கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 12 6

“அப்பா … நீங்க மனசால ரொம்ப அடிபட்டு வந்திருக்கீங்கப்பா … உங்களுக்கும் அம்மாவோட துணை நிச்சயமா வேணும்பா…” சுகன்யாவின் குரல் தழுதழுத்தது.
“இப்ப நீ சொல்லும்மா … என் சுந்தரி நல்லாயிருக்காளா?” குமார சுவாமி உண்மையான கரிசனத்துடன் கேட்டார்.
“நல்லாயிருக்காங்கப்பா .. கொஞ்ச நாளாவே உங்களைப் பார்க்கணுங்கற ஆசை அம்மா மனசுல இருந்துகிட்டு இருக்கு. ஆனா அதை வெளியே சொல்லாம மனசுக்குள்ளேயே வெச்சு புழுங்கறாங்க. அதுதான் ஏன்னு தெரியலை”
“எல்லாம் என்னால வந்ததுதாம்மா … எல்லாத்துக்கும் மேல மனுஷங்களுக்கு இருக்கற ஈகோ இருக்கே அது தான் அவங்களோட முதல் எதிரி. உன் அம்மாவுக்கும் ஈகோ இருக்கறது சகஜம்தானே? குமாரசுவாமி தப்பு பண்ணான். அதனால அவன் தான் திரும்பி எங்கிட்ட வரணும்ன்னு உன் அம்மா நினைக்கிறா; அவ நினைக்கறதுலேயும் தப்பு இல்லே!” அவர் குரலில் வருத்தம் தொனித்தது.
“அப்பா இப்படியெல்லாம் பேசாதீங்கப்பா … அம்மா அப்படியெல்லாம் நினைக்கலப்பா…”
“ஒரு குடும்பத்துல இருக்கற ஒரு தனி மனிதனின் தவறான நடத்தை, அந்த குடும்பத்துல இருக்கற மத்த உறுப்பினர்களின் வாழ்க்கையை எப்படியெல்லாம் பாதிக்கும்ங்கறதுக்கு நான் ஒரு நல்ல உதாரணம். இது அப்ப எனக்கு புரியல. அன்னைக்கு குடிக்கறது என் சுதந்திரம்ன்னு நெனச்சேன்; நான் குடிக்கறதுல என் மனைவி ஏன் தலையிடணும்ன்னு யோசிச்சேன். என்னுடைய சுதந்திரம்ன்னு நான் நெனைச்சது, என் மனைவி, மகளோட வாழ்க்கையை கணிசமான அளவுல பாதிச்சு இருக்குன்னு அப்புறமா புரிஞ்சுது. இதுக்காக நான் ரொம்ப வருத்தப்படறேன். ஆனா இப்ப வருத்தப்பட்டு என்னப் பண்றது?
“பரவாயில்லேப்பா … நடந்தது நடந்து போச்சு … உங்க தவறை நீங்க உணர்ந்து திரும்பி வந்துட்டீங்க … நீங்க எப்பப்பா வீட்டுக்கு வரப் போறீங்க?”
“நீ என்னை சுலபமா ஏத்துக்கிட்டே … ஆனா உன் அம்மா … சாரிடா செல்லம் … என் மனைவியோட மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியலையே?”
“அப்பா, நேத்து ராத்திரி, தூங்கிக்கிட்டு இருந்த நான், நடுவுல திடீர்ன்னு விழிச்சு எழுந்து பார்க்கிறேன், அம்மா கொட்டற மழையில நனைஞ்சுகிட்டு நின்னாங்க; ராத்திரி ரெண்டு மணி; அவங்க உடம்பு நடுங்கிக்கிட்டு இருக்கு; உள்ளே வான்னு இழுத்துக்கிட்டு வந்து காஃபி போட்டுக்குடுத்தேன். தலையை துவட்டி விட்டேன். புதுசா ஒரு நைட்டியை கொடுத்து போடச் சொன்னேன். ஏம்மா இப்படி பண்றேன்னு கேட்டேன்; என் உடம்புலயும், மனசுலயும் இருக்கற புழுக்கம் குறையட்டும் – அப்படின்னாங்க.”

“அம்மா, உனக்கு உன் புருஷன் ஞாபகம் வந்திடுச்சி; என் கிட்ட பொய் சொல்லாதேன்னு கத்தினேன். அம்மா ஒண்ணும் பேசலை”
“சுகா … உங்க அம்மாவுக்கு மழைன்னா ரொம்ப பிரியம்ம்மா … எப்ப மழை பேஞ்சாலும் … மழையில கொஞ்ச நேரம் போய் நனைஞ்சுக்கிட்டு நிப்பா … இது அவளுடைய வழக்கம்மா … ஆனா ராத்திரி ரெண்டு மணிக்கு இப்படி பண்ணான்னா … அவ மனசு ரொம்ப நொந்து போயிருக்கான்னு நினைக்கிறேன்.”
