கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 17 11

“என் அம்மா .. உங்கப்பா போட்டோவை காமிச்சி இந்தப் பையனைப் உனக்கு பாத்து இருக்கோம்; பாத்துக்கடின்னு சொன்னாங்க; அவ்வளவுதான்; என் விருப்பத்தைப் பத்தி அவங்க கேக்கவேயில்ல. நானும் என் அம்மா அப்பா பாத்து செய்தா சரியா இருக்குங்கற நம்பிக்கையில சரின்னு சொன்னேன். நானும் ஒரு டிகிரி ஹோல்டர்தான். ஆனா என் பொண்ணு கொஞ்ச நேரத்துக்கு முன்னே எனக்கு குடுத்த லெக்சர் மாதிரி நான் என் அம்மாக்கிட்ட எப்பவும் பேசினது இல்லே. அவங்க எது சொன்னாலும் அது சரின்னு ஒத்துக்கிட்டேன். இன்னைக்கு வரைக்கும் இந்த வீட்டுல நான் சந்தோஷமாத்தான் இருக்கேன். என் பொண்ணும், என் பையனும் அப்படியில்லையேன்னு நினைக்கும் போது எனக்கு கொஞ்சம் கஷ்டமாயிருக்கு.”

“அம்மா … நான் பேசினதை, உனக்கு நான் லெக்சர் குடுத்தேன்னு தப்பா எடுத்துக்காதேம்மா … இந்த வீட்டுல என் அம்மாகிட்ட என் மனசுல இருக்கறதை சொல்ல எனக்கு உரிமையில்லையா? நீயே எங்கிட்ட இது தப்புன்னு நினைச்சு வருத்தப்பட்டா? … இல்ல …கோபப்பட்டா? என் மனசுல இருக்கறதை நான் யாருகிட்ட போய் சொல்லுவேம்மா? ஸ்டில் … நான் பேசினதை நீ தப்புன்னு நெனைச்சா. ஐயாம் சாரிம்மா … உன் மனசை புண்படுத்தணுங்கறது என் நோக்கம் இல்லம்மா.” மீனா மல்லிகாவை நோக்கி சிரிக்க முயற்சி செய்து தோற்றாள்.

“சே.. சே.. மீனா உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்லடி கண்ணு … நான் இன்னும் என் உலகத்துலேயேதான் இருக்கேன். அதுதான் தப்பு. என் கல்யாணத்துக்கு அப்புறம், இந்த முப்பது வருஷ வாழ்க்கையில, இந்த சமூகத்துல வந்திருக்கற மாற்றங்களுக்கு ஏத்த மாதிரி என்னை மாத்திக்கலையேன்னு, நான் என் மேலத்தான் கோபப்பட்டுக்கிறேன்.” மல்லிகா தன் மூக்கை இலேசாக உறிஞ்சினாள். சற்று நேரம் அந்த ஹாலில் இறுக்கமான மவுனம் நிலவியது. அந்த அமைதியை கலைத்துக்கொண்டு, மீண்டும் மல்லிகாவே பேச ஆரம்பித்தாள்.

“என்னங்க … சுகன்யாவோட மாமா … ரகுராமன் தானே அவர் பேரு … அவர்கிட்ட பேசி மேல் கொண்டு என்ன ஏதுன்னு விசாரிங்க. எப்ப இவங்க கல்யாணத்தை வெச்சுக்கலாம்ன்னு அவங்க சவுகரியத்தைக் கேளுங்க. அப்படியே இந்த ஏரியாவிலேயே ஒரு வீடு வாடகைக்கு பாருங்க. கல்யாணம் முடிஞ்ச உடனே இவங்களை அந்த வீட்டுல தனிக்குடித்தனம் வெச்சிடலாம். என் புள்ள அந்த பொண்ணுகூட சந்தோஷமா இருந்தா அதுவே எனக்குப் போதும்.”

“அம்மா … நான் எதுக்கு இப்ப தனியா போகணும்? என்னை எதுக்கு வீட்டை விட்டு வெளியில போகச் சொல்றே? உன்னைவிட்டுட்டு நான் எங்கேயும் போக மாட்டேன். கல்யாணத்துக்கு அப்புறமும் நான் இங்கத்தான் இருப்பேன். முடிஞ்சா என்னை கழுத்தைப் புடிச்சி வெளியில தள்ளு.” செல்வா அவள் மடியிலிருந்து விருட்டென எழுந்து கோபத்துடன் கூவினான்.

“செல்வா நீ உன் முடிவை சொல்லிட்டே! நான் உன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன். உன் இஷ்டப்படி அவளை நீ கல்யாணம் பண்ணிக்கோ. இதுக்கு மேல உன் இஷ்டம்.” மல்லிகா தீர்மானமாக பேசிவிட்டு எழுந்தாள்.

“அம்மா, என்ன ஆனாலும் சரி … நான் உங்களையெல்லாம் விட்டுட்டு வெளியில போய் குடும்பம் பண்ண மாட்டேன்” அவன் உடல் பதறி, முகம் சிவக்கத் தொடங்கியது.

“டேய் செல்வா! … இவன் ஒருத்தன் … அடங்குடா … என் பொண்டாட்டி எங்கிட்ட எதையோ சொன்னா … அவ சொன்னதை செய்ய வேண்டியவன் நான். நடுவுல நீ ஏண்டா சும்மா தொணத் தொணன்னு பேசி அவளைக் கடுப்பேத்தறே? நடராஜன் குறுக்கில் புகுந்து செல்வாவை சும்மா இருக்குமாறு தன் கண்களால் சைகை செய்தார்.

“மல்லிகா, எல்லோரும் தங்கள் பிள்ளைகள் சந்தோஷமா இருக்கணும்ன்னுதான் நினைக்கறாங்க. செல்வாவுக்கு சுகன்யாவை திருமணம் பண்ணிக்கறதுலதான் மகிழ்ச்சின்னா, நடக்கறதெல்லாம நல்லதுக்குன்னு நினைச்சு, ஆண்டவன் மேல பாரத்தைப் போட்டுட்டு மேற்கொண்டு ஆகவேண்டியதைப் பார்ப்போம்.”

3 Comments

  1. Kallyanam eapoo seekram sollunga romba boor adikuthu

  2. மொக்கை

  3. Cont.. mannichudunga ram story

Comments are closed.