கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 12 11

“என்னப்பா … நான் உங்களை விட்டுட்டு எங்கேயும் ஓடிப் போயிட மாட்டேம்பா; பயப்படாதீங்க;
“ அவள் அவரை தன் உதடுகளில் புன்முறுவலுடன் பார்த்தாள்.
“போதுண்டா செல்லம் … உங்களையெல்லாம் விட்டுட்டு, நான் ஊர் ஊரா அலைஞ்சு திரிஞ்சதெல்லாம் போதும், நீ எதுக்காக எங்கயாவது ஓடணும்? இன்னொரு தரம் விளையாட்டுக்கு கூட நீ இப்படி பேசாதே.” சுகன்யாவின் முழங்கையுடன் தன் வலது கையை கோர்த்துக் கொண்டார்.
“எந்த காரணத்துக்காவும் நானும் உங்களை திரும்ப இழக்கறதுக்கு தயாரா இல்லைப்பா.”
“சுகா … உன் அம்மா எப்படி இருக்காங்கம்மா?”
“ஏம்பா … நீங்க திரும்ப திரும்ப என் அம்மா … என் அம்மாங்கிறீங்க? ஒரே ஒரு தரம் என் வொய்ஃப் சுந்தரி எப்படி இருக்கான்னு உரிமையோட கேளுங்கப்பா? சுகன்யா தன் குரலில் தாபத்துடன் பேசினாள்.
“சரிம்மா … என் சுந்தரி எப்படிம்மா இருக்கா?”
“அப்பா … உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும் … அந்த பெஞ்சுல கொஞ்ச நேரம் உக்கரலாமா” சுகன்யா நடைபாதையில் ஒரு ஓரமாக நின்றாள்.
“இனிமே உன் விருப்பம் என்னவோ அதுதான் என் விருப்பம் …”
“அப்பா … நீங்க இப்ப இப்படி சொல்லிட்டு … அப்புறம் திண்டாடப் போறீங்க.”
“சுகா, நான் எனக்காக முழுசா வாழ்ந்துட்டேன். அந்த வாழ்க்கையில எனக்கு திருப்தியில்லை. இனிமே உனக்காகவும், என் சுந்தரிக்காவும் நான் வாழ விரும்பறேன். அதுக்காக நான் திண்டாடினாலும் பரவயில்லம்மா.” அவர் குரல் உறுதியாக வந்தது. சாலையோரமிருந்த சிமிட்டி பெஞ்சில், அவள் பக்கத்தில் நெருங்கி உட்க்கார்ந்தவர் அவள் கைகள தன் கையில் எடுத்துக்கொண்டார்.
“அப்பா …
“ சுகன்யா தன் தந்தை பேசட்டும் என அமைதியாக அவர் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
“சுகா … உங்கிட்ட உண்மையை சொல்றேம்மா … அப்ப எனக்கு மன முதிர்ச்சியில்லை. கெட்ட சகவாசம் … போங்கடான்னு விலக்க முடியாத ஒரு தவறான நட்பு வட்டம்; மன உறுதி அதிகமா இல்லாத நேரத்துல நான் குடியால சீரழிஞ்சுப் போயிட்டேன். என் சுந்தரி, நான் உயிருக்கு உயிரா நேசிச்ச என் மனைவி என்னை தொடப்பத்தாலே அடிச்சாளேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். எப்படியிருந்தாலும் அவ ஒரு பொம்பளை. ஒரு பொம்பளை கையால அடி வாங்கினது என் ஆண் ஈகோவை, ரொம்பவே காயப்படுத்திடிச்சி. அதுக்கும் மேல எங்க கல்யாணத்துல, எல்லாரும் எங்களை எதிர்த்தப்ப, என் பக்கம் நின்ன என் மச்சான் ரகு என்னை வெட்ட வந்ததை என்னால நம்பவே முடியலை. உலகமே ஒன்று சேர்ந்து என்னை ஒதுக்கிட்டதா நான் நெனைச்சேன். ஊர்ல இருந்தவங்க என் சொந்தக்காரங்க, என் ஜாதிக்காரங்க, என்னைப் பாத்து சிரிச்சாங்க; இனி இவங்க மூஞ்சிலே என்னைக்கும் நான் முழிக்கறதில்லேன்னு ஒரு வீராப்பையும், வீம்பையும் என் மனசுக்குள்ள வளத்துக்கிட்டேன். அந்த ஊரை விட்டு போகணும்ன்னு முடிவெடுத்தேன். அந்த வீராப்புத்தான் என் குடிப்பழக்கத்துக்கான மருந்தா பின்னாடி வேலை செஞ்சது.
“ரெண்டு வருஷ குடிப்பழக்கம் இந்த அளவுக்கு என்னை சீரழிச்சதை நெனைச்சு உண்மையா நான் வருத்தப்பட்டேன். தனிமையில நடந்ததை யோசனை பண்ணி அழுது இருக்கேன். கல்கத்தாவுல இருந்த ஒரு நண்பன் கிட்ட போனேன். அங்க ஒரு நல்ல வேலையைத் தேடிக்கிட்டேன். உழைப்பு; உழைப்பு; உழைப்பு; அதுல என்னையே மறந்தேன். உண்மையா உழைச்சதனால நிறைய பணம் சம்பாதிச்சேன். பணம் இருந்தது. எங்கிட்ட இளமையும் இருந்தது. பெண்கள் என்னைத் துரத்தவும் செய்தாங்க. இன்னைக்கு சுந்தரி அடிச்சா; நாளைக்கு வேற ஒருத்தி என்னை வேற ஒரு காரணத்துக்காக அடிப்பா; பெண்களை விட்டு விலகிப்போனேன்.”