“அதுதாம்ப நிஜம் … அம்மா, என்னை மாமாவோட துணையோட, படிக்க வெச்சு, பரிட்சை எழுத வெச்சு, ஒரு வேலையை வாங்கற அளவுக்கு என்னை எல்லாவிதத்துலயும் மோட்டிவேட் பண்ணி, ஒரு நல்ல பொண்ணா ஆக்கிட்டாங்க; நானும் அவங்களை விட்டுட்டு இப்ப தனியா வந்துட்டேன்; இப்ப அவங்க தனிமை அவங்களை கொல்லுதுப்பா. அதுக்கும் மேல அம்மா மெனோபாஸ் ஸ்டேஜ்க்கு வந்துட்டாங்கப்பா; இப்ப உங்க அருகாமை அவங்களுக்கு அவசியமா தேவைப்பா. நான் சொல்றதை புரிஞ்சுக்கங்கப்பா …
“ சுகன்யா விசிக்க ஆரம்பித்தாள்.
“அழாதடா கண்ணு … ம்ம்ம்ம் … எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்மா; உன்னை நிஜமாவே நல்லபடியா, ஒரு நல்ல இதயமுள்ள பொண்ணா வளர்த்திருக்காம்மா என் சுந்தரி …”
“நாலு நாள் முன்ன உங்களைப் பத்திக் கேட்டேன் … எங்கப்பா எங்க இருக்காரு? உனக்கு எதாவது தெரியுமான்னு? அதுலேருந்து அம்மாவுக்கு தினமும் ராத்திரில உங்களை நினைச்சுக்கிட்டு அழுவறதுதான் வேலையா போச்சு. நேத்து கூட உன் அப்பாவை நீ பாக்கறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னாங்க. உன் அப்பாவை பாக்கறதுக்கு உனக்கு முழு உரிமையிருக்குன்னு சொன்னாங்க;”
“அப்பவே நான் உங்களை உடனடியா நீங்க எங்க இருக்கீங்கன்னு கண்டுபிடிச்சு அவங்க முன்னாடி கொண்டு போய் நிறுத்தனும்ன்னு முடிவு எடுத்தேன்; ஆனா கதையில நடக்கற மாதிரி … சினிமா, சீரியல்ல வர்ற மாதிரி … நீங்க காலையில எனக்குப் போன் பன்றீங்க … காலையிலேருந்து நடக்கறது எல்லாத்தையும் என்னால நம்பவே முடியலைப்பா .. ரொம்ப விசித்திரமா இது இருக்கு. ஒருத்தர் வாழ்க்கையில இப்படியெல்லாம் நடக்குமான்னு இருக்கு.”
“நேரம் வந்தா எல்லாம் தன்னால கூடி வருண்டா செல்லம். இதுக்கு மேல என்னால உன்னை திருப்தி படுத்தற ஒரு பதிலை என்னால சொல்ல முடியாது.”
“சரிப்பா … இப்ப நாம வீட்டுக்கு போகலாம் வாங்க; எனக்கு உங்களோட என் அம்மா திரும்பவும் சந்தோஷமா இருக்கறதைப் பாக்கணும்.”
“என் ஓய்ஃப் என்னை வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிடுவாளான்னு எனக்குத் தெரியலையேம்ம்மா”
“அப்பா … ஏம்பா பெரியவங்க நீங்கல்லாம் இப்படி பிடிவாதமா இருக்கீங்க; எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு; நீங்க ஏன் குடிக்கறீங்கன்னுதானே அம்மா கேட்டாங்க; அதுக்கு நீங்க அவங்களை அடிச்சீங்க; உதைச்சீங்க; உங்களுக்காக தன்னோட அப்பா, அம்மா, எல்லா சொந்தங்களையும் விட்டுட்டு உங்க கூட வந்தவங்க, திரும்பி அவங்க கிட்டவும் போக முடியாமா, முழுசா ரெண்டு வருஷம் உங்க கிட்ட கஷ்டப்பட்டாங்க; அவங்க சம்பாதிச்ச பணத்தையும் நீங்க குடிக்கறதுக்கு கேட்டப்ப, பதில் சொல்லாம குடுத்தாங்க; ஆனா கடைசியில நீங்க என்னையும் அடிச்சதனால, அதைப் பொறுத்துக்க முடியாம உங்களை திருப்பி அடிச்சிட்டாங்க; என் மாமா உங்களை வீட்டை விட்டு வெரட்டினார். எங்கம்மாவுக்கு இருந்த ஒரே ஆதரவு அவர்தானேப்பா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *