கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 12 11

“அப்பா … இந்த பேச்செல்லாம் இப்ப எதுக்குப்பா? நீங்கதான் வந்துட்டீங்களே! எனக்கு அது போதும்.” சுகன்யா, சந்தோஷத்தால் மெலிதாக நடுங்கிக்கொண்டிருந்த குமாரின் கைகளை தன் கையில் எடுத்துக்கொண்டாள். அவருடன் நெருங்கி உட்க்கார்ந்து கொண்டாள். அதே சந்தன வாசனை தன் தகப்பனின் தேகத்திலிருந்து வந்ததை உணர்ந்தவள், தன் மனம் விகசிக்க ஆசையுடன் அவர் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். குமார் தன் அருகில் அமர்ந்திருந்த, அழகாக வளர்ந்து, அப்படியே அச்சாக தன் இளமைக் கால மனைவியைப் போலிருந்த சுகன்யாவைப் பார்க்க பார்க்க, அவருள் சந்தோஷம் திகட்டியது. இவ சுந்தரி எனக்கு கொடுத்த அன்புப் பரிசு. உயிருள்ள பரிசு. எங்க ரெண்டு பேரோட ரத்தத்தாலேயும் சதையாலும் ஆனவ இவ. இவளைப் பாத்ததும், இவ என்னைத் தொட்டதும் … எனக்குள்ள இத்தனை நாளா இருந்த என் மன அழுத்தம், இனம் தெரியாத என் எரிச்சல், தவிப்பு எல்லாமே சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிடுச்சே? இந்த உலகமே அழகா தெரியுதே! ஆண்டவா, இந்த கணம் இப்படியே என்னைக்கும் நீடிச்சு இருக்கணும். குமாரசுவாமி, ஏதேதோ பேச விரும்பினார். மனதிலிருந்த எண்ணங்கள் சொற்களாக மாறி உதட்டில் வராமல், அவர் பேச முடியாமல், அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தார். சுகன்யா அவர் மன நிலைமையை புரிந்து கொண்டவள் போல்
“அப்பா … பிளீஸ் பீ ரிலாக்ஸ்ட் … நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்பா … நீங்க சொல்ல நினைக்கறதை உங்க விரல்கள் எனக்கு சொல்லிடுச்சிப்பா … அவள் அவரைப் பார்த்து புன்னகைத்தாள்.
“தேங்க்ஸ்ம்ம்மா” குமாரசுவாமி ஒரு நீண்டப் பெருமூச்செறிந்தார். அவருடைய சிறு குடலை பெருங்குடல் தின்று கொண்டிருந்தது. அவருக்கு அசுரப் பசியெடுத்தது. காலையிருந்தே அவர் ஒன்றும் சாப்பிடவில்லை.
“வாங்கப்பா வெளியிலே போகலாம் … பக்கத்துல ஒரு நல்ல ஹோட்டல் இருக்கு, காலாற நடந்து போய் அங்க நிம்மதியா சாப்பிடலாம்.” அவளே தன் தந்தைக்கும் சேர்த்து முடிவெடுத்தாள். குமாரசுவாமி சுகன்யாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் மனம் மகிழ்ச்சியில் இன்னும் துள்ளிக் கொண்டிருந்தது. உடலில் ரத்தம் வேகமாக ஓடுவது புரிந்தது. சின்ன சின்ன விஷயங்கள்ல்ல எனக்காக, என்னை கேக்காமா, சட்டுன்னு முடிவெடுக்க என் வாழ்க்கையில ஒருத்தர் இல்லையேன்னு ஏங்கிக்கிட்டு இருந்தேன்; இனிமே எதுக்கும் நான் கவலைப் படப் போறது இல்ல. என் பொண்ணு ரொம்ப புத்திசாலி; என் தொடலில் இருந்தே, நீங்க சொல்ல வந்தது என்னன்னு எனக்கு புரிஞ்சிப் போச்சுங்கறா; இதுக்கு மேல எனக்கு வேற என்ன வேணும்? என் மனைவி சுந்தரி இப்ப என்னப் பண்ணிகிட்டிருப்பா? அவ டீச்சரா இருக்கற ஸ்கூல்ல இப்ப மதிய உணவு வேளையா இருக்கலாம்; இப்ப அவகிட்ட பேசலாமா? சுகன்யாவைத்தான் கேக்கணும் … சுகா என்கிற சுகன்யா அவர் உள்ளத்தில் முழுதுமாக நிறைந்துவிட்டாள். நேற்றிரவு பலத்த மழை பெய்திருந்ததால், சென்னையில் இன்று வெயில் மிதமாக காய்ந்து கொண்டிருந்தது. குளிர்ந்த காற்று கடலிலிருந்து கரையை நோக்கி மெலிதாக வீசிக்கொண்டிருக்க, வானில் கரு