கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 17 8

“புதுசா வந்தவர்தாம்மா … நம்ம வீட்டுல டின்னருக்கு வந்திருந்தாரே – அவர் தான். ரெண்டு நாள் முன்னாடி குமாரசுவாமி இவனை ஆஸ்பத்திரிக்கு பார்க்க வந்திருந்தார் இல்லயா?”

“ஆமாம் …அப்ப நானும்தானே உங்க கூட இருந்தேன்.” மல்லிகாவின் முகத்தில் வியப்பு படர்ந்தது.

“பிரிஞ்சிருக்கற தன் குடும்பத்தோட மீண்டும் சேரணுங்கற ஒரே காரணத்தாலத்தான் அவர், டெல்லி பிராஞ்லேருந்து தமிழ்நாட்டுக்கு மாறுதல் வாங்கிட்டு வந்திருக்கார். செல்வாவை ஆஸ்பத்திரியில நலம் விசாரிக்க வந்த அன்னைக்குத்தான் தன் மனைவியையும், மகளையும் சந்திச்சுட்டு வந்தவர், என் கிட்ட ரொம்ப சந்தோஷமா பேசிக்கிட்டு இருந்தார்.

“ம்ம்ம் …அப்புறம்” மல்லிகா ஊம் கொட்டினாள்.

“நடராஜன் … உங்க குடும்பத்துல இருக்கற எல்லோரையும் நான் பார்த்துட்டேன். உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். புதுசா நான் யார்கிட்டவும் போய் விசாரிக்க வேணாம். உங்க மனைவியையும் சந்திச்சாச்சு. வாரி வாரி சாப்பாட்டை முகம் பார்த்து, இலையில அள்ளிப் போடறவங்க; உங்கப் பையன் செல்வாவை எனக்கு பிடிச்சிருக்கு. நீங்க விரும்பினால் என் பெண்ணை உங்க பையனுக்கு பார்க்கலாம்ன்னு சொன்னார். நான் இதை அவர்கிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்லை. நீங்க நிதானமா யோசனைப் பண்ணி சொல்லுங்கன்னார்.”

“அப்பா … நீங்க என்ன சொன்னீங்கப்பா …” செல்வா பரபரப்புடன் வினவினான்.

“நீ ஏற்கனவே ஒருத்தியைப் பிடிச்சி வெச்சிருக்கப்ப நான் என்னடா சொல்றது?”

“அது இருக்கட்டும் … நீங்க என்னதான் சொன்னீங்கப்பா…” மீனா விஷயத்தை முழுதுமாகத் தெரிந்து கொள்ள துடித்தாள்.

“என் மேனேஜர்; நல்ல மனுஷன்; ரொம்ப ஸ்டிரிக்ட் ஆனவன்; நேர்மையா வேலை செய்யறவன். அந்த ஆள் கிட்ட நான் எந்த விஷயத்துலயும் விளையாட விரும்பலே; இப்ப நம்ம வீட்டுல இருக்கிற பிரச்சனையை சொல்ல விரும்பினேன். ஆனா அதுக்காக மூஞ்சியில அடிச்ச மாதிரி உடனே மறுத்து சொல்ல முடியுமா? ஒரு ரெண்டு நாள் டயம் குடுங்க; வீட்டுல சொல்றேன்; அப்படீன்னேன்; கூடவே என் பையன் ஒரு பொண்ணை விருப்பப்படறான்னு தெரியுது; அந்த விஷயத்தை என்ன ஏதுன்னு விசாரிக்கணும்ன்னு நான் நினைச்சிக்கிட்டு இருக்கும் போது, என் பிள்ளை அடிபட்டு இங்க வந்து படுத்துட்டான்னேன்.”

மல்லிகா
“ம்ம்ம்ம்” என்றாள்.

“அவசரம் ஒண்ணுமில்லே; உங்க பையன் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமா உங்க பையன் மனசுல என்ன இருக்குன்னு விசாரிங்க, நிதானமா வீட்டுல வெச்சு கேளுங்க; கூடவே என் ப்ரப்போசலையும் மனசுல வெச்சுக்குங்கன்னு சொன்னார்.” நடராஜன் தன் தலையை சொறிந்து கொண்டார்.

“டேய் செல்வா, நீ இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கடா; அப்பாவுக்கு அடுத்த புரமோஷன் சீக்கிரமா கிடைச்சுடும்;” மீனா சிரித்தாள்.

3 Comments

Add a Comment
  1. Kallyanam eapoo seekram sollunga romba boor adikuthu

  2. மொக்கை

  3. Cont.. mannichudunga ram story

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *