கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 12 11

“அப்பா, அவங்க ரெண்டு பேரும் பண்ணது சரின்னு நான் வாதாடலை. ஆனா நம்ம குடும்பம் உடைஞ்சதுல உங்களுக்கு பங்கு அதிகம்ன்னு நான் ஃபீல் பண்றேன். உங்கக்கிட்ட இருந்த இந்த ஒரு குறையைத் தவிர வேற எந்தக்குறையும் உங்கக்கிட்ட இருந்ததா என்னால சொல்ல முடியாது. நீங்களும் என் அம்மாவுக்காக உங்க அப்பா, அம்மா, உங்க உறவினர்களை விட்டுட்டு வந்தீங்க; அம்மாவையும், என்னையும் எல்லாவிதத்துலயும் சந்தோஷமா வெச்சிகிட்டு இருந்தீங்க. அம்மாவுக்கு என் மாமா துணையிருந்தார். உங்க கூட யாருமே இல்லை. நீங்க தனி ஆளா அலைஞ்சீங்க; அதை நெனைச்சு நான் எத்தனை தரம் தனியா அழுது இருக்கேன் தெரியுமா? ஆனா உங்க குடிப்பழக்கம் உங்களுடைய மத்த நல்ல குணத்தையெல்லாம் குழி தோண்டிப் புதைச்சிடுச்சிப்பா.” சுகன்யா விம்ம ஆரம்பித்தாள்.
“அழாதேடா கண்ணு … ப்ளீஸ் … நீ இப்ப அழறதைப் பாத்தா நான் சுத்தமா உடைஞ்சிடுவேன் … சுகன்யாவின் கண்களை அவர் துடைத்தார். குமாரசுவாமியின் கண்களும் கலங்கி குளமாகியிருந்தது.
“நான் பேசினது உங்க மனசை புண்படுத்தியிருந்தா என்னை மன்னிச்சுடுங்கப்பா …” தன் தகப்பனின் புறங்கையில் மென்மையாக சுகன்யா முத்தமிட்டாள். பின் அவரைப் பார்த்து கலங்கிய கண்களுடன் சிரித்தாள்.
“சரிடா சுகா … நான் உன் கூட வீட்டுக்கு வரேன்.”

“தேங்க்ஸ்ப்பா … கண்டிப்பா என் அம்மா உங்களை உள்ள வாங்கன்னுதான் கூப்பிடுவாங்கப்பா … ஏன் வந்தேன்னு நிச்சயமா கேக்கவே மாட்டாங்க … என் உள்ளுணர்வு இதை சொல்லுதுப்பா; என் உள்ளுணர்வு கண்டிப்பா தப்பா போகாதுப்பா; எனக்காக, உங்க பொண்ணுக்காக; உங்க ஈகோவை விட்டுக் குடுத்துட்டு, நடந்ததையெல்லாம் சுத்தமா மறந்துட்டு, நீங்கதான் அந்த முதல் அடியை எடுத்து வெச்சு வீட்டுக்கு வாங்களேன். நாம எல்லாம் திரும்பவும் ஒண்ணா சந்தோஷமா இருப்போம் .. என் தாத்தா பாட்டியையும் நான் போய் முதல்ல பார்க்கிறேம்பா.” நீளமாக பேசிய சுகன்யா தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். குமாரசுவாமியின் கை தன் மகளின் தலையை வருடிக்கொண்டிருந்தது.