்க மேனேஜரை, அதான் உங்க சம்பந்தி, உங்க கம்பெனியில எனக்கு ஒரு வேலை வாங்கிக் குடுக்க மாட்டாரா?” அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.

“சும்மா இரேண்டி சித்த நேரம் …” மல்லிகா அவளை அடக்குவதிலேயே குறியாக இருந்தாள்.

“என்னங்க … அவரு பொண்ணு போட்டோ எதாவது காட்டினாரா?” மல்லிகா தன் கணவனை வினவினாள்.

“நீ ஒருத்தி … நீ உன் பொண்ணை குறை சொல்றே … அப்புறம் நீ ஏன் ஏடாகூடமா பேசறே? உன் புள்ளையும், அந்த பொண்ணு சுகன்யாவும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிக்கணும்னு முடிவா இருக்கப்ப, இது எதுக்குடி புதுக் குழப்பம். ரெண்டாவது எனக்கும் அந்த சுகன்யாவை பிடிச்சிருக்கு. அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வந்தா, நிச்சயம் நம்ம வீடு கலகலப்பா சந்தோஷமா இருக்கும்ன்னு நான் நினைக்கிறேன்.”

“நான் அப்பவே அவருகிட்ட விஷயத்தை உடைச்சு சொல்லியிருப்பேன்; ஆனா ஆஸ்பத்திரியில எதுக்கு நம்ம வீட்டுக்கதையை அவருகிட்ட ஆரம்பிப்பானேன்னு சும்மாயிருந்தேன். இந்த ரெண்டு நாள் லீவு முடிஞ்சதும் … ஆஃபீசுக்குப் போனதும், அவரு தனியா இருக்கும் போது, நீங்க உங்க பொண்ணுக்கு வேற எடம் பாருங்கன்னு, அவருகிட்ட உண்மையை சொல்லிடலாம்ன்னு இருக்கேன்.

“அப்பா ரொம்பத் தேங்க்ஸ்ப்பா …” செல்வா தன் தந்தையின் கையைப் பிடித்துக்கொண்டான்.

“எனக்கும் உனக்கும் நடுவுல தேங்க்ஸ்ல்லாம் என்னடா? அந்த பொண்ணோட நீ பொறுப்பா குடும்பம் பண்ணிணா அதுவே எனக்குப் போதும்.” அவர் தன் மகனின் தலையை பாசத்துடன் வருடினார்.
செல்வா, அரை மணி நேரமாக சுகன்யாவிடம் பேசுவதற்காக செல்லில் முயன்று கொண்டிருந்தான். தன் தாய், தங்கள் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்த விஷயத்தை அவளிடம் சொல்ல வேண்டும் என அவன் துடித்துக்கொண்டிருந்தான். ஆனால் அவளுடன் அவனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவளை தொடர்பு கொள்ள முயன்ற ஒவ்வொரு முறையும்
“அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியா” என்ற செய்தி அவனுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது.

இன்னைக்கு திங்கள் கிழமை. வெள்ளிக்கிழமையே சுகன்யாவோட அம்மா ஊருக்குத் திரும்பி போயிருக்கலாம். அப்ப இன்னைக்கு சுகன்யா ஆஃபீசுலதானே இருக்கணும். அவளை ஏன் காண்டாக்ட் பண்ண முடியலே? ஆஃபீஸ் லேண்ட் லைன்ல பண்ணலாம். ஆனா அந்த சனியன் புடிச்ச சாவித்திரிதான் முதல்ல போனை எடுப்பா. அதுக்கப்புறம் அவ கேள்விக்கு நம்பளால பதில் சொல்லமுடியாது.

நம்ம ஆஃபீஸ் ஃப்ரெண்ட்ஸ்ல எவனுக்காவது போன் பண்ணி சுகன்யாவை கூப்பிடச் சொல்லலாம். எனக்கு திரும்பவும் சென்னைக்கு போஸ்டிங் ஆயிடுச்சின்னு தெரிஞ்சதுலேருந்து
“பார்ட்டி குடு … பார்ட்டி குடுன்னு” ஒரே காண்டா இருக்காணுங்க. குடிகாரப்பசங்க; உன் ஆள் கூட நீ பேசறதுக்கு நாங்க என்னடா நடுவுல மாமாவான்னு கிண்டல் பண்ணிச் சிரிப்பானுங்க. எல்லாத்துக்கும் மேல அவனுங்க மூலமா சுகன்யாவை கூப்பிட்டா, நம்ப வீட்டு சிங்காரி நம்ப மேலேயே எகிறி குதிப்பா. சுகன்யா என்ன மூடுல இருப்பான்னு தெரியாது. அவனுங்க எதிரிலேயே என் மேல எரிஞ்சு விழுந்தாலும் விழுவா.

3 Comments

  1. Kallyanam eapoo seekram sollunga romba boor adikuthu

  2. மொக்கை

  3. Cont.. mannichudunga ram story

Comments are closed.