மேகங்கள் மெல்ல மெல்ல மேற்கு நோக்கி ஊர்வலம் போய்க்கொண்டிருக்க, தன் ஆஃபீசை விட்டு, தன் தந்தையுடன் வெளியில் வந்த சுகன்யாவுக்கு, தூரத்தில் நீல ரிப்பனாகத் தெரிந்த கடலும், மெரினா கடற்கரை சாலையும், அதை சுற்றியிருந்த இடங்களும் மிக மிக ரம்மியமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. சாலை ஓரத்தில், பாதசாரிகள் நடப்பதற்கு இடமில்லாமல், நடைபாதையின் மேல், தள்ளுவண்டியுடன் நின்று பழம் விற்பவன், தண்ணீர் பாக்கெட் வாங்க சொல்லி பின்னாடியே ஓடி வரும் சிறுவன், சோப்பு, சீப்பு, சீட்டுக்கட்டு என சில்லறை சாமான்களை கூவி கூவி தலையில் கட்டுபவர்கள் யாரும் இன்று சுகன்யாவிற்கு எரிச்சலை மூட்டவில்லை; மாறாக அவர்களும், எதிரில் வருபவர்களும், ரோடில் தேவையில்லாமல் ஹாரன் சத்தத்தை எழுப்பிக் கொண்டு வேகமாக பைக்கில் செல்பவர்களும், அவள் கண்ணுக்கு மிகவும் அழகாக காட்சி அளித்தார்கள். பாவம்! ஏழைங்க; வாழ வழியில்லாமத்தானே இப்படி சாலையிலே குடும்பம் நடத்தறாங்க; என்னப் பண்ணுவாங்க அவங்க; அவங்களும் நம்பளை மாதிரி வாழணும் இல்லையா? அவர்கள் பால் அவளுக்கு அன்று எல்லையில்லா இரக்கம் பொங்கி வழிந்தது. மனதில் பெருக்கெடுக்கும் அன்புடன் அவர்களைப் பார்த்தாள். சுகன்யா, குமாரசுவாமியின் கையில் தன் விரல்களை கோர்த்தபடி, நெருக்கமாக அவரை இடித்துக்கொண்டு, அவருடைய உடலின் வலது புறம் தன் தோள் உரச, ஓரக்கண்ணால் பெருமிதத்துடன் அவரைப் பார்த்தவாறு நடந்தாள். எதிரில் வந்தவர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என வர்ஜா வர்ஜமில்லாமல் அனைவரையும் நிறுத்தி

“இவர்தான் என் அப்பா; நல்லாப் பாத்துக்குங்க” என உரக்க கூவ வேண்டும் போலிருந்தது அவளுக்கு. அப்பா ஹேண்ட்சமா, எவ்வளவு மேன்லியா இருக்கார்; அப்பா கை இரும்பாட்டம் எவ்வளவு உறுதியா இருக்கு; அம்பது வயசுக்கு தொப்பையே இல்லாம அப்பா தன் பாடியை நல்லா மெய்ண்டெய்ன் பண்ணிக்கிட்டிருக்கார். சுகன்யா, அன்றைய தினத்தில், பிரிந்து போன தன் தந்தைதை மீண்டும் பார்த்த அந்த மகத்தான நாளில் தான் மிக மிக மகிழ்ச்சியாக இருப்பதாக நினைத்தாள். தன் மகள் வெகு இயல்பாக எந்த தயக்கமும் காட்டாமல் தன்னுடன் பேசியதும், ஆசையுடன் தன் கையை பிடித்தபடி நடக்க தொடங்கியதும், தன் வாழ்க்கையில் இத்தனை நாளாக தான் இழந்திருந்த அனைத்தையும் மீண்டும் திரும்ப பெற்று விட்டதாக நினைத்து பூரிப்படைந்த குமாரசுவாமி, மனதுக்குள்ளாகவே கடவுளுக்கு மீண்டும் மீண்டும் நன்றி சொல்லிக் கொண்டிருந்தார். ஆண்டவனே! எனக்கு இது போதும்; என் மகளோட நான் திரும்பவும் வந்து சேர்ந்துட்டேன்; என் மகளாலே என் வாழ்க்கைக்கு இந்த நொடியிலேருந்து ஒரு புது அர்த்தம் கிடைக்குங்கற நம்பிக்கை எனக்கு வந்துடுத்து. எந்த குறையும் இல்லாம இப்படியே இந்த உறவு கடைசி வரைக்கும் நிலைக்கணும். என் மனைவி சுந்தரியும், பழசெல்லாம் மறந்துட்டு என்னை முழு மனசா ஏத்துக்கிட்டா, நான் உண்மையிலேயே ஒரு அதிர்ஷடசாலிதான். எனக்கு இந்த உலகத்துல இதுக்கு மேல வேற எதுவும் வேணாம். அவர் மனம் உரக்க அரற்றிக் கொண்டிருந்தது. தன் மகளின் கையை அவர் இறுகப் பற்றிக்கொண்டு நடந்தார். தன் தந்தை தன் கையை இறுகப்பற்றியதும், அவர் முகத்தைப் பார்த்த சுகன்யா,