“சுகா, என் மனைவியை விட்டு பிரிஞ்சிருந்த இத்தனை நாள்லே, வேற எந்த பொம்பளையையும் நான் தொட்டதில்லை; ஷேர் மார்க்கெட்ல விளையாடினேன். நான் வாங்கின ஷேர் எல்லாம் கோபுரத்து உச்சிக்கு போச்சு; என் நேரம் நல்ல நேரம் அப்படீன்னு சொன்னாங்க; பணம் பேங்க்ல துரு பிடிக்க ஆரம்பிச்சுது; பணத்துல எனக்கு ருசியில்லே; அன்னிய பொம்பளை மேல எனக்கு விருப்பமில்லே; குடும்பம்ன்னு சொல்லிக்க யாருமில்லே; பணத்தை வெச்சுக்கிட்டு நான் என்ன பண்றது? சுகா, அந்த வாழ்க்கையில, நான் தனிமையைத்தான் அதிகமா அனுபவிச்சேன். என்னை ஏன்னு கேக்க யாரும் இல்லே. ஆனாலும் எந்த தப்பும் நான் பண்ணல. உங்கம்மா குடுத்த தொடப்ப கட்டை அடி – தப்பு பண்ண எனக்கு துணிச்சல் வரலை.

“தனிமை என்னை அணு அணுவா சித்திரவதை பண்ணுச்சு. கொஞ்ச நாள் முன்னாடி, உன் தாத்தா பாட்டிக்கிட்ட என் கூட வந்து இருங்கன்னேன். நான் சம்பாதிச்ச பணத்தை பத்தி சொன்னேன். அவங்க என்னைப் பாத்து சிரிச்சாங்க; ஏம்பா சிரிக்கறீங்கன்னு எங்கப்பாவைப் பாத்துக் கேட்டேன்; நீ திரும்பி வந்ததுல எங்களுக்கு சந்தோஷம். என் ஜாதிக்காரன் என்னை மதிக்க மாட்டாங்கற எண்ணத்துல, உன் காதல் கல்யாணத்துக்கு நாங்க சம்மதிக்கலை. போலி கவுரவத்துக்காக, கிளி மாதிரி இருந்த அந்த பொண்ணை வேணாம்ன்னு சொன்னோம். அவளை இழுத்துக்கிட்டு போய் தாலி கட்டினியே, அவ கூடவாது ஒழுங்கா குடுத்தனம் பண்ணியா?
“நீ பண்ண கூத்துக்கு அவ உன்னை வீட்டை விட்டு அடிச்சு துரத்தினா? நீ ஊரை விட்டு ஓடினே? நம்ம எனத்தவன் எல்லாம் எங்களைப் பாத்து வழிச்சுக்கிட்டு சிரிச்சான். அவ அப்பன் ஆத்தாளும் உங்க கொடுமையை பாக்க முடியாம போய் சேர்ந்தாங்க; உன் கூட வந்தவ, நீ பெத்த பொண்ணை, நெருப்பா தனியா நின்னு இன்னைக்கும் வளக்கறா. அவளைப் பாக்க பாக்க எங்களுக்கு பெருமையா இருக்கு. மனசுக்கு உண்மையை புரிஞ்சுக்கற பக்குவம் வந்துடுத்து; உடம்புல தெம்பு குறைஞ்சு போச்சு; இன்னைக்கு நம்ப ஜாதிக்காரன் எவனும் நாங்க எப்படி இருக்கோம்ன்னு ஒரு தடவை கூட எங்களைத் திரும்பிப் பாக்கலை.” டேய், நாங்க அவளை கேட்டுப் பாத்துட்டோம். எங்க சொத்தெல்லாம் என் பேத்திக்குத்தான். நீ வந்து எங்க கூட இரும்மான்னு சொல்லிப் பாத்தோம். எங்களைப் பாக்க கூட அவ மறுத்துட்டா. உங்கிட்ட இருக்கற இந்த பணத்தால, எங்க மருமகளையோ, எங்க பேத்தியையோ உன்னால வாங்க முடியாதுன்னு எங்களுக்கு நல்லாத் தெரியும். உன்னால முடிஞ்சா நீ அவங்க ரெண்டு பேரையும் அன்பா பேசி அவகிட்ட மன்னிப்பு கேட்டு, கூப்பிட்டுக்கிட்டு வான்னு என்னைத் துச்சமா பாத்தாங்க. உன் அம்மா என் பெத்தவங்களையே பாக்க மறுத்துட்டான்னதும், சுந்தரியை பார்க்க எனக்குத் தைரியமில்லே. திரும்பிப் போயிட்டேன். கொஞ்ச நாள்ல உன் தாத்தாவும், பாட்டியும் என் கூட வந்துட்டாங்க; உங்கம்மாவுக்கு நான் குடுத்த கஷ்ட்டத்தினால எனக்குள்ள ஏற்பட்ட குற்ற உணர்ச்சியினால இப்பவும் நான் அவளைப் நேரா பாக்கறதுக்கு கொஞ்சம் தயங்கறேம்மா .. இப்ப அவ தன் மூஞ்சை திருப்பிக்கிட்டா, என்னால அதை தாங்க முடியாதும்மா.” குமாரசுவாமியின் கண்கள் கண்ணீரால் பளபளத்துக்கொண்டிருந்தது.